டெல்டா ஏர்லைன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டெல்டா எயர்லைன்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டெல்டா எயர்லைன்ஸ்
IATA ICAO அழைப்புக் குறியீடு
DL DAL DELTA
நிறுவல்1924
(உஃப்-டலான்ட் டஸ்டர்ஸ் என்று பெயர்வைத்து)[1]
செயற்பாடு துவக்கம்ஜூலை 17, 1929[1]
மையங்கள்
இரண்டாம் நிலை மையங்கள்
கவன செலுத்தல் மாநகரங்கள்
அடிக்கடி பறப்பவர் திட்டம்ஸ்கைமைல்ஸ்
கூட்டணிSkyTeam
கிளை நிறுவனங்கள்காமெயர்
டெல்டா ஷட்டில்
டெல்டா எயர் எலீட்
வானூர்தி எண்ணிக்கை451 (+51 orders)
சேரிடங்கள்324
தலைமையிடம்அட்லான்டா, ஜோர்ஜியா
முக்கிய நபர்கள்ரிச்சர்ட் ஆண்டர்சன் (CEO)
எட்வர்ட் பாஸ்டியன் (தலைவர் / CFO)
வலைத்தளம்http://www.delta.com

டெல்டா எயர்லைன்ஸ் (Delta Air Lines) உலகில் மொத்தப் பயணிகள் கணக்கெடுப்பின் படி இரண்டாம் மிகுந்த விமானசேவை நிறுவனம் ஆகும். அட்லான்டாவை அடித்தளமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் உலகில் பல விமானசேவை நிறுவனங்களுடன் மிக நகரங்களை இணைக்கிறது.

2008இல் ஏப்ரல் 14 இந்நிறுவனம் வடமேற்கு எயர்லைன்ஸ் உடன் சேரும் என்று கூறியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக சேர்ந்தால் உலகில் மிகப்பெரிய விமானசேவை நிறுவனமாக இருக்கும்.

டெல்டா ஏர்லைன்ஸ் அமெரிக்க விமான சேவைகளில் முதன்மையான விமான சேவையாகும். இதன் தலைமையகம் ஜார்ஜியாவிலுள்ள, அட்லாண்டாவில் உள்ளது. [2] ஆறு கண்டங்களில் இது தனது விமான சேவையினை வழங்குகிறது. டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் இதன் துணை ஆட்சி நிறுவனங்கள் இணைந்து தினமும் 5,000 விமானங்களை இயக்குகிறார்கள். இந்த நிறுவனங்களில் மட்டும் சுமார் 80,000 பேர் வேலை செய்கின்றனர். [3] இந்த விமானசேவையின் தலைமையகம் ஹர்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் உள்ளது. பயணிகள் செல்வது (ஆண்டிற்கு 91 மில்லியன் பயணிகள் செல்கின்றனர்) மற்றும் விமான தரையிறக்கம் மற்றும் விமான மேலேற்றம் அடிப்படையில் இந்த விமான நிலையம் உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையம் ஆகும்.


மேலும் டெல்டா விமான சேவையின் தொழில்நுட்ப செயல்பாடுகளின் தலைமையகமும் இதுவே. [4] ஆரம்பிக்கப்பட்ட தேதி மற்றும் நிறுவப்பட்ட விமான சேவையின் அடிப்படையில் இது பழமையான விமானசேவைகள் வரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு அதிகப்படியான விமான குழுக்களைக் கொண்டுள்ள விமான சேவையாகும்.[5] 2012 ஆம் ஆண்டு அதிகப்படியான பயணிகளின் எண்ணிக்கை கொண்ட விமான சேவையும் இதுவாகும்.[6]

வரலாறு[தொகு]

Restored Huff-Daland Duster
Delta Douglas DC-7 circa 1955
Delta Boeing 747-100 at Heathrow Airport in 1973

இந்த விமான நிறுவனம் ஹஃப் டாலண்ட் டஸ்டர்ஸ் என்ற பெயருடன் மே 30, 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட இடம் ஜார்ஜியாவிலுள்ள மாகோன் என்றாலும் 1925 ஆம் ஆண்டு லூயிசியானாவிலுள்ள மான்ட்ரோவிற்கு மாற்றப்பட்டது. இதன் உண்மையான இயக்குநர்களில் ஒருவரான கால்லெட் ஈ. ஊல்மேன் செப்டம்பர் 13, 1928 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தினை வாங்கினார். அதன் பின்பு அதன் பெயரினை டெல்டா ஏர் செர்வீஸஸ் என்று மாற்றம் செய்தார். இந்நிறுவனம், 1929 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி முதல் பயணிகளை ஏற்றிச் செல்லத் தொடங்கியது. 1960 ஆம் ஆண்டுகளில் புரொப்பல்லர் ரக விமானங்களுக்குப் பதிலாக ஜெட் ரக விமானங்களை அறிமுகப்படுத்தினர். அதன்பின்னர் 1970 ஆண்டுகளில் ஐரோப்பிய சர்வதேச விமானங்களுடனும், 1980 களில் பசுபிக் பகுதிகளிலும் தனது சேவைகளைத் தொடங்கியது. இதன் சின்னம்/குறியீடு 1959 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தற்போதுள்ள சின்னம்/குறியீடு இரு முப்பரிமாண முக்கோணங்களைக் கொண்டதாகும்.

