டைபொட்டாசியம் சைக்ளோ ஆக்டாடெட்ராயீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைபொட்டாசியம் சைக்ளோ ஆக்டாடெட்ராயீனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
dipotassium cycloocatetraenediide
இனங்காட்டிகள்
59391-85-4
ChemSpider 57575621
InChI
  • InChI=1S/C8H8.2K/c1-2-4-6-8-7-5-3-1;;/h1-8H;;/q-2;2*+1/b2-1-,5-3-,8-6-;;
    Key: JEUFATMWOKTCQC-YGFQESQOSA-N
  • InChI=1/C8H8.2K/c1-2-4-6-8-7-5-3-1;;/h1-8H;;/q-2;2*+1/b2-1-,5-3-,8-6-;;
    Key: JEUFATMWOKTCQC-YGFQESQOBL
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [K+].c1=c[cH-]c=c[cH-]c=c1.[K+]
பண்புகள்
C8H8K2
தோற்றம் வெளிரிய பழுப்பு திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டைபொட்டாசியம் சைக்ளோ ஆக்டாடெட்ராயீனைடு (Dipotassium cyclooctatetraenide) என்பது K2C8H8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சில சந்தர்ப்பங்களில் இதை K2COT என்ற சுருக்கப் பெயரால் அழைப்பார்கள். பழுப்பு நிற திண்மமான இச்சேர்மம் யுரேனோசீன் (U(C8H8)2) போன்ற சைக்ளோ ஆக்டாடெட்ராயீனைடு அணைவுச் சேர்மங்கள் தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாகக் கருதப்படுகிறது. வளைய பதிலீடுகள், வேறுபட்ட கார உலோகங்கள் மற்றும் பல்வேறு அணைவுகளாகும் சேர்மங்களாக K2C8H8 சேர்மத்தின் ஒத்த வரிசைச் சேர்மங்கள் பல அறியப்படுகின்றன.

தயாரிப்பு[தொகு]

சைக்ளோ ஆக்டாடெட்ராயீனுடன் பொட்டாசியம் உலோகத்தைச் சேர்த்து வினைப்படுத்தினால் டைபொட்டாசியம் சைக்ளோ ஆக்டாடெட்ராயீனைடு உருவாகிறது.

2 K + C8H8 → K2C8H8

இவ்வினை நிகழ பாலியீனின் இரண்டு எலக்ட்ரான் ஒடுக்கம் இன்றியமையாததாகிறது. மேலும் இச்சேர்மத்தின் நிறமும் நிறமற்ற நிலையிலிருந்து பழுப்பு நிறமாக மாறுகிறது [1].

கட்டமைப்பு[தொகு]

பொட்டாசியம் நேர்மின் அயனிகளுடன் டிக்ளைம் அல்லது பிசு(2-மெத்தாக்சியெத்தில்) ஈதர் வழிப்பெறுதிகள் அணைவாகியுள்ள K2(டிக்ளைம்)C8H8 சேர்மத்தின் கட்டமைப்பு எக்சு கதிர் படிகவியல் ஆய்வின் படி வரையறுக்கப்படுகிறது. C8H8 அலகு சமதள வடிவம் கொண்டதாகவும் கார்பன் – கார்பன் பிணைப்புகளுக்கு இடையிலுள்ள சராசரி தொலைவு 1.40 ஆங்சுட்ராம் எனவும் அறியப்படுகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. A. L Wayda (1990). "Cyclooctatetraene Lanthanide Complexes. Lu(C8H8Cl(thf) and Lu(C8H8)[o-C6H4CH2N(CH3)2(thf)". Inorganic Syntheses 27: 150. doi:10.1002/9780470132586.ch28. 
  2. J. H. Noordik, T. E. M. van den Hark, J. J. Mooij and A. A. K. Klaassen (1974). "Dipotassium(I) cyclooctatetraenide-1-methoxy-2-(2-methoxyethoxy)ethane". Acta Crystallogr B 30 (30): 833–835. doi:10.1107/S0567740874003840.