டைபோரேன்(4)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டைபோரேன்(4)
Diborane4.png
இனங்காட்டிகள்
18099-45-1 Yes check.svgY
ChEBI CHEBI:38288 Yes check.svgY
Gmelin Reference
24760
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 29529
பண்புகள்
B
2
H
4
வாய்ப்பாட்டு எடை 25.65 கி•மோல்–1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

டைபோரேன்(4) (Diborane(4)) என்பது B2H4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் சடுதியில் தோன்றி மறைகின்ற ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அணுநிலை புளோரினைப் பயன்படுத்தி டைபோரேன்(6) சேர்மத்திலிருந்து இரண்டு ஐதரசன் அணுக்களை இழுத்தெடுத்து டைபோரேன்(4) தயாரிக்கப்படுகிறது. ஒளி அயனியாக்க நிறை நிறமாலையியல் செயல்முறையின் மூலம் இச்சேர்மத்தை கண்டறியலாம்[1].

இரண்டு ஐதரசன் அணுக்கள் இரண்டு போரான் அணுக்களுடன் மும்-மைய இரு எலக்ட்ரான் பிணைப்பு மூலம் பாலம் அமைக்கப்பட்ட கட்டமைப்பு இருக்குமென கணக்கீடுகள் கணிக்கின்றன. கூடுதலாக இரண்டு போரான் அணுக்களுக்கிடையில் 2- மையம், 2-எலக்ட்ரான் பிணைப்பும் ஒரு விளிம்புநிலை ஐதரசன் அணு ஒவ்வொரு போரான் அணுவுடனும் பிணைக்கப்பட்டிருக்கும்[2].

நிலையான டைபோரேன்(4) வழிப்பெறுதிகள் பல இருப்பதாக அறியப்படுகிறது[3][4][5].

மேற்கோள்கள்[தொகு]

 1. Ruščic, B.; Schwarz, M.; Berkowitz, J. (1989). "Molecular structure and thermal stability of B
  2
  H
  4
  and B
  2
  H+
  4
  species". The Journal of Chemical Physics (AIP Publishing) 91 (8): 4576–4581. doi:10.1063/1.456745.
   
 2. Alkorta, Ibon; Soteras, Ignacio; Elguero, José; Del Beneb, Janet E. (23 June 2011). "The boron–boron single bond in diborane(4) as a non-classical electron donor for hydrogen bonding". Physical Chemistry Chemical Physics 13 (31): 14026–14032. doi:10.1039/C1CP20560A. https://digital.csic.es/bitstream/10261/64351/1/accesoRestringido.pdf. 
 3. Xie, Xiaochen; Haddow, Mairi F.; Mansell, Stephen M.; Norman, Nicholas C.; Russell, Christopher A. (2012). "Diborane(4) compounds with bidentate diamino groups". Dalton Transactions 41 (7): 2140–7. doi:10.1039/C2DT11936F. பப்மெட்:22187045. 
 4. Wagner, Arne; Kaifer, Elisabeth; Himmel, Hans-Jörg (2012). "Diborane(4)–metal bonding: Between hydrogen bridges and frustrated oxidative addition". Chemical Communications 48 (43): 5277–9. doi:10.1039/C2CC31671D. பப்மெட்:22526934. 
 5. Horn, Julian; Widera, Anna; Litters, Sebastian; Kaifer, Elisabeth; Himmel, Hans-Jörg (2018). "The proton affinity, HOMO energy and ionization energy of electron-rich sp3–sp3-hybridized diborane(4) compounds with bridging guanidinate substituents can be varied by substitution". Dalton Trans. 47 (6): 2009-2017. doi:10.1039/C7DT04433J. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைபோரேன்(4)&oldid=2637475" இருந்து மீள்விக்கப்பட்டது