டேக் இட் ஈசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி | |
---|---|
இயக்கம் | கே. கே. ராஜ்சிற்பி |
தயாரிப்பு | கே. கே. ராஜ்சிற்பி |
கதை | கே. கே. ராஜ்சிற்பி |
இசை | சௌந்தர்யன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஏ. கார்த்திக் ராஜா |
படத்தொகுப்பு | சி. செட்ரிக் |
கலையகம் | கலைச் சிற்பி |
வெளியீடு | திசம்பர் 30, 1996 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
டேக் இட் ஈசி ஊர்வசி (Take It Easy Urvashi) என்பது 1996 ஆம் ஆண்டைய இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். இதற்கு முன்பு தாமரை (1994) என்ற படத்தை இயக்கிய கே. கே. ராஜ்சிற்பி இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்னேஷ், அமிர்தா, ராஜேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் ரகுவரன், கவிதா, ஜீவா, சார்லி, கிங் காங், மயில்சாமி, அலெக்ஸ், சண்முகசுந்தரம், சேது விநாயகம், குமரிமுத்து, பாண்டு ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சௌந்தர்யன் இசை அமைத்தார். 30. திசம்பர், 1996 அன்று இப்படம் வெளியிடப்பட்டது.[1][2][3] இப்பட்டதின் பெயரானது கதாலன் (1994) படத்தில் இடம்பெற்ற " ஊர்வசி ஊர்வசி " என்ற பாடலை நினைவூட்டுவும் விதமாக வைக்கபட்டது.[4]
கதை[தொகு]
ஊட்டியில் உள்ள சுப்பிரமணி ( விக்னேஷ் ) வேலையற்ற, கவலையற்ற ஒரு இளைஞன். அவர் தன் மூன்று நண்பர்களுடன் ( சார்லி, கிங் காங், மயில்சாமி ) சுற்றித் திரிகிறார். அதே நேரத்தில் அவரது விதவை தாய் ருக்மணி ( கவிதா ) தனது குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற பெரும்பாடு படுகிறார். அவரது வீட்டில் வசிக்கும் அமுலு (ராஜேஸ்வரி) மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த பாப்பா (ஜீவா) ஆகியோர் சுப்பிரமணியைக் காதலிக்கிறனர். ஆனால் சுப்பிரமணி பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த நவீன பெண்ணான ஊர்வசி (அமிர்தா) என்பவரை காதலிக்கிறான். ஒரு நாள், சுப்பிரமணி ஊர்வசி மீதான தனது காதலை வெளிப்படுத்துகிறான், ஆனால் அவள் அதை ஏற்க மறுக்கிறாள். சுப்பிரமணியுடன் பல மோதல்களுக்குப் பிறகு, ஊர்வசி இறுதியாக சுப்பிரமணியின் காதலை ஏற்றுக்கொள்கிறாள். வெளிநாட்டில் பணிபுரிந்த ஊர்வசியின் தந்தை ஜெயா ( ரகுவரன் ) ஊட்டியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்புகிறார். அவர் முதலில் தனது மகள் வேலைவெட்டி இல்லாதவனை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் ஊர்வசி அவரை சமாதானப்படுத்துகிறாள். திருமணம் பேச ஜெயாவும் ருக்மணியும் சந்திக்கும் போது, அவர்களின் திருமணத்துக்கு ஒப்புதல் தர ருக்மணி மறுக்கிறார். ஜெயா வேறு யாருமல்ல ருக்மணியின் சகோதரர் ஆவார். ருக்மணி சுப்ரமணியிடம் தனது கசப்பான கடந்த காலத்தைப் பற்றி சொல்கிறாள்.
கடந்த காலத்தில், ஜெயா தனது சகோதரி ருக்மணி, அவரது மைத்துனர் ( சண்முகசுந்தரம் ) மைத்துனரின் தங்கை லட்சுமி ஆகியோருடன் வசித்து வந்தார். ஜெயா எந்த விலை கொடுத்தாவது வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புகிறார். அவர் வெளிநாட்டில் வேலைக்கு சென்ற பிறகு அவர்களுக்கு உதவுவதாகவும், பின்னர் அவர் லட்சுமியை திருமணம் செய்து கொள்வதாகவும் அவர்களுக்கு உறுதியளிக்கிறார். இதை நம்பி ஜெயாவுக்கு தேவைப்படும் பணத்துக்காக அவரது மைத்துனர் தனது அசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று அதன் பண பலன்களைப் பெற்று, மேலும் தனது சகோதரியின் நகைகளையும் விற்று பணம்புரட்டி அளிக்கிறார். இறுதியில் ஜெயா துபாய் செல்கிறார். ஆனால் ஜெயா கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் அவர்களுக்கு துரோகம் இழைக்கிறார். அதை அவர்கள் அறிகிறார்கள். இதனால் லட்சுமி தற்கொலை செய்து கொள்கிறாள். இதே வேதனையில் ருக்மணியின் கணவர் மாரடைப்பால் இறக்கிறார். ருக்மணியும் இளம் சுப்பிரமணியும் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு ஆளாகின்றனர். அமுலுவின் பெற்றோர் அவர்களுக்கு உதவ முன்வருகின்றனர். அமுலுவின் பெற்றோர் இறந்த பிறகு, அமுலு கவிதா மற்றும் சுப்பிரமணியுடன் வசித்து வருகிறாள்.
