டையசிரிடின்கள்
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
டையசிரிடின்
| |||
இனங்காட்டிகள் | |||
ChemSpider | 4236879 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 5059686 | ||
| |||
பண்புகள் | |||
CH4N2 | |||
வாய்ப்பாட்டு எடை | 44.06 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
டையசிரிடின்கள் (Diaziridines) என்பவை ஒரு மூன்று உறுப்பினர் வளையத்தில் இரண்டு நைட்ரசன் அணுக்கள் இடம்பெற்றுள்ள பல்லினவளையச் சேர்மங்களாகும். இவற்றை ஐதரசீன்களின் திரிபாக வகைப்படுத்த இயலும். வளைய திரிபின் காரணமாக நைட்ரசன் அணுக்கள் நிலையான எலக்ட்ரான் அமைப்பைக் கொண்டுள்ளன. இதனால் ஒருபக்க, மறுபக்க மாற்றியன்கள் தோன்றுகின்றன. இ. சிகிமிட்சால் உருவாக்கப்பட்ட தயாரிப்பு முறையில் வழக்கமாக டையசிரிடின்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக ஒரு கார்பனைல் சேர்மம் அமோனியாவுடன் சேர்த்து சூடாக்கப்படுகிறது. அல்லது முதல்நிலை அலிபாட்டிக் அமீன் மற்றும் ஐதராக்சிலமீன்-ஓ-சல்போனிக் அமிலம் போன்ற அமினேற்ற முகவர்களை இலேசான கார நிபந்தனைகளில் வினைபுரியச் செய்து தயாரிக்கப்படுகிறது [1]. இறுதி படிநிலையானது அமினால் மூலகூறிடை வளையமாதல் வினையை அடிப்படையாகக் கொண்டதாகும்.
வினைகள்
[தொகு]- பதிலீடு செய்யப்படாத டையசிரிடின்கள் பெரும்பாலும் நேரிடையாக நிலையான அசிரிடின்களாக ஆக்சிசனேற்றம் செய்யப்படுகின்றன. (I2/NEt3)
- மின்னணு கவரிகளான கீட்டோன்கள் அல்லது ஐசோசயனேட்டுகளுடன் சேர்ந்து வளைய விரிவாக்க வினைகளில் ஈடுபடுகின்றன.
- சில வழிப்பெறுதிகள் நரம்பு மண்டல அளவில் செயல்திறன் மிகுந்துள்ளன.