டெஸ்லா மோட்டார்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெஸ்லா மோட்டார்ஸ்
Tesla Motors
வகைபொதுநிறுவனம்
நிறுவுகை2003; 19 ஆண்டுகளுக்கு முன்னர் (2003)
தலைமையகம்பாலோ ஆல்டோ, கலிபோர்னியா, ஐ.அ.
முக்கிய நபர்கள்
தொழில்துறைதானுந்து, Renewable Energy Storage Systems
உற்பத்திகள்
 • மின்சார ஆடம்பரத் தானுந்துகள்
 • தானுந்துப் பாகங்கள்
 • Rechargeable energy storage systems
வருமானம்Green Arrow Up Darker.svgஐஅ$ 31.5 billion (2020)[1]
இயக்க வருமானம்Green Arrow Up Darker.svgஐஅ$ 2 Billion (2020)
நிகர வருமானம்Green Arrow Up Darker.svgஐஅ$ 721 million (2020)
மொத்தச் சொத்துகள்Green Arrow Up Darker.svgஐஅ$ 52.2 billion (2020)
மொத்த பங்குத்தொகைGreen Arrow Up Darker.svgஐஅ$ 22.2 billion (2020)
உரிமையாளர்கள்எலோன் மசுக் (23.1 %)
பணியாளர்70,757 (திசம்பர் 2020)[2]
இணையத்தளம்www.teslamotors.com

டெஸ்லா மோட்டார்ஸ் (ஆங்: Tesla Motors) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தானுந்து நிறுவனம். மின்சாரத்தினால் இயங்கும் தானுந்துகளை மட்டுமே தெஸ்லா உருவாக்குகிறது. இந்நிறுவனம் மின் சேமிப்புக் கலன்களையும் விற்பனை செய்கிறது. 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இது வரை டெஸ்லா ரோட்ஸ்டர், மாடல் எஸ், மாடல் எக்சு, மாடல் 3 ஆகிய மின்னுந்துகளைத் தயாரித்துள்ளது. எலொன் மசுக் இதன் நிறுவனர்.

வரலாறு[தொகு]

இந்த நிறுவனம் 2003-ஆம் ஆண்டு மரத்தின் இபெர்ஹார்ட் மற்றும் மார்க் டர்பென்னிங் என்பவர்களால் நிறுவிக்கபட்டது. இவரைகளை தவிர எலோன் மசுக், ஜேபி சுட்ருபேள் மற்றும் இயன் வ்ரைட் ஆகியோரும் துணை நிறுவனர்களாக கருதப்படுகின்றனர். 2003-ஆம் ஆண்டு ஜிம் நிறுவனம் தனது EV1 எனப்படும் வாகனத்தை தயாரிப்பிலிருந்து நிறுத்திக்கொண்டதோடு மற்றும் அழிக்கவும் செய்ததை தொடர்ந்து, இவர்களுக்கு இந்த டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தை உருவாக்க உந்துகோலாக விளங்கியது.[3]

வாகன வடிவமைப்பு/ மாதிரிகள்[தொகு]

டெஸ்லா நிறுவனம் கடந்த டிசம்பர் 2017 வரை மூன்றுவகையான வாகன வடிவமைப்புகளை சந்தையில் விற்பனைக்கு அறுமுகப்படுத்தியுள்ளது. இந்த் நிறுவனத்தின் முதலாம் வடிவமைப்பு Tesla Roadster தற்பொழுது விற்பனையில் இல்லை.

தற்பொழுது விற்பனையில் உள்ள மாதிரிகள்; மொடல் எஸ் (Model S) , மொடல் க்ஸ் (Modal X), மொடல் 3 (Modal 3) ஆகியவை ஆகும்.

மொடல் எஸ் (Model S)[தொகு]

மொடல் எஸ்-யின் தயாரிப்பு பணிகள் ஜூன் 22, 2012-யில் தொடங்க பட்டன.[4] முதற்கட்டமாக ஐரோப்பாவில் ஆகஸ்ட் 2013 ழும்பின்னர் சீனாவில் ஏப்ரல் 2014 இந்த மொடல் எஸ் வகை வாகனங்கள் விற்பனைக்கு வந்தன. இதனை தொடர்ந்து வலதுபுறம் ஓட்டுநர் வகை வனங்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியம் ஹொங்கங் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் 2014-ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தன.[5] [6][7] இந்த மொடல் எஸ் வகை வாகனங்கள் உலகரீதியான சில அங்கிகாரங்களை பெற்றுள்ளது. அவற்றில் குறிப்பிட்ட தக்கது, 2013-ஆம் ஆண்டு "Motor Trend Car of the Year"[8]; "World Green Car"[9]; Automobile Magazine's 2013 "Car of the Year"[10] மற்றும் Time Magazine "Best 25 Inventions of the Year 2012"[11]

மொடல் எஸ் முன் தோற்றம்

மொடல் க்ஸ் (Modal X)[தொகு]

