டைதயோபென்சாயிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைதயோபென்சாயிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பென்சீன்கார்போடைதையோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
121-68-6
ChemSpider 60487
EC number 204-491-4
InChI
  • InChI=1S/C7H6S2/c8-7(9)6-4-2-1-3-5-6/h1-5H,(H,8,9)
    Key: ZGRWZUDBZZBJQB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 67141
SMILES
  • C1=CC=C(C=C1)C(=S)S
பண்புகள்
C7H6S2
வாய்ப்பாட்டு எடை 154.25 g·mol−1
தோற்றம் மஞ்சள்-பழுப்பு திண்மம்
காடித்தன்மை எண் (pKa) 1.92[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டைதயோபென்சாயிக் அமிலம் (Dithiobenzoic acid) என்பது C6H5CS2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமக் கந்தகச் சேர்மமான இது பென்சாயிக் அமிலத்தின் செயலொத்த ஒரு டைதயோகார்பாக்சிலிக் அமிலமாகும். ஆனால் நிறமும் அமிலத்தன்மையும் மிகுந்த ஒரு அமிலமாகும்.

தயாரிப்பு[தொகு]

பென்சால் குளோரைடுடன் கந்தகமேற்றம்[2] அல்லது கிரிக்கனார்டு வினைப்பொருளான பீனைல்மக்னீசியம்புரோமைடுடன் கார்பன் டைசல்பைடு சேர்த்து தொடர்ந்து அமிலமாக்கல் வினைக்கு உட்படுத்துதல் போன்ற செயல்முறைகளில் டைதயோபென்சாயிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது[3].

வினைகள்[தொகு]

பென்சாயிக் அமிலத்தைக் காட்டிலும் டைதயோபென்சாயிக் அமிலம் 100 மடங்கு அதிக அமிலத்தன்மையைக் கொண்டதாகும். இதனுடைய இணைகாரம் டைதயோபென்சோயேட்டு ஆகும். இவ்விணைகாரம் S-ஆல்க்கைலேற்ற வினைக்கு உட்பட்டு டைதயோகார்பாக்சிலேட்டு எசுத்தர்களைக் கொடுக்கின்றன[2]. இதேபோல டைதயோபென்சோயேட்டு மென் உலோக உப்புகளுடன் வினைபுரிந்து Fe(S2CC6H5)3 மற்றும் Ni(S2CC6H5)2 போன்ற அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கின்றன.

டைதயோபென்சாயிக் அமிலத்தைக் குளோரினேற்றம் செய்தால் தயோ அசைல் குளோரைடு (C6H5C(S)Cl) உருவாகிறது.

[Ni(S2CPh)2]3 முப்படியின் கட்டமைப்பு [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. M. R. Crampton (1974). "Acidity and hydrogen-bonding". in Saul Patai. The Chemistry of the Thiol Group. Chichester: John Wiley & Sons Ltd. பக். 402. 
  2. 2.0 2.1 Frederick Kurzer, Alexander Lawson (1962). "Thiobenzoylthioglycolic Acid". Org. Synth. 42: 100. doi:10.15227/orgsyn.042.0100. 
  3. J. Houben (1906). "Ueber Carbithiosäuren. I. Arylcarbithiosäuren". Berichte der deutschen chemischen Gesellschaft 39 (3): 3219–3233. doi:10.1002/cber.190603903140. 
  4. Bonamico, M.; Dessy, G.; Fares, V.; Scaramuzza, L. (1975). "Structural Studies of Metal Complexes with Sulphur-Containing Bidentate Ligands. Part I. Crystal and Molecular Structures of Trimeric Bis-(dithiobenzoato)-nickel(II) and -palladium(II)". Journal of the Chemical Society, Dalton Transactions (21): 2250–2255. doi:10.1039/DT9750002250. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைதயோபென்சாயிக்_அமிலம்&oldid=2623267" இலிருந்து மீள்விக்கப்பட்டது