உள்ளடக்கத்துக்குச் செல்

டெட்ராமெத்திலமோனியம் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெட்ராமெத்திலமோனியம் புளோரைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
என்,என்,என்-மும்மெத்தில்மெத்தேனமினியம் புளோரைடு
இனங்காட்டிகள்
373-68-2
ChemSpider 61120
EC number 206-769-0
InChI
  • InChI=1S/C4H12N.FH/c1-5(2,3)4;/h1-4H3;1H/q+1;/p-1
    Key: GTDKXDWWMOMSFL-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 67803
  • C[N+](C)(C)C.[F-]
பண்புகள்
C4H12FN
வாய்ப்பாட்டு எடை 93.15 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312, H315, H319, H332, H335
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P322, P330
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டெட்ராமெத்திலமோனியம் புளோரைடு (Tetramethylammonium fluoride) என்பது (CH3)4NF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீருறிஞ்சும் தன்மை கொண்ட வெண்மை நிறமான திண்மமாக இந்த நான்கிணைய அம்மோனியம் உப்பு காணப்படுகிறது. கரைப்பானற்ற புளோரைடு அயனிக்கு இந்த உப்பு ஒரு மூலமாகும். அதாவது புளோரைடு அயனிகள் அணுவுடன் அணைவாகாத அயனியே கரைப்பானற்ற புளோரைடு அயனி எனப்படுகிறது. புளோரைடின் மற்ற கரையக்கூடிய உப்புகளில் பெரும்பாலானவை உண்மையில் பைபுளோரைடுகளாகும். (HF2) . வரலாற்று ரீதியாக, டெட்ராமெத்திலமோனியம் புளோரைடை தயாரிப்பதற்கு இரண்டு முக்கிய அணுகுமுறைகள் உள்ளன: டெட்ராமெத்திலமோனியம் ஐதராக்சைடின் ஐதரோபுளோரிக் அமில நடுநிலைப்படுத்தல் வினையும், வெவ்வேறு அம்மோனியம் உப்புகளுக்கும் KF அல்லது CsF போன்ற கனிம புளோரைடு மூலங்களுக்கும் இடையில் நடைபெறும் உப்பு இடம்பெயரல் வினையும் இவ்விரண்டு அணுகுமுறைகளாகும்.[1] புளோரைடு அயனி மிகவும் காரமானது என்பதால், உப்பு மெதுவாக அசிட்டோ நைட்ரைலுடன் வினைபுரிந்து, இருபடியாக்கம் CH3C(NH2)=CHCN ஆகத் தூண்டுகிறது, இது இணை-படிகமாக்குகிறது.[2]

தொடர்புடைய உப்புகள்

[தொகு]

டெட்ராமெத்தில்பாசுபோனியம் புளோரைடு (CH3)4PF நிலையான அசிட்டோனி நைட்ரைல் கரைசல்களை உருவாக்குகிறது. இது யைலைடு மற்றும் பொட்டாசியம் பைபுளோரைடில் இருந்து தயாரிக்கப்படுகிறது:

(CH3)3P=CH2 + KHF2 → (CH3)4PF + KF

வாயுநிலையான டெட்ராமெத்தில்பாசுபோனியம் புளோரைடு ஒரு பாசுபோரேனாக உள்ளது. ஆனால் அசிட்டோ நைட்ரைல் கரைசலில் சுய அயனியாக்கம் அடைகிறது.[3] மேலும் விரிவான பாசுப்பாசீனியம் உப்பும் ([(CH3)2N)3P]2N+F) அறியப்படுகிறது.[4]

அறுபுளோரோபென்சீனும் டெட்ராபியூட்டைலமோனியம் சயனைடும் சேர்ந்து வினைபுரிவதால் நீரற்ற டெட்ராபியூட்டைலமோனியம் புளோரைடு தயாரிக்கப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Iashin, Vladimir; Wirtanen, Tom; Perea-Buceta, Jesus E. (2022-02-18). "Tetramethylammonium Fluoride: Fundamental Properties and Applications in C-F Bond-Forming Reactions and as a Base" (in en). Catalysts 12 (2): 233. doi:10.3390/catal12020233. பன்னாட்டுத் தர தொடர் எண்:2073-4344. 
  2. Christe, K. O.; Wilson, W. W.; Wilson, R. D.; Bau, R.; Feng, J. A. (1990). "Syntheses, Properties, and Structures of Anhydrous Tetramethylammonium Fluoride and Its 1:1 Adduct with trans-3-Amino-2-butenenitrile". Journal of the American Chemical Society 112 (21): 7619–7625. doi:10.1021/ja00177a025. 
  3. Kornath, Andreas; Neumann, F.; Oberhammer, H. (2003). "Tetramethylphosphonium Fluoride: "Naked" Fluoride and Phosphorane". Inorganic Chemistry 42 (9): 2894–2901. doi:10.1021/ic020663c. பப்மெட்:12716181. 
  4. Schwesinger, Reinhard (2001). "1,1,1,3,3,3-Hexakis(dimethylamino)-1λ5,3λ5-diphosphazenium Fluoride". e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. 1–2. DOI:10.1002/047084289X.rh014m. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235. 
  5. Haoran Sun; Stephen G. DiMagno (2005). "Anhydrous Tetrabutylammonium Fluoride". Journal of the American Chemical Society 127 (7): 2050–1. doi:10.1021/ja0440497. பப்மெட்:15713075.