மொடல் க்ஸ் வகை வாகனம் அலுமானனியத்தால் உருவாக்கபட்ட வடிவமைப்பை கொண்டுள்ளது[12]. இதன் தயாரிப்பு பணிகள் 2013 ஆம் ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும் பின்னர் 2015-ஆம் ஆண்டில்தான் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன.[13] இந்தவகை வகணங்கள் 5-, 6- மற்றும் 7 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொடல் க்ஸ் வகை வாகனங்கள் செப்டம்பர் 2015 முதல் சந்தைக்கு விற்பனைக்கு வந்தன.[14] நோர்வே நாட்டில் இந்த வாகனம் 2016-ஆம் ஆண்டு மின்சாரத்தால் இயங்கும் முதனிலை வாகனமாக கருதப்பட்டது.[15]

மொடல் 3 (Modal 3)[தொகு]

டெஸ்லா மொடல் 3, முன்புற தோற்றம்

மொடல் 3 வகை வாகனம் டெஸ்லாவின் 3ஆம் தலைமுறை வடிவமைப்பாகும்.[16] ஆரம்பத்தில் 'மொடல் இ' பேரிருட படவேண்டியநிலையில் போர்ட் வாகன நிறுவனத்தின் நீதிமன்ற முறையீட்டினால் இந்த வகை வாகனத்தின் பெயர் மொடல் 3 என அறிவிக்கப்பட்டது.[17] மொடல் 3 அதிகபட்சம் 500கிமு வரை மின்சாரத்தை எட்டக்கூடிய ஆற்றல் கொண்டது.[18] 31 மார்ச் 2016 இதன் முதல் வடிவமைப்பு உலகிற்கு கட்டப்பட்ட நிலையில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வாகனத்திற்கு முன்பணம் செலுத்தினர். ஜூலை 2017 வரை 500,000 பேர் இந்த வாகனதை வாங்க பதிந்து கொண்டனர்.[19]

டெஸ்லா இந்த மொடல் 3 வகை வாகன உற்பத்தியில் $2 முதல் $3 பில்லியன் அமெரிக்க டாலரை முதலிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.[20] முதல் 30 வண்டிகள் ஜூலை 28, 2017 நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பயனீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.[21] 2018ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 8,182 வண்டிகள் விற்கப்பட்டன.[22] ஜனவரி 2018 தொடங்கி, மொடல் 3 வகை வாகனங்கள் அமெரிக்காவில் விற்பனையாகும் மின்சார வகை தணுத்துகளில் முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.[23]

மற்ற வண்டிகள்[தொகு]

இந்நிறுவனம் மாடல் ஒய், சைபர் திரக், தெஸ்லா செமி சரக்குந்து ஆகியவற்றின் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

 1. Tesla Motors (2015-02-12). "Tesla Motors, Inc. – Fourth Quarter & Full Year 2014 Shareholder Letter" (PDF). Tesla Motors. மூல முகவரியிலிருந்து 2016-06-03 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2015-02-12.
 2. eei.org (2015-06-11). "Elon Musk and JB Straubel share their vision on energy". Every Elon Musk Video. பார்த்த நாள் 2015-06-20.
 3. "Elon Musk on twitter".
 4. "Tesla Motors begins delivering Model S electric cars in a Silicon Valley milestone". Mercury News.
 5. "First 2013 Tesla Model S Delivered Outside North America--In Oslo". Antony Ingram.
 6. "Tesla Motors begins delivering Model S electric cars in a Silicon Valley milestone". The Mercury News.
 7. "Loss Tapers at Tesla as Its Sales Still Climb". The New York Times.
 8. "2013 MOTOR TREND CAR OF THE YEAR: TESLA MODEL S". MOTOR TREND.
 9. "And Now There Is One.... Tesla Model S Declared 2013 World Green Car". International Business Times.
 10. "2013 Automobile of the Year: Tesla Model S". David Zenlea.
 11. "Best Inventions of the Year 2012—$22,000–$750,000—The Tesla Model S". Time.
 12. "Model X Specifications". Tesla.
 13. "Tesla Model X delayed, again, but Musk says Model S demand remains high". Autoblog Green.
 14. "Tesla Signature series Model X to begin delivery September 29". Reuters.
 15. "Almost Half The Cars Bought In Norway Last Month Were Electrified". hybridCARS.
 16. "Tesla: A Carmaker With Silicon Valley Spark". Bloomberg.
 17. "New Tesla Model 3 to make UK debut at Goodwood". Auto Express.
 18. "By the numbers: Tesla Model 3 vs. Chevrolet Bolt EV". Road Show.
 19. "Tesla Model 3 announced: release set for 2017, price starts at $35,000". The Verge.
 20. "Tesla Fourth Quarter & Full Year 2016 Update". Tesla, Inc. மூல முகவரியிலிருந்து 2018-02-19 அன்று பரணிடப்பட்டது.
 21. "By the numbers: Tesla Model 3 vs. Chevrolet Bolt EV". Road Show.
 22. "Tesla First Quarter 2018 Update". Tesla, Inc.. மூல முகவரியிலிருந்து 2018-05-27 அன்று பரணிடப்பட்டது.
 23. "MONTHLY PLUG-IN SALES SCORECARD". insideevs.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெஸ்லா_மோட்டார்ஸ்&oldid=3368889" இருந்து மீள்விக்கப்பட்டது