டெர்ட்-பியூட்டைல் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்ட் பியூட்டைல் குளோரைடு
tert-Butyl chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-குளோரோ-2-மெத்தில்புரோப்பேன்
வேறு பெயர்கள்
1,1-டைமெத்தில் எத்தில்குளோரைடு
1-குளோரோ-1,1-டைமெத்திலீத்தேன்
குளோரோடிரைமெத்தில்மெத்தேன்
டிரைமெத்தில்குளோரோமெத்தேன்
t-பியூட்டைல் குளொரைடு
இனங்காட்டிகள்
507-20-0 Y
ChEMBL ChEMBL346997 Y
ChemSpider 10054 Y
EC number 208-066-4
InChI
  • InChI=1S/C4H9Cl/c1-4(2,3)5/h1-3H3 Y
    Key: NBRKLOOSMBRFMH-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10486
வே.ந.வி.ப எண் TX5040000
SMILES
  • ClC(C)(C)C
UN number 1127
பண்புகள்
C4H9Cl
வாய்ப்பாட்டு எடை 92.57 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.851 கி/மி.லி
உருகுநிலை −26 °C (−15 °F; 247 K)
கொதிநிலை 51 °C (124 °F; 324 K)
சிறிதளவு நீரில் கரையும், ஆல்ககால் ஈதரில் கலக்கும்
ஆவியமுக்கம் 34.9 கிலோபாசுக்கல் (20 °செல்சியசில்)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு தீப்பற்றும்
R-சொற்றொடர்கள் R12, R36/37/38
S-சொற்றொடர்கள் S7, S9, S16, S29, S33
தீப்பற்றும் வெப்பநிலை −9 °C (16 °F; 264 K) (திற்ந்த குவளை)
−23 °செல்சியசு (மூடிய குவளை)
Autoignition
temperature
540 °C (1,004 °F; 813 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

டெர்ட்-பியூட்டைல் குளோரைடு (tert-Butyl chloride) என்பது C4H9Cl அல்லது (CH3)3CCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூவிணைய பியூட்டைல் குளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். மூவிணைய பியூட்டைல் கார்பன் சட்டகத்தில் குளோரினை பதிலீடு செய்த சேர்மமாக இது உருவாகிறது. நிறமற்றதாகவும் தீப்பிடித்து எரியக்கூடிய திரவமாகவும் டெர்ட்-பியூட்டைல் குளோரைடு காணப்படுகிறது. தண்ணீரில் மிகக் குறைவாக கரைகிறது. நீராற்பகுப்பு அடைந்து தொடர்புடைய மூவிணைய பியூட்டைல் ஆல்ககாலாக மாறுகிறது. பிற கரிமச் சேர்மங்களை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக டெர்ட்-பியூட்டைல் குளோரைடு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது [1].

வினைகள்[தொகு]

தண்ணீரில் கரையும்போது நீராற்பகுப்பு அடைந்து தொடர்புடைய மூவிணைய பியூட்டைல் ஆல்ககாலாக மாறுகிறது. ஆல்ககாலில் கரைந்தால் தொடர்புடைய மூவிணைய பியூட்டைல் ஈதர்கள் உருவாகின்றன.

தயாரிப்பு[தொகு]

மூவிணைய பியூட்டைல் ஆல்ககாலுடன் ஐதரசன் குளோரைடு சேர்த்து வினைபுரியச் செய்தால் டெர்ட்-பியூட்டைல் குளோரைடு உருவாகிறது. ஆய்வகங்களில் தயாரிக்கையில் அடர் ஐதரோ குளோரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. SN1 வகை வினையாக நிகழும் இவ்வினை இங்கு தரப்பட்டுள்ளது [2]

படிநிலை1
படிநிலை 2
படிநிலை 3
ஆல்ககாலை அமிலம் புரோட்டானேற்றம் செய்து ஒரு நல்ல விடுபடும் குழு உருவகிறது. (தண்ணீர்).
தண்ணீர் புரோட்டானேற்ற t-BuOH இடமிருந்து விடுபட்டு நிலைப்புத் தன்மையுள்ள மூவிணைய கார்போ நேர்மின் அயனியாக உருவாகிறது..
குளோரைடு அயனி கார்போ நேர்மின் அயனியைத் தாக்கி t-BuCl. உருவாகிறது.

எனவே ஒட்டுமொத்த வினை இவ்வாறு அமைகிறது:

.

ஏனெனில் டெர்ட்-பியூட்டனால் ஒரு மூவிணைய ஆல்ககாலாகும். படிநிலை இரண்டில் கார்போ நேர்மின் அயனியில் நிலைப்புத்தன்மை SN1 வழிமுறையை அனுமதிக்கிறது. ஆனால் முதல்நிலை ஆல்ககாலாக இருந்தால் SN2 வழிமுறை நிகழும்.

பயன்[தொகு]

ஆக்சிசனேற்றத் தடுப்பியான டெர்ட்-பியூட்டைல்பீனால் மற்றும் வாசனைப் பொருளான நியோயெக்சைல் குளோரைடு தயாரிக்கவும் டெர்ட்-பியூட்டைல் குளோரைடு பயன்படுகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 M. Rossberg et al. "Chlorinated Hydrocarbons" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2006, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a06_233.pub2
  2. James F. Norris and Alanson W. Olmsted "tert-Butyl Chloride" Org. Synth. 1928, volume 8, pp. 50. எஆசு:10.15227/orgsyn.008.0050

புற இணைப்புகள்[தொகு]