டேனி இசுடீவன்சு
2015 இல் டேனி இசுடீவன்சு | |
| தனிநபர் தகவல் | |
|---|---|
| பிறப்பு | 26 மே 1988 பேர்பீல்டு, நியூ சவுத் வேல்சு |
| உயரம் | 1.83 மீ |
| விளையாட்டு | |
| நாடு | |
| விளையாட்டு | தடகள விளையாட்டு |
| நிகழ்வு(கள்) | வட்டெறிதல் |
| கழகம் | வெஸ்ட்ஃபீல்ட்ஸ் தடகள சங்கம்[1] |
| தொழில்முறையானது | 2003 |
| ஓய்வுற்றது | 2021 |
பதக்கத் தகவல்கள் | |
டேனி இசுடீவன்சு (டேனி சாமுவேல்ஸ், பிறப்பு: 26 மே 1988)[2] ஆத்திரேலியாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டெறிதல் வீரர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டில் இந்த நிகழ்வில் இளைய பெண் உலக வெற்றியாளரானார்.[3] இவர் தற்போதைய தேசிய மற்றும் ஓசியானிய சாதனையை வைத்திருக்கிறார்.
2005 ஆம் ஆண்டு தடகளத்தில் உலக இளைஞர்களுக்கான போட்டியில் வட்டெறிதலில் தங்கம் மற்றும் குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கங்களை வென்ற பிறகு, மெல்போர்னில் நடந்த 2006 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளில் தனது பதினேழாவது வயதில் வட்டெறிதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். 2007 கோடைகால பல்கலைக்கழகப் போட்டியில் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பிறகு தடகளத்தில் தனது முதல் உலகப் போட்டியில் ஆத்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். வர் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றை அடைந்தார். அடுத்த ஆண்டு தடகளத்தில் 2009 உலகப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
ஒரு தடகளப் போட்டியில் இளைஞர், இளையோர் மற்றும் மூத்தோர் மட்டங்களில் உலகப் போட்டிகளில் பட்டங்களை பதினொரு விளையாட்டு வீரர்களில் இவரும் ஒருவர். (வலேரி ஆடம்ஸ், உசேன் போல்ட், வெரோனிகா காம்ப்பெல் பிரௌன், ஆர்மண்ட் டுப்லாண்டிஸ், ஜாக் ஃப்ரீடாக், யெலினா இசின்பாயேவா, கிரானி ஜேம்ஸ், பெய்த் கிப்யேகன், ஜானா பிட்மேன் மற்றும் டேவிட் ஸ்டோர்ல் ஆகியோருடன் இணைந்து இளைஞர், இளையோர் மற்றும் மூத்த மட்டங்களில் உலக வாகையாளர் பட்டங்களை வென்றவர். இவரது தனிப்பட்ட சிறந்த எறிதல்கள் வட்டு எறிதலில் 69.64 மீட்டர் மற்றும் குண்டு எறிதலில் 17.05 மீட்டர் அடங்கும்.
சாமுவேல்ஸ் பல குளிர்காலங்களை வாரட்டா லீக்கில் கூடைப்பந்து விளையாடுவதிலும் கழித்துள்ளார். இவரது சகோதரி ஜேமி, பெண்கள் தேசியக் கூடைப்பந்தாட்ட லீக்கில் விளையாடியுள்ளார்.[4]
தொழில் வாழ்க்கை
[தொகு]சாமுவேல்ஸ் 1988 ஆம் ஆண்டில் தாய் திரேசி சாமுவேல்ஸிற்கும் தந்தை மார்க் சாமுவேல்ஸ் அகியோருக்கு பிறந்தார். இவர் 4 குழந்தைகளில் இரண்டாவது மூத்தவர் குடும்பம் சிட்னியின் புறநகர்ப் பகுதியான மெரிலேண்ட்ஸில் இருந்தது. இவர் அங்கிருக்கும் கிரேஸ்டேன்ஸ் லிட்டில் தடகள சங்கத்தில் தடகளத்தைத் தொடங்கினார்.[5]
சாமுவேல்ஸ் முதலில் மெரிலேண்ட்ஸ் பொதுப் பள்ளியில் பயின்றார். பின்னர் வெஸ்ட்ஃபீல்ட்ஸ் விளையாட்டு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு கூடைப்பந்து வீரராக விளையாடினார். பின்னர் வெஸ்ட் ஃபீல்ட் தடகளத் திட்டத்தில் தனது பயிற்சியாளர் டெனிஸ் நோல்ஸிடம் பயிற்சி பெற்றார்.
இவரது முதல் உலகளாவியத் தோற்றம் 2003 உலக இளைஞர் போட்டியில் தனது பதினைந்தாவது வயதில் குண்டு எறிதல் மூலம் நிகழ்ந்தது. அதில் இவர் தகுதிச் சுற்றுகளில் 13 வது இடத்தைப் பிடித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் போட்டிக்குத் திரும்பினார் (2005) குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கத்தை வென்றார் (15.53 மீ புதிய தனிப்பட்ட சிறந்த எறிதலுடன் ) மற்றும் வட்டெறிதலில் தங்கப் பதக்கம் பெற்றார். 2005 ஆஸ்திரேலிய இளைஞர் ஒலிம்பிக் விழாவில் சாமுவேல்ஸ் பங்கேற்றார். இதில் குண்டு எறிதலில் வென்று வட்டு எறிதலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dani Samuels பரணிடப்பட்டது 28 மே 2015 at the வந்தவழி இயந்திரம். sports-reference.com
- ↑ Dani Samuels பரணிடப்பட்டது 28 சனவரி 2015 at the வந்தவழி இயந்திரம். 2014 CWG profile.
- ↑ Dani Samuels – In a Spin. Inside Athletics (September 2009 edition).. Retrieved 7 October 2009.
- ↑ "The emergence of Dani Samuels". olympics.com.au.
- ↑ "Merrylands' Dani Samuels at Glasgow Games". 22 July 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]
