டெரிக் ஓ பிரியன்
தோற்றம்
டெரிக் ஓ பிரியன் (Derek O' Brien 13 மார்ச்சு 1961) என்பவர் இந்தியாவின் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்தவர். தொலைக்காட்சியில் போர்ன் விட்டா வினா விடைப் போட்டி நடத்துபவர்.
டெரிக் ஓ பிரியன் கொல்கத்தாவில் பிறந்த ஆங்கிலோ-இந்தியர் ஆவார். தொலைக்காட்சியில் மட்டுமல்லாமல் பள்ளிகளுக்கு இடையேயும் வினா விடைப் போட்டிகள் நடத்தினார். 2004 ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரசுக் கட்சியில் சேர்ந்தார்.[1]
இவருடைய தந்தை நீல் ஓ 'பிரையன் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் மூன்று முறை மேற்கு வங்க சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.[2]