உள்ளடக்கத்துக்குச் செல்

டென்னிசி அரசுப் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 36°10′00″N 86°49′50″W / 36.16667°N 86.83056°W / 36.16667; -86.83056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டென்னிசி அரசுப் பல்கலைக்கழகம்
Tennessee State University
சின்னம்
முந்தைய பெயர்கள்
டென்னிசி ஏ & ஐ கல்லூரி, டென்னிசி நீக்ரோ பள்ளி
குறிக்கோளுரைThink. Work. Serve
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
எண்ணுக. செயக. சேவையாற்றுக
வகைபொது
உருவாக்கம்சூன் 19, 1912 (1912-06-19)
நிதிக் கொடை$47 மில்லியன்[1]
கல்வி பணியாளர்
483
மாணவர்கள்8,816 [2]
பட்ட மாணவர்கள்6,749
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்2,067
அமைவிடம், ,
ஐக்கிய அமெரிக்கா

36°10′00″N 86°49′50″W / 36.16667°N 86.83056°W / 36.16667; -86.83056
வளாகம்Urban, 903 acres (4 km²)
நிறங்கள்நீலம், வெள்ளை
         
தடகள விளையாட்டுகள்கல்லூரிகளுக்கிடையிலான தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு
சுருக்கப் பெயர்டைகர்ஸ்
சேர்ப்புஓஹியோ வேலி கான்பரன்ஸ்
இணையதளம்tnstate.edu
சின்னம்

டென்னிசி அரசுப் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் டென்னிசியில் உள்ள நாஷ்வில்லே நகரில் உள்ளது.

கல்லூரிகள்

[தொகு]

பொறியியல் கல்லூரி

[தொகு]

இந்த கல்லூரியை பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அங்கீகார வாரியம் அங்கீகரித்துள்ளது. கட்டிடக்கலைப் பொறியியல், கணிப்பொறியியல், மின்பொறியியல், இயந்திரப் பொறியியல், வானூர்திப் பொறியியல், கணிதம் உள்ளிட்ட பிரிவுகளை இளநிலை மாணவர்கள் படிக்கின்றனர். கணிப்பொறியியல், பொறியியல், கட்டிடப் பொறியியல், சூற்றுச்சூழலியல், மின்பொறியியல், இயந்திரப் பொறியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முது நிலை மாணவர்கள் படிக்கின்றனர்.

வணிகக் கல்லூரி

[தொகு]

மேம்பட்ட வணிகக் கல்லூரிகளின் கூட்டமைப்பின் அங்கீகாரத்தைப் பெற்றது. இள நிலை, முது நிலை வகுப்புகளில் வணிகப் பாடப்பிரிவுகளைப் படிக்கின்றனர்.

கலைக் கல்லூரி

[தொகு]
  • கலை - இள நிலை
  • இசை - இள நிலை, முது நிலை
  • சமூக சேவை - இள நிலை

கல்விக் கல்லூரி

[தொகு]
  • கல்வி - இள நிலை, முது நிலை
  • உளவியல் - இள நிலை

உடல்நலக் கல்விக் கல்லூரி

[தொகு]
  • பல்மருத்துவம் - இள நிலை
  • உடல் நல நிர்வாகமும் திட்டமிடலும்
  • உடல் நலத் தகவல் மேலாண்மை - இள நிலை
  • மருத்துவத் தொழில் நுட்பம் - இள நிலை

வேளாண் கல்லூரி

[தொகு]
  • குடும்பம் மற்றும் வாடிக்கையாளர் கல்வி - முது நிலை

அரசுக் கல்விக் கல்லூரி

[தொகு]
  • பொது நிர்வாகம் - முது நிலை

வளாகம்

[தொகு]

முதன்மை வளாகம் 450 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த வளாகத்துக்குள் 65 கட்டிடங்கள் உள்ளன. அவான் வில்லியம்ஸ் வளாகம் டவுன்டவுனில் அமைந்துள்ளது. வளாகத்துக்குள் மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளும் உள்ளன.

விளையாட்டு

[தொகு]

இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் குழுக்களாக இணைந்து விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். கல்லூரிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்கின்றனர்.[3]

சான்றுகள்

[தொகு]
  1. 22 மே, 2013 அன்று வரை. "U.S. and Canadian Institutions Listed by Fiscal Year 2009 Endowment Market Value and Percentage Change in Endowment Market Value from FY 2008 to FY 2009" (PDF). 2009 NACUBO-Commonfund Study of Endowments. National Association of College and University Business Officers. Archived from the original (PDF) on டிசம்பர் 14, 2017. பார்க்கப்பட்ட நாள் February 15, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. http://www.tnstate.edu/ir/Quick%20Facts%202013.pdf
  3. Tennessee State Tigers Athletics

இணைப்புகள்

[தொகு]
  • tnstate.edu – பல்கலைக்கழகத்தின் இணையதளம்