உள்ளடக்கத்துக்குச் செல்

டெம்பிள் கிராண்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெம்பிள் கிராண்டின்
2011 இல் டெம்பிள் கிராண்டின்
பிறப்புமேரி டெம்பிள் கிராண்டின்[1]
ஆகத்து 29, 1947 (1947-08-29) (அகவை 76)
பாஸ்டன்,மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
துறை
பணியிடங்கள்கொலராடோ மாகாணப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்
அறியப்படுவது
 • கால்நடைத் துறையின் ஆலோசகர்
 • மதியிறுக்க உரிமைச் செயற்பாட்டாளர்
இணையதளம்
templegrandin.com

மேரி டெம்பிள் கிராண்டின் (Mary Temple Grandin, ஆகஸ்ட் 29, 1947 ); ஒரு அமெரிக்கரும், கொலராடோ மாகாண பல்கலைக்கழகத்தில் கால்நடை அறிவியல் துறை பேராசிரியரும் ஆவார். கால்நடைகளின் நடத்தை குறித்த கால்நடைத் துறையின் ஆலோசகரும், மன இறுக்கம் குறித்த பேச்சாளரும் ஆவார். மன இறுக்கக் குறைபாடு குறித்த தன் சொந்த அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளும் நபர்களில் முதலாமவர்களில் ஒருவர் ஆவார். மன இறுக்கக் குறைபாடுள்ளவர்களை அமைதியாக வைத்திருக்க " கட்டிப்பிடிப்புப் பெட்டி " என்ற சாதனத்தை அவர் கண்டுபிடித்தார். 2010 டைம் 100 ல், உலகின் 100 மிக செல்வாக்குள்ள மக்கள் பட்டியலில், "ஹீரோஸ்" பிரிவில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.[2] எம்மி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்ற படமான டெம்பிள் கிராண்டின் இவரது வாழ்க்கையைப் பற்றிய படமாகும்.

இளமையும் கல்வியும்

[தொகு]

மேரி டெம்பிள் கிராண்டின் மாசசூசெட்ஸ்சில் உள்ள பாஸ்டனில் மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார். குடும்பத்திற்காகப் பாடுபட்ட அயர்லாந்துப் பெண்மணியான மேரி என்பவர் நினைவாக இவருக்கு அப்பெயர் வைக்கப்பட்டது. குழப்பம் வராமலிருக்க இவருடைய பெயருடன் டெம்பிள் என்பது இணைக்கப்பட்டது.[3]

இவரது தாயார் அன்னா யூஸ்டாசியா புர்வஸ் (தற்பொழுதைய பெயர் கட்லர்) ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திலிருந்து ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர் அவர் ஒரு பாடகரும் நடிகையும் ஆவார். மேலும் தானியங்கி விமானப் போக்குவரத்தை இணைந்து கண்டறிந்தவர்களுள் ஒருவரான ஜான் கோல்மன் புர்வெஸ் என்பவரின் பேத்தி ஆவார்.[4] அவரது தந்தை ரிச்சர்ட் மெக்கர்டி கிராண்டின்,[5][6] வீடு, மனை, வாங்கி விற்பனை செய்யும் முகவராகவும், அந்த காலத்திலேயே அமெரிக்காவின் மிகப்பெரிய பெருநிறுவன கோதுமைப் பண்ணை வணிகத்தை நடத்தி வந்தார். அவரது நிறுவனத்தின் பெயர் கிராண்டின் ஃபார்ம்ஸ் ஆகும்.[7] டெம்பிள் மேரிக்கு 15 வயதாகும் போது அவரது பெற்றோர் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர் அவரது தாயார் 1965 இல் நியூயார்க்கின் புகழ்பெற்ற சாக்ஸஃபோன் கலைஞராக பென் கட்லர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[8] டெம்பிள் கிராண்டிற்கு 18 வயதாக இருக்கும் போது, 1993 இல் கலிபோர்னியாவில் அவரது தந்தை ரிச்சர்ட் காலமானார். கிராண்டின் நான்கு குழந்தைகளில் மூத்தவர். இவருக்கு மூன்று இளம் உடன்பிறந்தவர் இருந்தனர். இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் ஆவர். கிராண்டின் தன் சகோதரிகளில் ஒருவருக்கு டிஸ்லெக்ஸியா எனப்படும் எழுத்து மயக்க நோய் இருப்பது குறித்து விவரித்துள்ளார். அவரது இளைய சகோதரி ஒரு ஓவியர் ஆவார். அவரது மற்றொரு சகோதரி ஒரு சிற்பி ஆவார். அவரது சகோதரர் வங்கியாளர் ஆவார்.[7][9]

