டென்னசி பள்ளத்தாக்குத் திட்டம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
டென்னசி பள்ளத்தாக்குத் திட்டம்[1](Tennessey Valley Authority) - நியூ டீல்[2] கொள்கை மூலம் ஏற்படுத்தப்பட்ட சிறந்த திட்டங்களுள் ஒன்று டென்னசி பள்ளத்தாக்குத் திட்டம் ஆகும். இது பள்ளத்தாக்கில் திட்டமிடும் ஒரு நல்ல பரிசோதனையாக அமைந்தது. இயற்கை வளத்தைக் கொண்டு தொழிற்பெருக்கத்தை ஏற்படுத்துவது, விவசாய வளத்தை ஊக்குவிப்பது என்ற இருநோக்கங்களோடு டென்னசி பள்ளத்தாக்குத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை நெப்பிராஸ்கானைச் சார்ந்த நாரிஸ்[3] என்பவர் கொண்டுவந்தார்.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன:
- இது மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட டென்னசி பள்ளத்தாக்குப் பகுதியில் ஒரு அணை அமைய உதவியது.
- மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.
- இத்திட்டத்தின் மூலம் மண் அரிப்பு தடுக்கப்பட்டது.
- வெள்ளச் சேதம் குறைக்கப்பட்டது.
- தொழிற்சாலைகள் உற்பத்தியை அதிகரித்தன.
- நீர்ப்பாசனம் பெருக்கப்பட்டது.
- விவசாயம் விரிவடைந்தது.
டென்னசி நதிப்பள்ளத்தாக்குத் கிட்டத்தட்ட நாற்பதினாயிரம் சதுர மைல்கள் பரவியிருந்தது. மிகப்பெரிய அளவில் அனைவரும் பயன்பெறும் ஒரு பெரிய அரசுத் தொழில் நிறுவனமாக அது விளங்கியது. இவற்றால் கி.பி.1929 ஆம் ஆண்டு ஏற்பட்ட மந்தநிலை திறமையுடன் சமாளிக்கப்பட்டது.