உள்ளடக்கத்துக்குச் செல்

டையோபண்டஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டையோபண்டஸ் (Diophantus) அலெக்ஸாண்ட்ரியா நகரத்தைச் சேர்ந்த கிரேக்க கணித மேதை ஆவார். இவர் இயற்கணிதத்தின் தந்தை என அழைக்கபடுகிறார். இவர் எழுதிய தொடர் புத்தகங்களானா அரித்மேட்டிகாவில் பல அழிந்துவிட்டன. பின்னங்களை எண்களாக ஏற்றுகொண்ட முதல் கிரேக்க கணிதமேதை டையோபண்டஸ் ஆவார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

டையோபண்டஸ் வாழ்கை பற்றி சிறு குறிப்புகளே உள்ளது. அவர் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரத்தை சேர்ந்தவர். இவரது காலம் கி.பி 200 மற்றும் 214 முதல் 284 முதல் 298 இடைப்பட்ட காலமாகும். இவரை பற்றிய பல குறிப்புக்கள் மெட்ரோடோருஸ் என்பவர் உருவாகிய கிரேக்க புதிர் மற்றும் விளையாட்டு செய்யுள் திரட்டின் மூலம் அறியப்படுகிறது.

அரித்மேட்டிகா

[தொகு]

அரித்மேட்டிகா கிரேக்க இயற்கணிதத்தின் மிக முக்கிய நூலாகும். இந்த நூல் பல நிச்சயம் மற்றும் நிச்சயமற்ற சமன்பாடுகளுக்கு எண் தீர்வுகளை வழங்குகிறது.டையோபண்டஸ் எழுதிய 13 நூல்களில் 6 மட்டுமே கிடைக்கப்பெற்றது. 1968 இல் கண்டுபிடிக்க பட்ட 4 அரபு புத்தகங்களும் டையோபண்டஸ் எழுதிய புத்தகங்கள் என நம்பப்படுகிறது.

கணித குறியீடு

[தொகு]

டையோபண்டஸ் பல இயற்கணித குறியீடுகளையும் அடையாளங்களையும் பயன்படுத்தினார். அவருக்கு முன்னர்வந்த பல கணிதவியலர்கள் அனைவரும் சமன்பாடுகளை முழுவதும் எழுதும் பழக்கத்தை கொண்டனர். ஆனால் டையோபண்டஸ் மீண்டும் மீண்டும் பயன்படும் சமன்பாடுகளுக்கு அடையாளங்களை உபயோகபடுத்தினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டையோபண்டஸ்&oldid=2202797" இலிருந்து மீள்விக்கப்பட்டது