டெட் டெக்ஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெட் டெக்ஸ்டர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டெட் டெக்ஸ்டர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 388)சூலை 24 1958 எ நியூசிலாந்து
கடைசித் தேர்வுஆகத்து 22 1968 எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 62 327 43
ஓட்டங்கள் 4,502 21,150 1,209
மட்டையாட்ட சராசரி 47.89 40.75 33.58
100கள்/50கள் 9/27 51/108 1/8
அதியுயர் ஓட்டம் 205 205 115
வீசிய பந்துகள் 5,317 26,255 575
வீழ்த்தல்கள் 66 419 21
பந்துவீச்சு சராசரி 34.93 29.92 19.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 9 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 2 0
சிறந்த பந்துவீச்சு 4/10 7/24 3/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
29/– 231/– 16/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 17 2009

டெட் டெக்ஸ்டர் (Ted Dexter, பிறப்பு: மே 15 1935, இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 62 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 327 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 43 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1958- 1968 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

டெக்ஸ்டர் நோர்போக் ஹவுஸ், பீக்கன்ஸ்ஃபீல்ட் மற்றும் ராட்லி கல்லூரியில் இவர் கல்வி பயின்றார், அங்கு இவர் 1950 முதல் 1953 வரை முதல் லெவன் போட்டியில் விளையாடினார், ஆரம்பத்தில் இழப்புக் கவனிப்பாளராகவும், 1953 இல் தலைவராகவும் இருந்தார்.1953–55 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மலாயா அவசரகாலத்தின் போது 11 வது ஹுஸர்களில் இரண்டாவது லெப்டினெண்டாக தனது தேசிய சேவையைச் செய்தார். இவருக்கு அவரது பணியினைப் பாராட்டி மலாயா பிரச்சார பதக்கம் வழங்கப்பட்டது. டெக்ஸ்டர் அக்டோபர் 1955 இல் கேம்பிரிட்ஜ் இயேசு கல்லூரியில் ச் சேர்ந்தார். அங்கு இவர் தனது துடுப்பாட்டத் திறனுக்காக ப்ளூவை வென்றார்.

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

1956, 1957 மற்றும் 1958 ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழக போட்டியில் அணியின் தலைவராக விளையாடியதோடு கூடுதலாக கோல்ஃப் மற்றும் ரக்பி கால் பந்துப் போட்டிகளையும் விளையாடினார். 1957 ஆம் ஆண்டில் ஜென்டில்மேன் அணிக்காக இவர் 8 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 இழப்புகளைக் கைப்பற்றினார். மேலும் மற்றொரு போட்டியில் 47 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இழப்புகளைக் கைப்பற்றினார். அதே ஆண்டில் சசெக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட சங்கத்தில் சேர்ந்தார். இவர் 1958 இல் நியூசிலாந்திற்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போடியில் இவர் அறிமுகமானார், 52 ஓட்டங்கள் எடுத்தார் , 1958-59ல் பீட்டர் மேவின் தலைமையிலான மேரிலபோன் துடுப்பாட்ட சங்கத்திற்கு எதிரான ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஈ.டபிள்யூ ஸ்வாண்டன் நினைத்தார். [1] இறுதியில் இவர் பீட்டர் மேவின் காயத்தால் பாதிக்கப்பட்ட அணியை வலுப்படுத்த பாரிஸிலிருந்து (இவரது மனைவி ஒரு விளம்பர மாதிரியாக பணிபுரிந்து கொண்டிருந்தார்) மீண்டும் அணிக்குத் திரும்பினார்.நியூசிலாந்து சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். 1959 ஆம் ஆண்டில் இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடருக்கு இவர் தேர்வானார். இதன் முதல் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 132 ஓட்டங்களையும் நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 110 ஓட்டங்களையும் எடுத்தார். மொத்தமாக 65.75 எனும் சராசரியில் 526 ஓட்டங்கள் எடுத்து அந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த மட்டையாளர்கள் வரிசையில் இவர் முதலிடம் பெற்றார். 1961 ஆம் ஆண்டின் விசுடன் துடுப்பாட்ட வீரராகத் தேர்வானார்

பிற்கால வாழ்க்கை[தொகு]

டெட் டெக்ஸ்டர் ஒரு திறமையான கோல்ப் வீரராக இருந்தார். இவர் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்யாவிட்டால் அந்த விளையாட்டில் சிறந்து விளங்குவேன் என நினைத்தார். [2] அவர் முன்னாள் கென்ட் கிரிக்கெட் வீரர் டாம் லாங்ஃபீல்டின் மகள் சூசன் ஜார்ஜினா லாங்ஃபீல்ட்டை மணந்தார். வரை கல்லூரியில் சந்ததித்தார்.[3] அவர் ஒரு விளாம்பர மாதிரியாக பணிபுரிந்தார்.இவர் அதிக அளவு வருமானம் ஈட்டினார். [4] அவர்களுக்கு தாமஸ் எனும் ஒரு மகன் மற்றும் ஜெனீவ் எனும் ஒரு மகள் உள்ளனர். அவர் தாராளவாத தி அப்சர்வர் மற்றும் தி சண்டே மிரர் என்ற பத்திரிகைக்காக பணியாற்றினார்.

சான்றுகள்[தொகு]

  1. Swanton, E.W. (1977) Swanton in Australia, with MCC 1946–1975, Fontana, pp. 104–105. ISBN 0002162369.
  2. Gregory, Kenneth (1986), "Cricketers in Other Fields, p. 640 in E.W. Swanton ed. The Barclays World of Cricket, Collins
  3. Arlott, John (1986) John Arlott's 100 Greatest Batsman, Macdonald Queen Anne Press. p. 64. ISBN 0356123650
  4. Trueman, pp. 274, 227–278
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்_டெக்ஸ்டர்&oldid=3007013" இருந்து மீள்விக்கப்பட்டது