டெலிகிராம் (மெசேஜிங் சர்வீஸ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெலிகிராம்
உருவாக்குனர் டெலிகிராம் மெசெஞ்சர் LLP
துவக்க வெளியீடு 14 ஆகத்து 2013
இயக்குதளம் க்ராஸ் பிளாட்பார்ம்
மொழிகள் ஆங்கிலம்,அரபிக்,ஸ்பானிசஷ்,ஜெர்மன்,கொரியன்,டச்,போர்த்துகீஷ்..
வளர்ச்சி நிலை செயல்பாட்டில் உள்ளது
வகை உடனடி தகவல் பரிமாற்றம்
அனுமதி
இணையத்தளம் telegram.org

தந்தி (Telegram) நுண்ணறி அலைபேசிகளில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்ற செயலி ஆகும்.மேக அடிப்படையில் தொலை பேசி எண்னை அடையாளமாக கொண்டு சேவை வழங்கிறது. தந்தி வாடிக்கையாளர்கள் செய்திகளை அலைபேசி (ஆண்ட்ராய்டு, iOS, விண்டோஸ் தொலைபேசி), மேசை கணனிகளில் (விண்டோஸ், macOS,லினக்ஸ்

ஆகியவற்றின் மென்பொருள் மூலம் பெற முடியும். உலவிகள் வழியாகவும் அணுக முடியும். இது குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் இரண்டும் சேர்ந்த கலவையாகும்.புகைப்படங்கள், காணொளிகள், ஒட்டிகள், ஒலி, மற்றும் கோப்புகள் போன்றவை  எந்த வகையில் இருந்தாலும் பரிமாற்றம் செய்ய முடியும்.தந்தி தகவல்களை பரிமாற்றம் செய்யும் போது End-to-end மறைகுறியாக்கப்பட்ட வசதியை வழங்குகிறது. இதன் செயலிகள் திறந்த மூல மென்பொருள்ஆகும். வழங்கி தனியுடைமையாகவும் உள்ளது.

வரலாறு.[தொகு]

தந்தி முதன்முதலில் 14 ஆகத்து 2013 ல் IOS இயங்குதளத்தில் அறிமுகபடுத்த்பட்டது. மற்றும் 20 அக்டோபா் 2013 ஆல்பா பதிப்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு அறிமுகபடுத்த்ப்பட்டது. பாவெல் டுரவ்( Pavel Durov) தந்தி செயலிக்கு பொருளாதார பங்களிப்பும், நிகோலை டுரவ் (Nikolai Durov) தொழில் நுட்ப பங்களிப்பும் அளித்தனா். இதன் மேம்படுத்துனா் குழு துபாயை சாந்ததாக உள்ளது. அதிக பட்ச மேம்படுத்தனா்கள் St. Petersburg ஐ சாரந்தவா்கள்.

வசதிகள்.[தொகு]

தந்தி வேகமான நம்பகதன்மை கொண்ட சேவையாகும். இதில் நபா்களையோ சொற்களையோ குறிபிட, பதிளிக்க,மறைமுக அரட்டைமற்றும் ஹேஷ் குறியீடுகளை பயன்படுத்த முடியும். தந்தி குழுக்களில் 1,00,000 நபா்கள் வரை இணைக்க முடியும் [2]. குழு ஆளுநா்களுக்குகான தனித்துவமான வசதிகளையும் கொண்டுள்ளது. தனித்துவமான ஒட்டிகளை உருவாக்கவும்,பயன்படுத்தவும் வசதியளிக்கிறது. தகவல்கள் அனைத்தும் மேக கனிணியில் பதியப்படுவதால் எங்கும் பெறமுடியும். அதிக பட்ச கோப்பின் அளவு 1.5 GB ஆகும். இவையனைத்தும் கட்டனமற்ற,விளம்பரங்களற்ற சேவையாகும்.

மேற்கோள் :

https://telegram.org [3]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; teleapps என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. Telegram F.A.Q., https://telegram.org/faq#q-what-is-telegram-what-do-i-do-here, பார்த்த நாள்: 2018-05-09 
  3. Telegram – a new era of messaging, https://telegram.org, பார்த்த நாள்: 2018-05-09