உள்ளடக்கத்துக்குச் செல்

டெல்டா மேக்வால் வன்கலவி வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

29 மார்ச் 2016 அன்று, டெல்டா மேக்வால் என்ற 17 வயது தலித் பெண், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானேர் மாவட்டத்தில் உள்ள நோகாவில் உள்ள தனது கல்லூரியில் இறந்து கிடந்தார். அவர் மாணவராக இருந்த சிறுமிகளுக்கான ஜெயின் ஆதர்சு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் தண்ணீர் தொட்டியில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது பெற்றோர் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் மார்ச் 28 அன்று ஒரு ஆசிரியரால் தனது மகள் பாலியல் வன்கலவி செய்யப்பட்டதாகவும் , பின்னர் அவளைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. மேக்வாலின் மரணத்திற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அற்விக்கப்படவில்லை.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

டெல்டா மேக்வால் 7 மே 1999 இல் பிறந்தார். [1] அவரது தந்தை, மகேந்திர ராம் மேக்வால், [2] ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் [3] மற்றும் ராஜஸ்தானில் பார்மர் மாவட்டத்தின் திரிமோஹி கிராமத்தில் வசிப்பவர்.

மேகுவால் பிகானீரின் நோகாவில் உள்ள சிறுமிகளுக்கான ஜெயின் ஆதர்சு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பிஎஸ்டிசி (அடிப்படை பள்ளி பயிற்சி சான்றிதழ்) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நிறுவன கொலை[தொகு]

29 மார்ச் 2016 அன்று, 17 வயதான டெல்டா மேக்வாலின் உடல் கல்லூரியின் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது. மேக்வாலின் பெற்றோர் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் இதனை வன்கலவி மற்றும் கொலை என்று குற்றம் சாட்டப்பட்டது. அதில் கல்லூரி விடுதியின் பாதுகாவலராக இருந்த பிரியா சுக்லா மற்றும் உடற்கல்வி பயிற்றுனராக இருந்த விஜேந்திர சிங் மற்றும் கல்லூரி முதல்வர் ஈஸ்வர் சந்த் பெய்ட் ஆகியோரின் பெயரும் இருந்தது. அவர்களின் கூற்று என்னவென்றால், மார்ச் 28 அன்று, மேக்வால் தனது தந்தையினை தொலைபேசியில் அழைத்து தான் பாலியல் வன்கலவி செய்யப்பட்டதாக கூறினார். சிங்கின் அறையை சுத்தம் செய்ய சுக்லா தன்னை அனுப்பியதாகவும், சிங் அவளை பாலியல் வன்கலவி செய்ததாகவும் அவர் தனது தந்தையிடம் கூறியுள்ளார். அன்று விடுதியில் மேலும் நான்கு பெண்கள் இருந்தனர். இந்த சம்பவத்தை மூடிமறைக்க கல்லூரி முயற்சித்ததாக அவரது தந்தை குற்றம் சாட்டினார், மேலும் மேக்வால் மற்றும் சிங் கையெழுத்திட்ட எழுத்துப்பூர்வ மன்னிப்பை கட்டாயப்படுத்தியதாகக் கூறினார். [4]

புகாரைத் தொடர்ந்து, சிங்கை பிகானீர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 8 ஏப்ரல் 2016 அன்று, பெயரிடப்பட்ட மற்ற இரண்டு சாட்சிகளும் இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிகானேர் காவல் துறையினர், தடயவியல் அறிவியல் ஆய்வக அறிக்கையில் மேக்வால் பாலியல் வன்கலவி செய்யப்பட்டு பின்னர் நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறினர். இது ஒரு கொலை அல்ல தற்கொலை என்று அவர்கள் கூறுகிறார்கள்.[5][6] எதிர்க்கட்சி கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரசு (ஐஎன்சி), அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே நீதியை வழங்க தவறிவிட்டது என்று கூறினார்.[7] ஐஎன்சி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக ராஜே கூறினார். [8]

ஏப்ரல் மாதத்தில், இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி மற்றும் பாதிக்கப்பட்டவரின் தந்தை மத்திய புலனாய்வுத் துறையின் தலையீட்டைக் கோரினர். விரைவில் , ராஜஸ்தான் அரசு அதை பரிந்துரைத்ததாக அறிவித்தது [9] [10]

சிங் அறையை சுத்தம் செய்யச் சொல்வது போன்ற அவரது தலித் எனும் அடிப்படையில் மேக்வால் பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மேலதிக விசாரணைக்குக் கோருவதில் தீவிரமாக உள்ளனர்.

சான்றுகள்[தொகு]

  1. Mirsab, A; Alam, Afroz (18 April 2016). "Death of a Delta". Two Circles: Mainstream News of the Marginalized. பார்க்கப்பட்ட நாள் 2017-06-06.
  2. Ahmad, Salik (29 March 2017). "A year after Delta Meghwal's death, family 'allergic' to education". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2017-06-06.
  3. Jha, Vaibhav (11 April 2016). "Dalit educator's death pushes Barmer village back in time". http://www.hindustantimes.com/jaipur/dalit-educator-s-death-pushes-barmer-village-back-in-time/story-oKb24XUlcE9gVsYbM1M2GO.html. 
  4. "Rajasthan: Dalit 'raped, murdered', teacher held". 2 April 2016. http://indianexpress.com/article/india/india-news-india/rajasthan-dalit-raped-murdered-teacher-held-indo-pak-border/. 
  5. "Dalit girl student was not murdered, says FSL report". The Times of India. 8 April 2016. http://www.timesofindia.indiatimes.com/city/jaipur/Dalit-girl-student-was-not-murdered-says-FSL-report/articleshow/51735039.cms. பார்த்த நாள்: 2016-04-20. 
  6. Goswami, Aparnesh (28 June 2016). "Delta Meghwal case: Charge sheet against three for abetment of suicide". Hindustan Times. http://www.hindustantimes.com/jaipur/delta-meghwal-case-charge-sheet-against-three-for-abetment-of-suicide/story-MZcM8o2tZmCaMXndTqJQGO.html. பார்த்த நாள்: 2017-02-13. 
  7. Upadhyay, Kavita (14 April 2016). "BJP isolating Dalits, says Rahul". The Hindu. http://www.thehindu.com/news/national/other-states/bjp-isolating-dalits-says-rahul/article8473182.ece. பார்த்த நாள்: 2017-02-13. 
  8. "Will give nod for CBI probe if Delta's family demands: Smt Vasundhara Raje". Vasundhara Raje. 15 April 2016. Archived from the original on 2017-02-23. பார்க்கப்பட்ட நாள் 2017-02-22.
  9. "Rajasthan CM Raje govt seeks CBI probe into Dalit girl's death". 20 April 2016. http://indianexpress.com/article/india/india-news-india/rajasthan-dalit-girl-death-sbi-probe-vasundhara-raje-2761420/. 
  10. "Bikaner Dalit 'rape-murder': Father demands CBI investigation". 9 April 2016. http://indianexpress.com/article/cities/jaipur/bikaner-dalit-rape-murder-father-demands-cbi-investigation/.