டெய்ட்ரே கிரிஸ்வோல்ட்

டெய்ட்ரே கிரிஸ்வோல்ட் (Deirdre Griswold) என்பவர் அமெரிக்க கம்யூனிச அரசியல் செயற்பாட்டாளராகவும், தொழிலாளர் உலகக் கட்சியின் செய்தித்தாளான தொழிலாளர் உலகத்தின் ஆசிரியராகவும், அமெரிக்க ஜனாதிபதி பதவியின் முன்னாள் வேட்பாளராகவும் உள்ளார். இவர் 1980-இல் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தொழிலாளர் உலகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். கேவ்ரியல் ஹோம்ஸ் என்பவர் அவருக்குத் துணையாக இருந்தார்.
கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான வின்சென்ட் கோப்லாண்ட் என்பவர் இவரது தந்தையாவார். .[1]. அவரது தாயார் எலிசபெத் ரோஸ் கோப்லாண்ட் மற்றும் தந்தைவழி அத்தை சிந்தியா கோக்ரான் ஆகியோரும் பொதுவுடைமைவாதிகள் ஆவர். அவர் ஆண்டி ஸ்டாப் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[2] “தொழிலாளர் உலகம்” இதழின் ஆசிரியராகப் பல தசாப்தங்கள் பொறுப்பு வகித்தார்.[3]
2004ல் ஜனாதிபதி பதவிக்கு மூன்றாம் தரப்பு வேட்பாளருக்கு துணையாக கிரிஸ்வோல்ட் இருந்தார். பிப்ரவரி 12, 2018 அன்று, கிரிஸ்வோல்ட் "டக்கர் கார்ல்சன் இன்றிரவு" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் அவர் வட கொரியா அரசை ஆதரித்துப் பேசினார்.[4]
நூலியல்
[தொகு]- சீனா: தொழிலாளர் உலகத்தின் பக்கங்களிலிருந்து (1972) (சாம் மார்சி மற்றும் நவோமி கோஹனுடன்)
- எத்தியோப்பியன் புரட்சி மற்றும் யு.எஸ். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் (1978)
- நேரில் பார்த்தவர் எத்தியோப்பியா: தொடரும் புரட்சி (1979)
- இந்தோனேசியா: தி பிளட்பத் தட் வாஸ் (1975)
- இந்தோனேசியா: நூற்றாண்டின் இரண்டாவது மிகப்பெரிய குற்றம் (1978)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.nytimes.com/1993/06/10/obituaries/vincent-copeland-77-is-dead-led-anti-war-protests-in-1960-s.html
- ↑ William Yardley (September 14, 2014). "Andy Stapp, Who Tried to Unionize the Military, Dies at 70". The New York Times. Retrieved September 28, 2014.
- ↑ Hafetz, David (May 2, 2004). "CITYPEOPLE; Last of the True Believers". The New York Times. https://www.nytimes.com/2004/05/02/nyregion/citypeople-last-of-the-true-believers.html. பார்த்த நாள்: 13 February 2018.
- ↑ Baragona, Justin (February 12, 2018). "https://www.mediaite.com/tv/tucker-carlson-and-north-korea-sympathizer-go-at-it-in-insanely-off-the-rails-segment/". Mediaite. Retrieved 13 February 2018.
{{cite web}}: External link in(help)|title=