டேவிட் கொரேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டேவிட் கொரேஷ்
David koresh.jpg
பிறப்புவெர்னான் வேய்ன் ஹொவெல்
ஆகத்து 17, 1959(1959-08-17)
ஹூஸ்டன், டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்கா
இறப்புஏப்ரல் 19, 1993(1993-04-19) (அகவை 33)
மவுண்ட் கார்மல் மையம், மெக்லின்னன் கவுண்டி, டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா
இறப்பிற்கான
காரணம்
துப்பாக்கிச் சுடல்.
Body discoveredகார்மல் மையம், டெக்சாஸ்
கல்லறைமெமெரியல் பூங்கா கல்லறை
32°21′23″N 95°22′03″W / 32.35640°N 95.36750°W / 32.35640; -95.36750 (நினைவுப்பூங்கா கல்லறை)
இருப்பிடம்எல்க், டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா.[1]
பணிடேவிட் கிறித்தவ மதப் பிரிவின் தலைவர், 1988–1993
அறியப்படுவது
  • 1983இல் தன்னை இறைவனின் இறுதி தீர்க்கதரிசி என்றும், இறைமைந்தன் என்றும் தன்னைதானே அறிவித்துக் கொண்டவர்.
  • 1988-193 தாவூது பிரிவின் மதத்தலைவராக இருந்தவர்.
  • 51 நாள் கடும் போராட்டத்திற்குப் பின் அமெரிக்க காவல்துறையினரால் 28-02-1993இல் இவரின் கணக்கு முடிக்கப்பட்டது.
பெற்றோர்
  • பாபி வாய்ன் ஹோவல்
  • போனி சூ கிளார்க்
வாழ்க்கைத்
துணை
ரேச்செல் ஜோன்ஸ் மற்றும் 18 மனைவிகள்
பிள்ளைகள்
  • சைரஸ் ஹொவெல்
  • ஸ்டார் ஹொவெல்
  • பாபி லென் ஹோவெல்

மற்றும் 12 குழந்தைகள்

மவுண்ட் கார்மல் மையத்தில் அமைந்த டேவிட் கொமரேஷின் தலைமையக கட்டிடம் எரியும் காட்சி, 19 ஏப்பிரல், 1993

டேவிட் கொரேஷ் (David Koresh, இயற்பெயர்: வெர்னான் வேய்னெ ஹொவெல், 17 ஆகத்து 1959 – 19 ஏப்பிரல் 1993) ஐக்கிய அமெரிக்கா, டெக்சாஸ் மாநிலம்,வகோ நகர்புறத்தில் அமைந்த மவுண்ட் கார்மல் மையத்தில் செயல்பட்ட கிறித்தவ மதப் பிரிவுகளில் ஒன்றான தாவீது கிறித்தவ மதப்பிரிவின் தலைவர். தன்னைத்தானே இறைவனின் இறுதி தீர்க்கதரிசி (prophet) என்றும் இறைமகன் (Son of God) என்றும் அறிவித்துக் கொண்டவர்.[2] [3].

பிப்ரவரி 1993இல் டேவிட் கொரேஷின் குற்ற நடவடிக்கைகளையும், போலியான மத இயக்கத்தை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் காவல் துறை (FBI), டெக்சாஸ் மாநிலத்தின், மெக்லென்னன் கவுண்டியின், வகோ (Waco) நகர்புறத்தில் அமைந்த டேவிட் கொரேஷின் இயக்ககத்தின் தலைமையகக் கட்டிடத்தைச் சுற்றி வளைத்து, டேவிட் கொரேஷ் உட்பட அனைவரையும் சரண் அடையக் கட்டளையிட்டனர். [4]

காவல் துறையின் ஆணையை ஏற்க மறுத்த டேவிட் கொரேஷும் அவனது கூட்டாளிகளும், 51 நாட்கள் நடந்த கடுமையான போராட்டத்திற்குப் பின், தங்கள் இயக்க கட்டிடத்திற்கு தாங்களே தீ வைத்துக்கொண்டனர். இதனால் காவல் துறையினரின் பிடியில் சிக்காமல் 17 வயதிற்குட்பட்ட 23 குழந்தைகளும் உட்பட மொத்தம் 80 நபர்கள் தீயில் கருகி இறந்தனர். டேவிட் கொரேஷ் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தார்.[5][6]

டேவிட் கொரேஷ் மற்றும் அவனின் கூட்டாளிகளின் மரணம் குறித்து, ஐக்கிய அமெரிக்காவில் இன்றளவும் சர்ச்சைக்குரிய விசயமாகவே பேசப்படுகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Elk, Texas". Handbook of Texas – Texas State Historical Association. பார்த்த நாள் June 30, 2012.
  2. http://www.biography.com/people/david-koresh-9368416#synopsis David Koresh Biography
  3. http://edition.cnn.com/2011/US/04/14/waco.koresh/ Who was David Koresh?
  4. Valentine, Carol A. (2001), David Koresh and The Cuckoo's Egg – pt. 3
  5. "Davidians and Branch Davidians". Handbook of Texas – Texas State Historical Association. பார்த்த நாள் November 25, 2012.
  6. https://www.youtube.com/watch?v=s3CGyH5ftdE Day 51 -- **The True Story Of Waco**காணொளி காட்சி
  7. http://www.crimelibrary.com/notorious_murders/not_guilty/koresh/1.html David Koresh: Millennial Violence

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_கொரேஷ்&oldid=2707680" இருந்து மீள்விக்கப்பட்டது