டையடோசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டையடோசைட்டுDiadochite
Diadochit - Lodenitz, Böhmen.jpg
பொலிவியாவின் லோடோனிட்சிலிருந்து கிடைத்த டையடோசைட்டு.
பொதுவானாவை
வகைபாசுபேட்டு கனிமம்
வேதி வாய்பாடுFe2(PO4)(SO4)OH•5H2O

டையடோசைட்டு (Diadochite) என்பது Fe2(PO4)(SO4)OH•5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுபோ-சல்பேட்டு கனிமமாகும். பிற கனிமங்களின் காலநிலையாக்கம் மற்றும் நீரேற்றம் மூலமாக ஓர் இரண்டாம்நிலை கனிமமாக இது உருவாக்கப்படுகிறது. நன்றாக படிகமாக்கப்பட்ட இக்கனிம வடிவங்கள் டெசுடினசைட்டு என பரிந்துரைக்கப்படுகின்றன. அனைத்துலக கனிமவியல் கூட்டமைப்பும் படிக உருவமற்ற கனிமமாக மிகக்குறைந்த அளவில் டையடோசைட்டு கனிமம் படிகமாகிறது என அலுவல்பூர்வமாக அங்கீகரிக்கின்றது [1][2].

பசுமஞ்சள், பழுப்பு நிறங்களில் மேலோடுகளாகவும் முடிச்சுகளாகவும் இக்கனிமம் காணப்படுகிறது. பார்ப்பதற்கு பூக்கோசு ஒன்றின் வடிவத்தைப்போல டையடோசைட்டு தோற்றமளிக்கிறது.

1831 ஆம் ஆண்டு பெல்கியத்தில் இது கண்டறியப்பட்டது. உலகெங்கிலும் பல இடங்களில் டையடோசைட்டு கிடைக்கிறது. கோசான் வகைப் பாறைகள், நிலக்கரி படிவுகள், பாசுபேட்டு மிகுந்த பெக்மாடைட்டு எனப்படும் தீப்பாறைகள், குவானோ குகைப் படிவுகள் போன்ற இடங்களில் இரண்டாம்நிலை கனிமமாக இது உருவாகிறது [3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டையடோசைட்டு&oldid=2628217" இருந்து மீள்விக்கப்பட்டது