டேமியன் டி ஒலிவேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டேமியன் டி'ஒலிவேரா (Damian Basil D'Oliveira, 19 அக்டோபர் 1960 – 29 சூன் 2014) தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் வூஸ்டர்சயர் கவுன்டி துடுப்பாட்டக் கழகத்திற்காக 1982 முதல் 1995 வரை முதல்தரப் போட்டிகளில் கலந்து கொண்டார். 9,000 இற்கும் அதிகமான முதல்-தர ஓட்டங்களை இவர் பெற்றுள்ளார். ஒரு இன்னிங்சில் அதிகூடியதாக 237 ஓட்டங்கள் எடுத்தார்.[1][2]

இவரது தந்தை பசில், இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார். இவரது மாமா ஐவன், இவரது மகன் பிரெட் ஆகியோரும் முதல்தர துடுப்பாட்ட வீரர்கள் ஆவர்.

மறைவு[தொகு]

இரண்டரை ஆண்டுகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட டேமியன் 2014 சூன் 29 இல் இறந்தார்.[1] இவருக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Former Worcestershire batsman dies". பிபிசி (29 சூன் 2014). பார்த்த நாள் 29 சூன் 2014.
  2. 2.0 2.1 "Worcestershire announce academy director Damian D’Oliveira has died". தி கார்டியன் (29 சூன் 2014). பார்த்த நாள் 29 சூன் 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேமியன்_டி_ஒலிவேரா&oldid=1689965" இருந்து மீள்விக்கப்பட்டது