டெல்டா ஏர்லைன்ஸின் முக்கியப் பாதைகள்[தொகு]

  • டெல்டா ஏர்லைன்ஸ் விமான சேவையின் முக்கிய பாதைகளில் சில கீழே தொகுக்கப்பட்டுள்ளன. [7]
  • டெல்டா மும்பை நியூயார்க் விமானங்கள்
  • டெல்டா மும்பை பாரிஸ் விமானங்கள்
  • டெல்டா மும்பை ஆம்ஸ்டர்டேம் விமானங்கள்
  • டெல்டா புது டெல்லி பாரிஸ் விமானங்கள்
  • டெல்டா பெங்களூரு பாரிஸ் விமானங்கள்
  • டெல்டா புது டெல்லி ஆம்ஸ்டர்டேம் விமானங்கள்
  • டெல்டா நியூயார்க் அட்லாண்டா விமானங்கள்
  • டெல்டா அடலாண்டா நியூயார்க் விமானங்கள்
  • டெல்டா வாஷிங்க்டன் அட்லாண்டா விமானங்கள்
  • டெல்டா அட்லாண்டா வாஷிங்க்டன் விமானங்கள்
  • டெல்டா சிக்காக்கோ அட்லாண்டா விமானங்கள்
  • டெல்டா டாலாஸ்/ஃபோர்ட் வொர்த் விமானங்கள்
  • டெல்டா அட்லாண்டா சிக்காக்கோ விமானங்கள்
  • டெல்டா டெட்ரியாட் நியூயார்க் விமானங்கள்
  • டெல்டா ஹவுஸ்டன் அட்லாண்டா விமானங்கள்
  • டெல்டா நியூயார்க் டெட்ரியாட் விமானங்கள்
  • டெல்டா மின்னேபோலிஸ்ட்/எஸ்டி. பால் நியூயார்க் விமானங்கள்
  • டெல்டா அட்லாண்டா ஃபோர்ட் லாடெர்டல் விமானங்கள்
  • டெல்டா ஃபோர்ட் லாடெர்டல் அட்லாண்டா விமானங்கள்
  • இது போன்ற பல பாதைகளைக் கொண்டுள்ளது.

மையங்களின் விவரங்கள்[தொகு]

டெல்டா ஏர்லைன்ஸ் ஒன்பது உள்நாட்டு மையங்களையும் மூன்று சர்வதேச மையங்களையும் கொண்டுள்ளது. அவற்றுள் சில கீழே தொகுக்கப்பட்டுள்ளன. [8]

  • ஆம்ஸ்டர்டேம் விமானநிலையம் ஸ்கிபோல்
  • சின்சினாட்டி/நார்தெர்ன் கெட்டுக்கி சர்வதேச விமான நிலையம்
  • டெட்ராய்ட் மெட்ரோபொலிட்டன் வேய்ன் கவுன்டி விமான நிலையம்
  • ஹர்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம்
  • ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையம்
  • லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம்
  • லாகுவார்டியா விமான நிலையம்
  • மின்னாபொலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம்
  • நாரிட்டா சர்வதேச விமான நிலையம்
  • பாரிஸ்-சார்லஸ் டி கால்லே விமான நிலையம்
  • சால்ட் லேக் சிட்டி சர்வதேச விமான நிலையம்
  • சீடில்-டகோமோ சர்வதேச விமான நிலையம்

முந்தைய மையங்கள்[தொகு]

  • லோகன் சர்வதேச விமான நிலையம்
  • ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையம்
  • டாலாஸ்/ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையம்
  • ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையம்
  • மெம்பிஸ் சர்வதேச விமான நிலையம்
  • ஓர்லாண்டோ சர்வதேச விமான நிலையம்

முந்தைய இரண்டாம்நிலை மையங்கள்[தொகு]

  • மெம்பிஸ் சர்வதேச விமான நிலையம்
  • போர்ட்லாண்ட் சர்வதேச விமான நிலையம்


குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Norwood, Tom; Wegg, John (2002). North American Airlines Handbook (3rd ). Sandpoint, ID: Airways International. பக். 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-9653993-8-9 இம் மூலத்தில் இருந்து 2016-11-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161128070750/http://airwaysnews.com/. பார்த்த நாள்: 2021-08-18. 
  2. "Federal Aviation Administration – Airline Certificate Information – Detail View". FAA.gov. 2012-05-01. Archived from the original on 2021-03-09. பார்க்கப்பட்ட நாள் 2014-07-23.
  3. "Delta Stats & Facts". 11 December 2012.
  4. "Delta TechOps". Delta TechOps. 2014-03-12.
  5. "The world's 10 largest airlines". Rediff.com. 15 September 2011.
  6. "Delta Air Lines Logo: Design and History". 31 August 2011. Archived from the original on 25 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 23 ஜூலை 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  7. "டெல்டா ஏர்லைன்ஸ்". தெளிவாக பயணம் டாட் காம். Archived from the original on 2014-05-31. பார்க்கப்பட்ட நாள் 2014-07-23.
  8. "Stats & Facts". news.delta.com. Delta Air Lines, Inc. February 2014. Retrieved February 25, 2014. "Hubs: Atlanta, Cincinnati, Detroit, Minneapolis-St. Paul, New York-JFK, Salt Lake City, Paris-Charles de Gaulle, Amsterdam and Tokyo-Narita". 25 February 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்டா_ஏர்லைன்ஸ்&oldid=3711247" இலிருந்து மீள்விக்கப்பட்டது