டேவிடு பிளவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டேவிடு பிளவர் (David Flower) ஒரு பிரித்தானிய வானியலாளரும் வேதி இயற்பியலாளரும் தர்காம் பல்கலைக்கழக இயற்பியல் துறை தகைமைப் பேரசிரியரும் ஆவார். இவர் அரசு வானியல் கழக மாதவாரி அறிக்கைகள் (MNRAS) எனும் இதழின் முதன்மைப் பதிப்பாசிரியரும் ஆவார்.[1][2] இவர் அரசு வானியல் கழக மாதவாரி அறிக்கைகள் (MNRAS) எனும் இதழில் பலகாலம் உறுப்பினரக இருந்த இவர் அதன் முதன்மைப் பதிப்பாசிரியரும் ஆனார். இவர் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் அரசு க்லைக் கழக ஆய்வுறுப்பினரும் ஆவர்.

இவரது ஆராய்ச்சி உடுக்கண ஊடக இயற்பியலிலும் வேதியியலிலும் குறிப்பாக, அணு, மூலக்கூற்று மொத்தல் இயற்பியலிலும் வான்வேதியியலிலும் அமைந்தது. இவர் "உடுக்கண ஊடகத்தில் மூலக்கூற்று மொத்தல்கள்" எனும் நூலை இயற்றினார். இது ஐக்கிய இராச்சியம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் 2007 இல் வெளியிடப்பட்டது. சமகால அறிஞர் மீள்பார்வைக்குட்படும் இதழ்களில் இவர் வெளியிட்ட பல அய்வுத்தால்களின் நீண்ட பட்டியலுக்கு உரியவர் ஆவார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Keith Smith (2 July 2012). "New MNRAS Editor-in-Chief". RAS News & Press. Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 2012-08-07.
  2. "New editor for ‘Monthly Notices’". Astronmy & Geophysics 53 (5): 5.39–5.39. 1 October 2012. doi:10.1111/j.1468-4004.2012.53539_5.x. 
  3. "Staff Profile". Durham University. 14 February 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-08-07.
  4. "Publication details of authored book". Durham University. 14 February 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-08-07. An abstract and a link are provided

[[[பகுப்பு:பிரித்தானிய வானியற்பியலாளர்கள்]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிடு_பிளவர்&oldid=3489287" இலிருந்து மீள்விக்கப்பட்டது