டையீல்சு – இரீசு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டையீல்சு – இரீசு வினை (Diels–Reese Reaction) முதன் முதலில் 1934 ஆம் ஆண்டு ஓ. டையீல்சு மற்றும் யே. இரீசு ஆகியோரால் கண்டறியப்பட்டது. இவ்வினை மேலும் வில்லியம் இயரோன் என்பவரால் விரிவு படுத்தப்பட்டது. அடையாளம் காணப்படாத ஒர் இடைநிலை விளைபொருள் அல்லது கூட்டுவிளைபொருள் வழியாக வினை நிகழ்கிறதென இயரோன் முன்மொழிந்தார். கரைப்பானை மாற்றுவதன் மூலமாக உருவாகும் விளைபொருள் மாறுபடுகிறது. அசிட்டிக் அமிலத்தை கரைப்பானாக பயன்படுத்தினால் (அமிலவகை pH) டைபீனைல்பிரசோலோன் உருவாகிறது. சைலீன் கரைப்பானாகப் பயன்படுத்தப்பட்டால் (நடுநிலை pH) இண்டோல் உருவாகிறது. பிரிடின் கரைப்பானாகப் பயன்படுத்தப்பட்டால் (காரவகை pH) கார்போமெத்தாக்சிகுயினோலின் உருவாகிறது, இச்சேர்மத்தை டை ஐதரோகுயினோலைன் சேர்மமாக தரமிறக்க இயலும்.

Diels Reese.png

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டையீல்சு_–_இரீசு_வினை&oldid=2748158" இருந்து மீள்விக்கப்பட்டது