டெய்சி ஹாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெய்சி ஹாசன்( Assamese:ডেইজী হাচান) ஷில்லாங், மேகாலயாவைச் சேர்ந்த இந்திய-ஆங்கில மொழி எழுத்தாளரும் டு-லெட் ஹவுஸ் என்ற புகழ்பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார். 2008 ஆம் ஆண்டு, இவரின் இந்த புத்தகம் மான் ஆசிய இலக்கியப் பரிசுக்காக [1] பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் 2010 ம் ஆண்டில் தி இந்து இலக்கிய பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு[தொகு]

டெய்சி ஹாசன் ஐக்கிய ராச்சியத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கல்வியாளர், ஊடக தயாரிப்பாளர் மற்றும் நாவலாசிரியர் என பல திறமைகளைக் கொண்டுள்ள இவர், இந்திய ஊடக மையம் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நாடகம் மற்றும் அசைபடங்களில் ஆர்வம் கொண்ட இவர் தேசிய செய்தித்தாள்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வருகிறார். தெரு நாடகங்களை எழுதி, அவற்றில் நடித்தும் வருகிறார். [2] இங்கிலாந்தின் ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், இந்திய ஊடக மையத்தில், ஆராய்ச்சியாளராக சேருவதற்கு முன்பாக,  அவர் லீட்ஸ் யுகே பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவு பரிமாற்ற திட்டத்தின் கீழ் மோதல் சூழ்நிலைகளில் தெற்காசிய பெண்கள் கலை பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளார். [3]

இவரது முக்கியமான படைப்புகளில் ஒன்றான டு-லெட் ஹவுஸ் 2010 ம் ஆண்டில் தி இந்து சிறந்த புனைகதை விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. [4]

மேலும் இவர் புஷ் தியேட்டரின் 2011 ம் ஆண்டின் கலைத்திட்டமான அறுபத்தி ஆறு புத்தகங்கள் என்பதில் கிங் ஜேம்ஸ் வேதகாமப் பதிப்பின் அடிப்படையில் ஒரு படைப்பை எழுதி பங்கெடுத்துள்ளார். [5] ஆங்கில மொழியில் பல்வேறு ஆராய்ச்சி புத்தகங்களை எழுதியுள்ளார்.

விருதுகள்[தொகு]

  • 2010 (அக்டோபர்) – லீட்ஸ் பல்கலைக்கழகம், HEFCE உயர் கல்வி கண்டுபிடிப்பு நிதியம் (HEIF) கூட்டாக BKK அறிவு பரிமாற்றக் குழு திட்டக் குழுவிற்கு வழங்கப்பட்டது.
  • 2010 (ஜனவரி) – ஆராய்ச்சி கவுன்சில்கள் யுகே ஆரம்பகால தொழில் ஆராய்ச்சியாளர்கள் பயண நிதியுதவி மானியம்
  • 2010 (மார்ச்) – காமன்வெல்த் அறக்கட்டளை, சிவில் சொசைட்டி கிராண்ட் ரெஸ்பான்சிவ் கிராண்ட் BKK அறிவு பரிமாற்றக் குழு திட்டக் குழுவிற்கு கூட்டாக வழங்கப்பட்டது
  • 2008 - 2009, சர் டோராப்ஜி டாடா பெல்லோஷிப் ஆஃப் ஃபோக்லோர் ரிசர்ச், இந்தியாவின் தேசிய நாட்டுப்புற மையத்தால் வழங்கப்பட்டது
  • 2007-2008, பப்ளிக் சர்வீஸ் பிராட்காஸ்டிங் டிரஸ்ட் (PSBT), புது தில்லி, மூத்த மீடியா பெல்லோஷிப் கிராண்ட்
  • 2002 - 2005, சர்வதேச பெல்லோஷிப் திட்டம் (ஃபோர்டு அறக்கட்டளை) [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Divya Kumar (2010-10-10). "The Homecoming". Beta.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-18.
  2. "Authors page". Tarabooks. Archived from the original on 20 September 2016. பார்க்கப்பட்ட நாள் 2012-06-18.
  3. "Jaipur Literature Festival". Jaipur Literature Festival. Archived from the original on 8 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-06-18.
  4. "The Hindu Best Fiction Award 2010 Shortlist". Thehindu.com. 2010-10-01. பார்க்கப்பட்ட நாள் 2012-06-18.
  5. "Bush Theatre". Archived from the original on 4 July 2011. பார்க்கப்பட்ட நாள் 19 June 2012.
  6. "டாக்டர் டெய்சி ஹசன்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெய்சி_ஹாசன்&oldid=3673725" இலிருந்து மீள்விக்கப்பட்டது