டெம்பிளின் பெற்றோர் வழி தாத்தாவாட ஜான் லிவிங்ஸ்டன் கிராண்டின் மற்றும் அவரது சகோதரர் வில்லியம் ஜேம்ஸ் கிராண்டின் ஆகியோர், பிரெஞ்சு ஹூகுநொட்ஸ் வம்சாவ்ழியினர் ஆவார். இவர்கள் ஜான் டி. ராக்பெல்லருடன் எண்ணைக் கிணறு தோண்டுவதற்கான ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஆனால் ராக்பெல்லர் வருவதற்கு மிக நீண்ட காலம் ஆனதால் அவர்கள் வங்கித்தொழிலுக்குத் திரும்பினர். ஜே குக் 'என்பவரது நிறுவனம் சரிந்த பொழுது வடக்கு டகோட்டாவிலிருந்த அவரது முழு வளர்ச்சி அடையாத நிலத்தின் ஆயிரக்கணக்கான ஏக்கர்களை இவர்கள் தன்னுடன் இணைத்துக் கொண்டனர் ரெட் ஆற்றின் பள்ளத்தாக்கில் கோதுமை பண்ணை அமைத்து அந்நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்காக அந்நிலத்தில் தங்குமிடங்களை அமைத்தனர். வடக்கு டகோட்டாவின் கிராண்டின் நகரம் ஜான் லிவிங்ஸ்டன் கிராண்டின் என்பவரது நினைவாக அவர் இறப்பிற்குப் பின் பெயரிடப்பட்டது.[10][11] ஆங்கிலிக கிறித்துவ அடிப்படை கோண்ட ம் எபிஸ்கோபல் மதம் சார்ந்து வளர்க்கப்பட்டாலும், டெம்பிள் கிராண்டின் தனிப்பட்ட கடவுள் வழிபாட்டை விடகடவுள் பற்றிய அறிவியல் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டிருந்தார்.[12]

மேற்கோள்கள்

[தொகு]
 1. Montgomery, Sy (April 3, 2012). Temple Grandin: How the Girl Who Loved Cows Embraced Autism and Changed the World. Houghton Mifflin Books for Children. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0547443153.
 2. Marc Hauser (April 29, 2010). "The 2010 Time 100. In our annual TIME 100 issue, we name the people who most affect our world: Temple Grandin". Time இம் மூலத்தில் இருந்து 2010-12-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101229234346/http://www.time.com/time/specials/packages/article/0,28804,1984685_1984949_1985222,00.html. பார்த்த நாள்: 2010-12-29. 
 3. page 204 of A Thorn in My Pocket: Temple Grandin's Mother Tells the Family Story by Eustacia Cutler
 4. Chapter 10 of A Thorn in My Pocket: Temple Grandin's Mother Tells the Family Story by Eustacia Cutler
 5. https://www.geni.com/people/Richard-Grandin/6000000018885300108
 6. "United States Federal Census". Geni - a MyHeritage Company. August 5, 2015. பார்க்கப்பட்ட நாள் March 9, 2016.
 7. 7.0 7.1 Grandin, Temple (n.d.). "Autism Research Institute". Autism Research Institute. Archived from the original on மார்ச் 6, 2016. பார்க்கப்பட்ட நாள் March 9, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 8. "Ben Cutler, 96, Whose Bands Entertained the Society Set". The New York Times. 2001-01-15. https://www.nytimes.com/2001/01/15/arts/ben-cutler-96-whose-bands-entertained-the-society-set.html. 
 9. page 205 of A Thorn in My Pocket: Temple Grandin's Mother Tells the Family Story by Eustacia Cutler
 10. Chapter 10 The Legacy Of Genes in "A Thorn in My Pocket: Temple Grandin's Mother Tells the Family Story" by Eustacia Cutler
 11. Federal Writer's Project of the Works Progress Administration for the State of North Dakota (1977). The WPA Guide To 1930s North Dakota (2nd ed.). State Historical Society of North Dakota. pp. 193–194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1891419145.
 12. Sacks, Oliver (1996). An anthropologist on Mars: Seven paradoxical tales. New York: Vintage Books: A division of Penguin Random House, LLC. p. 282.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெம்பிள்_கிராண்டின்&oldid=3581614" இலிருந்து மீள்விக்கப்பட்டது