டேவிட் ஆபிசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் ஆபிசர்
David Officer
துறைகரிம வேதியியல், பொருளறிவியல்
கல்வி கற்ற இடங்கள்வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகம்
ஆய்வேடுகரிம மூலக்கூறுகள் ஆராய்ச்சி: வளைய புரோப்பா பீனாந்தரீன்கள் (1981)
ஆய்வு நெறியாளர்பிரையன் ஆல்டன்

டேவிட் லெசுலி ஆபிசர் (David Leslie Officer) நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு கரிம வேதியியலாளர் மற்றும் பொருளறிவியல் விஞ்ஞானியாவார். பேராசிரியர் பிரையன் ஆல்டனின் வழிகாட்டுதலின் பேரில் 1982 ஆம் ஆண்டு வெலிங்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டங்களை ஆபிசர் முடித்தார். ஆத்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமேற்படிப்பும், ஐரோப்பாவின் பழைமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றும் செருமனியின் மிகப்பெரிய பல்கலைக்கழகமுமான கோலோன் பல்கலைக்கழகத்தில் அலெக்சாண்டர் வான் அம்போல்டு ஆராய்ச்சி உறுப்பினராகவும் ஆய்வுகளை முடித்துக் கொண்டு ஆபிசர் நியூசிலாந்திற்கு திரும்பினார். நியூசிலாந்தின் மாசே பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக 1986 ஆம் ஆண்டு கற்பித்தல் பணிக்காக சேர்ந்து படிப்படியாக முழுமையாகப் பேராசிரியர் பதவிக்கு உயர்ந்தார். [1] 2005 ஆம் ஆண்டு ஆபிசர் நியூசிலாந்து வேதியியல் நிறுவனத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். [2] பின்னர் மேம்பட்ட பொருளறிவியல் மற்றும் நானோ தொழில் நுட்பத்திற்கான இதே நாட்டிலுள்ள மேக்தியார்மிட் நிறுவனத்திற்கு மாறினார். ஆபிசர் தற்போது ஆத்திரேலியாவின் வல்லன்கொங்கு பல்கலைக்கழகத்தில் நுண்ணறிவு பலபடி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வேதியியல் துறையில் ஒரு பேராசிரியராக பட்டியலிடப்பட்டுள்ளார். [3][4]

ஆராய்ச்சி ஆர்வங்கள்[தொகு]

•ஒளிமின்னழுத்த மற்றும் மூலக்கூறு சாதனங்களுக்கான போர்பிரைன்கள் எனப்படும் வெண்சிவப்பு பாறை வகைகளின் தொகுப்பு மற்றும் பயன்பாடு.

•சாய-உணர்திறன் கொண்ட சூரிய மின்கலங்களின் வளர்ச்சி.

•ஒளிமின்னழுத்த செல்கள், மின்கலன்கள் முனைப்பிகள் மற்றும் உணரிகளுக்கான செயல்பாட்டு பல்தயோபீன்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாடு.

கார்பன் நானோகுழாய்களின் செயல்பாடு

மேற்கோள்கள்[தொகு]

  1. Information sourced from Biography in Chemical Reviews[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Officer wins Award". Archived from the original on 3 October 2006. பார்க்கப்பட்ட நாள் 17 August 2007.
  3. "Researcher Details at the MacDiarmid Institute". Archived from the original on 28 September 2007. பார்க்கப்பட்ட நாள் 17 August 2007.
  4. "IPRI Staff Details". Archived from the original on 2007-09-01. பார்க்கப்பட்ட நாள் 2020-05-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ஆபிசர்&oldid=3556772" இலிருந்து மீள்விக்கப்பட்டது