அமுலு இனி சுப்பிரமணியைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று, அவள் ஒரு கன்னியாஸ்திரி ஆகிறாள். சுப்பிரமணியும் ஊர்வசியும் திருமணம் செய்து கொள்வதுடன் படம் முடிகிறது.
நடிகர்கள்[தொகு]
- விக்னேஷ் சுப்பிரமணியாக
- அமித்ரா ஊர்வசியாக
- ராஜேஸ்வரி அமுலுவாக
- ரகுவரன் ஜெயாவாக
- கவிதா சுபிபிரமணியின் தாய் ருக்குமணியாக
- ஜீவா பாலக்காடு பாப்பாவாக
- சார்லி சுப்பிரமணியின் நண்பராக
- கிங் காங் சுப்பிரமணியின் நண்பராக
- மயில்சாமி சுப்பிரமணியின் நண்பராக
- அலெக்ஸ் ஊர்வசியின் பணியாளர்
- சண்முகசுந்தரம் சுப்பிரமணியின் தந்தை
- சேது விநாயகம் தேவாலய தந்தை
- குமரிமுத்து காவலர்
- பாண்டு aகாவல் துணை ஆய்வாளர்
- மாஸ்டர் அருணன்
- வெள்ளை சுப்பையா
- பயில்வான் ரங்கனாதன் குதிரை உரிமையாளராக
- மார்த்தாண்டன் காவலராக
- விஜய முருகன்
- கர்ணா
- வாசு
- வெங்கி
இசை[தொகு]
படத்திற்கான பிண்ணனி இசையை திரைப்பட இசையமைப்பாளர் சௌந்தர்யன் மேற்கொண்டுள்ளார். 1996 இல் வெளியிடப்பட்ட பாடல் பதிவில் ஐந்து பாடல்கள் வெளியாயின.[5][6][7]
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "தொட வேண்டும்" | மனோ, சுஜாதா மோகன் | 5:14 | |||||||
2. | "ஓ ஊர்வசி" | சுவர்ணலதா | 5:04 | |||||||
3. | "Jollu Mannargalin" | சாகுல் ஹமீது, மனோஜயன் | 5:05 | |||||||
4. | "மஜா வேணுமா" | மால்குடி சுபா, அனுபமா | 5:02 | |||||||
5. | "இதயத்தில் இருப்பவளே" | உண்ணிமேனன், சுவர்ண லதா | 4:56 | |||||||
மொத்த நீளம்: |
25:21 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Take It Easy Oorvasi (1996)". gomolo.com. http://www.gomolo.com/take-it-easy-oorvasi-movie/12010.
- ↑ "Jointscene : Tamil Movie Take It Easy Urvasi". jointscene.com. http://jointscene.com/movies/Kollywood/Take_It_Easy_Urvasi/8393.
- ↑ "Filmography of take it easy urvasi". cinesouth.com. http://www.cinesouth.com/cgi-bin/filmography/filmography.cgi?name=take%20it%20easy%20urvasi.
- ↑ "Benny Dayal is bringing back the classic with Project Urvasi". Indulge Express. 25 October 2017. https://www.indulgexpress.com/entertainment/celebs/2017/oct/25/benny-dayal-is-bringing-back-the-classic-with-project-urvasi-4188.html.
- ↑ "Take It Easy Urvasi". mio.to. https://mio.to/album/Take+It+Easy+Urvasi+(2000).
- ↑ "Take It Easy Urvasi Songs". raaga.com. https://www.raaga.com/tamil/movie/take-it-easy-urvasi-songs-T0004070.
- ↑ "Take It Easy Urvasi". jiosaavn.com. https://www.jiosaavn.com/album/take-it-easy-urvasi/5lrlxmkd,nc_.