டைன் ஆற்றங்கரை நியூகாசில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டைன் ஆற்றங்கரை நியூ காசில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
டைன் ஆற்றங்கரை நியூகாசில் நகரம்
நியூகாசில்
பெருநகர் பரோ & நகரம்
நியூகாசில் துறைமுகப் பகுதி மற்றும் கேட்சுயெட்டிலிருந்து டைன் ஆறு
நியூகாசில் துறைமுகப் பகுதி மற்றும் கேட்சுயெட்டிலிருந்து டைன் ஆறு
Official logo of டைன் ஆற்றங்கரை நியூகாசில் நகரம்
நகர மன்றத்தின் மரபுவழி மேலங்கி
அடைபெயர்(கள்): தி டூன்
குறிக்கோளுரை: "Fortiter Defendit Triumphans"
"வீரமான தற்காப்பால் வெற்றி"
இங்கிலாந்தினுள் நியூகாசிலின் அமைவிடம்
இங்கிலாந்தினுள் நியூகாசிலின் அமைவிடம்
நாடுஐக்கிய இராச்சியம்
உள்ளங்க நாடுஇங்கிலாந்து
மண்டலம்வடகிழக்கு இங்கிலாந்து
சிறப்பு கௌன்டிடைனும் வியரும்
நிர்வாகத் தலைமையகம்நியூகாசில் நகர மையம்
நிறுவப்பட்டது2வது நூற்றாண்டு
நகர அரசியலமைப்புஹென்றி II
கௌன்டி அமைப்பு1400
நகரத் தகுதி1882
அரசு
 • வகைபெருநகர் பரோ, நகரம்
 • ஆட்சி அமைப்புநியூகாசில் நகர மன்றம்
 • மேயர்ஜாக்கி சீசெங்கர்[1]
பரப்பளவு
 • பெருநகர் பரோ & நகரம்113
மக்கள்தொகை
 • பெருநகர் பரோ & நகரம்279
 • பெருநகர்879
நேர வலயம்கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே+0)
அஞ்சல்குறியீடுNE
தொலைபேசி குறியீடு0191
ISO 3166-2GB-NET
ONS code00CJ (ONS)
E08000021 (GSS)
OS grid referenceNZ249645
NUTS 3UKC22
Demonymஜியோர்டி], நோவோகாசுத்திரியர்
இணையதளம்www.newcastle.gov.uk

டைன் ஆற்றங்கரை நியூகாசில் (Newcastle upon Tyne, கேட்கi/njˈkɑːsəl/, நியூகாசில் அப்பான் டைன், சுருக்கமாக நியூகாசில்) வடகிழக்கு இங்கிலாந்தின் டைனும் வியரும் கௌன்ட்டியில் அமைந்துள்ள நகரமும் பெருநகர் பரோவும் ஆகும். வரலாற்றின்படி1974ஆம் ஆண்டுவரை இது நார்தம்பர்லாந்து கௌன்ட்டியின் அங்கமாக இருந்தது. டைன் ஆற்றின் வடகரையில் வடகடலிலிருந்து 8.5 mi (13.7 km) தொலைவில் உள்ளது.[2] முன்பு உரோமைப் பேரரசின் குடியிருப்பாக இருந்த பொன்சு ஏலியசு என்றவிடத்திலேயே இந்நகரம் வளர்ந்துள்ளது.[3][4] இங்கு இங்கிலாந்தைக் கையகப்படுத்திய நோர்மாந்திய பிரபு வில்லியத்தின் (பின்னர் இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்) மகன் குர்தோசு இங்கு கட்டிய புதிய கோட்டையை ஒட்டி இந்நகரத்தின் பெயர் அமைந்தது. கம்பளி வணிகத்தில் முதன்மையான மையமாக விளங்கிய இந்நகரம் பின்னாளில் பெரும் சுரங்கத் தொழில் நகரமாக மாறியது. இங்குள்ள துறைமுகம் 16வது நூற்றாண்டில் கட்டப்பட்டது;அதனுடன் கப்பல் கட்டும் தொழிற்கூடங்களும் டைன் ஆற்றின் போக்கோடு கட்டமைக்கப்பட்டன. உலகின் பெரிய கப்பல் கட்டும் மற்றும் கப்பல் சரிபார்ப்புத் தொழில் மையமாக விளங்கியது. தற்போது இவற்றில் பல முடங்கி மூடப்பட்டு விட்டன. இன்றைய காலத்திற்கேற்ப நிறுவன தலைமையகங்கள், கல்வி மற்றும் எண்ணிம தொழினுட்ப மையம், சில்லறை வணிகம், சுற்றுலா மற்றும் பண்பாட்டு மையங்கள் என புதிய சேவைத்துறை தொழில்கள் தழைக்கின்றன.

நியூகாசில் பிரவுன் ஏல் எனப்படும் மதுவகையும் டைன் பாலமும் இந்நகரை அடையாளப்படுத்துகின்றன. இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் நியூகாசில் யுனைடெட் காற்பந்துக் கழகமும் இந்நகரை அடையாளப்படுத்துகிறது. உலகின் மிகவும் புகழ்பெற்ற அரை மராத்தன், கிரேட் நார்த் இரன் 1981இல் தொடங்கப்பட்டதிலிருந்து இங்குதான் நடத்தப்படுகிறது.[5]

இப்பகுதி மக்கள் ஜியோர்டி என்ற விளிப்பெயரால் அறியப்படுகின்றனர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. http://www.newcastle.gov.uk/your-council/lord-mayor
  2. Grid reference Finder measurement tools
  3. Roman Britain Pons Aelius – 'The Aelian Bridge'
  4. GoogleBooks George Patrick Welch, Britannia, the Roman Conquest and Occupation of Britain, Wesleyan University Press, 1963, pp 165, 167, 277
  5. "Great North Run". BBC Sport. 2007-09-28. http://news.bbc.co.uk/sport1/hi/athletics/4986470.stm. பார்த்த நாள்: 2007-10-01. 

வெளி இணைப்புகள்[தொகு]