டையசாகுயினோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டையசாகுயினோன் (Diazaquinone) என்பது ஒரு பல்லினவளைய அரோமாட்டிக் உள்ளகத்தைக் கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இரண்டு =CH− கார்பன் அலகுகள் கார்பனைல் அல்லது கீட்டோன் குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும் இரட்டைப் பிணைப்பால் பிணைக்கப்பட்ட அடுத்தடுத்துள்ள இரண்டு நைட்ரசன் அணுக்கள் இவ்வுள்ளகத்தில் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த கார்பன் மற்றும் நைட்ரசன் அணுக்கள் −(C=O)−N=N−(C=O)− என்ற டையசைல் டையிமைடு அலகை உள்ளடக்கியிருக்கும். [1]

பிரிடினின் குயினோனான 3,6-பிரிடசிண்டையோன், மரகதப் பச்சை, தாலசினின் குயினோனான 1,4-தாலசிண்டையோன் என்ற பச்சை நிற படிகத் திண்மம் போன்றவை மேற்குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ள சில உதாரணங்களாகும். இவ்விரு சேர்மங்களும் அசிட்டோனில் கரைகின்றன, இரண்டும் -77 ° செல்சியசு வெப்பநிலையில் நிலைப்புத்தன்மையுடன் உள்ளன. [1]

1962 ஆம் ஆண்டு தாமசு யே கியலி டையசாகுயினோன் என்ற பெயரை முன்மொழிந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Thomas J. Kealy (1962): "The Chemistry of Diazaquinones: 3,6-Pyridazinedione and 1,4-Phthalazinedione". Journal of the American Chemical Society, volume 84, issue 6, pages 966–973. எஆசு:10.1021/ja00865a018
"https://ta.wikipedia.org/w/index.php?title=டையசாகுயினோன்&oldid=3000472" இலிருந்து மீள்விக்கப்பட்டது