டெல்லியின் குரங்கு மனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெல்லியின் குரங்கு மனிதன்ஹிந்தி : मुंहनोचवा, உருது: منھ نوچوا) அல்லது காலா பந்தர்(கருங்குரங்கு) என்பது அசாதாரணமான குரங்கு உருவம் கொண்ட யாராலும் அறியப்படாத ஒரு உருவத்தைக் குறிப்பிடுவதாகும். 2001ம் ஆண்டின் மத்தியில் இத்தகைய உருவம் ஒன்று புது டெல்லிபகுதிகளில் சுற்றி அலைந்து மனிதர்களை தாக்குவதாக குற்றம்சாட்டப்பட்டது [1].ஆனால் காவல் துறையால் கண்டறியமுடியவில்லை.

இந்த சம்பவம் அனைத்துமே இந்திய மக்களின் வெகுஜன வெறிக்கும் பயத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு என்று கருதப்படுகிறது.

வரலாறு[தொகு]

2001 ம் ஆண்டு மே மாதத்தில் இந்தியத் தலைநகர் புதுடெல்லியில், நள்ளிரவில் வெளிப்பட்டு மக்களைத் தாக்கும் ஒரு விசித்திரமான கருங்குரங்கு போன்ற உயிரினத்தைப் பற்றிய செய்திகள் தீ போல பரவத் தொடங்கிது.[2] ஆனால் அந்த உருவத்தை நேரில் பார்த்ததாக சொல்லப்பட்டவர்களின் சாட்சிகள் சொல்வது ஒன்றுபோல இல்லாமல் ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டது. பொதுவாக நான்கு அடிகள் உயரம்[3] கொண்ட அந்த உயிரினம் உடல் முழுவதும் அடர்த்தியான கருப்பு முடியால் மூடப்பட்டிருக்கும் எனவும், தலையில் உலோக கவசத்தால் மூடப்பட்டிருக்கும் எனவும் நேரில் கண்டவர்கள் சொல்லியுள்ளனர். மேலும் உலோகத்தால் ஆன நகங்களையும் சிவந்த ஒளிரும் விழிகளையும் கொண்ட அந்த உயிரினம் மூன்று பொத்தான்களை கொண்ட உடையையும் விரைவாக நகரும் பாதடியை [4] அணிந்தும் வருவதாகவும் சிலர் கூறியுள்ளனர்.

ஆனால் வேறு சிலரோ, அந்த குரங்கு உருவமுடைய உயிரினம் நரிகளுக்கு இருப்பதைப்போன்ற கூர்மையான மூக்கு வடிவத்தை கொண்டதாக கூறியுள்ளனர். வேறு சிலரோ எட்டு அடிகள் கொண்டதாகவும் ஒரு கட்டிடத்திலிருந்து வேறு கட்டிடத்திற்கு விரைவாகத் தாவிச் செல்லும் என கூறியுள்ளனர். குரங்கு மனிதனைப்பற்றி கிட்டத்தட்ட 300 க்கும் மேட்பட்ட அசைப்படங்கள் கிடைத்துள்ளன. மேலும் அந்த உயிரினத்தால் 60க்கும் மேற்பட்ட மனிதர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாக குறிப்புகள் உள்ளது.[5] இரண்டு [3] (அல்லது மூன்று) மனிதர்கள் இந்த குரங்கு மனிதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க நினைத்து உயரமான கட்டிடங்களில் இருந்து குதித்தும் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்தும் உயிரை இழந்துள்ளார்கள். இத்தகைய பீதி நிறைந்த கட்டத்தில், காவல் துறையினர் அந்த உயிரினத்தைப் பிடிக்கும் முயற்சியில் வரைபட கலைஞர்களின் உதவியுடன் அந்த உருவத்தின் தோற்ற வரைபடங்களையும் வெளியிட்டு மக்களின் பயத்தை தணிக்க முற்பட்டனர்.

கலாச்சார பிரதிபலிப்பு[தொகு]

திரைப்படம்[தொகு]

  • ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கி 2009 ஆம் ஆண்டு பாலிவுட்டில் இந்தி மொழியில் வெளியிடப்பட்ட திரைப்படமான தில்லி 6 இன் மையப் புள்ளியாக பழைய டெல்லியில் உள்ள குரங்கு மனிதன் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், ஹிந்தியில் "காலா பந்தர் (தமிழில் கருங்குரங்கு)" என்று அழைக்கப்படும் இந்த உயிரினம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் நல்ல குணங்களுடன் இணைந்தே தீய குணங்களும் இருப்பதைக்குறிக்கும் ஒரு உருவகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி[தொகு]

இசை[தொகு]

அச்சு ஊடகம்[தொகு]

  • 2011 ம் ஆண்டு தேரே பின்லேடன் இயக்குனர் அபிஷேக் ஷர்மாவின் கிராஃபிக் நாவலான குரங்குமனிதனில், இந்த உயிரினம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பல சக்திகளைக்கொண்ட நாயகனாக விளக்கப்படுகிறது. ஒரு அறிவியல் சோதனையின் தவறான விளைவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் முதல் பாகத்தில் புது டெல்லியில் நடைபெற்ற குரங்கு மனிதனைப் பற்றியும், அதன் தோற்றத்தையும் விவரிக்கிறது, மேலும் பிப்ரவரி 2002 இல் வெளியிடப்பட்ட இரண்டாவது பாகத்தில் கான்பூரில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உள்ள உயிரினம் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]