டெட்ராமெத்தாக்சிமெத்தேன்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டெட்ராமெத்தாக்சிமெத்தேன் | |
| வேறு பெயர்கள்
டெட்ராமெத்தில் ஆர்த்தோகார்பனேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 1850-14-2 | |
| ChemSpider | 67188 |
| EC number | 217-438-5 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 74613 |
| |
| UNII | FHC4GZ2SYJ |
| UN number | 3272 |
| பண்புகள் | |
| C5H12O4 | |
| வாய்ப்பாட்டு எடை | 136.15 கி·மோல்−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் [1] |
| அடர்த்தி | 1.023 கி/செ.மீ3 (25 °செல்சியசு) |
| உருகுநிலை | −5.5 செல்சியசு[1] |
| கொதிநிலை | 114 °செல்சியசு[1] |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | அபாயம் |
| H225, H315, H319, H335 | |
| P210, P261, P305+351+338 | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய நேர் மின்அயனிகள் | டெட்ராமெத்தாக்சிசிலேன் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டெட்ராமெத்தாக்சிமெத்தேன் (Tetramethoxymethane) என்பது C5H12O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது அனுமான நிலை ஆர்த்தோகார்போனிக் அமிலத்தை C(OH)4 (ஆர்தோகார்பாக்சிலிக் அமிலம் தனிநிலையில் உள்ளபோது நிலைப்புத்தன்மையற்றதாகவும், எர்லன்மேயர் விதியை மீறுவதாகவும் உள்ளது) முழுமையாக மெத்திலேற்றம் செய்வதால் முறையாக உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]டெட்ராகுளோரோமீத்தேனிலிருந்து வெளிப்படையான செயற்கை வழி தயாரிப்பு முறையில் விரும்பிய வேதிப்பொருள் உருவாவதில்லை.[2] எனவே டெட்ராமெத்தாக்சிமெத்தேனின் அசல் தயாரிப்பு குளோரோபிக்ரின் அடிப்படையிலானதாகும்:
குளோரோபிக்ரினின் விரும்பத்தகாத பண்புகள் காரணமாக, டெட்ராமெத்தாக்சிமெத்தேனின் தயாரிப்புக்கான தொடக்கப் பொருளாக மற்ற டெட்ராபதிலீட்டு வினைத்திற மீத்தேன் வழிப்பெறுதிகள் ஆராயப்பட்டன. எடுத்துக்காட்டாக, முக்குளோரோதேன்சல்பீனைல் குளோரைடு பயன்படுத்தப்பட்டது.[3][4] இது வேதியியல் போர் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. கார்பன் டைசல்பைடு மற்றும் குளோரின் ஆகியவற்றிலிருந்து எளிதில் அணுகக்கூடியதாகவும் உள்ளது.
முக்குளோரோ அசிட்டோநைட்ரைலை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்பு முறையில் சிக்கல் குறைவான நிலையில் சுமார் 70% விளைபொருளை அடையலாம்[5][6]:[7]
பிற தயாரிப்பு முறைகள் பல்வேறு நூல்களில் விளக்கப்பட்டுள்ளன.[8]
பண்புகள்
[தொகு]டெட்ராமெத்தாக்சிமெத்தேன் நீர் போல தெளிவானதாகவும் நறுமண-வாசனையும், குறைந்த-பாகுத்தன்மை கொண்ட திரவமாகவும் காணப்படுகிறது. இது பெராக்சைடு உருவாவதற்கு எதிராக நிலைப்புத்தன்மையோடு காணப்படுகிறது..[9]
பயன்கள்
[தொகு]கரைப்பானாகப் பயன்படுத்துவதைத் தவிர, டெட்ராமெத்தாக்சிமெத்தேன் பலபடி எரிபொருள் மின் கலங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[10] உயர்ந்த வெப்பநிலையில் (180-200 °செல்சியசு) ஆல்க்கைலேற்றும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.[11] மற்றும் 2-அமினோபென்சாக்சசோல்களின் தயாரிப்புக்கான வினையாக்கியாக இது பயன்படுத்தப்படுகிறது. 2-அமினோபென்சாக்சசோல் சேர்மம் மயக்க மருந்துகள், தசை தளர்த்திகள், பூஞ்சைக் கொல்லிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் மூலக்கூறு கட்டுமானத் தொகுதிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பயன்படுத்தப்படும் பதிலிகளைப் பொறுத்து,"சுமாரானது முதல் சிறப்பானது" வரையிலான் விளைபொருள் கிடைப்பது தொடர்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 H. v. Hartel, Über Existenz und Darstellung des Orthokohlensäure-tetramethylesters, Ber.dtsch.chem.Ges., 60(8), 1841 (1927), எஆசு:10.1002/cber.19270600821.
- ↑ R. H. De Wolfe, Carboxylic ortho acid derivatives: preparation and synthetic applications, Organic Chemistry, Vol. 14, Academic Press, Inc. New York – London, 1970, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-214550-6.
- ↑ H. Tieckelmann, H. W. Post, The preparation of methyl, ethyl, propyl, and butyl orthocarbonates, J. Org. Chem., 13 (2), 265-267 (1948), எஆசு:10.1021/jo01160a014.
- ↑ US-Patent US 4,059,656, Processes for neutralizing 2,3-dibromopropanol phosphoric acid esters contained in tris(2,3-dibromo-1-propyl) phosphate, Erfinder: M. Demarcq, Anmelder: Produits Chimiques Ugine Kuhlmann, erteilt am 22. November 1974.
- ↑ US-Patent US 3,876,708, Orthocarbonic acid esters, Erfinder: R. Speh, W. Kantlehner, Anmelder: Akzo B.V., erteilt am 8. April 1975.
- ↑ US-Patent US 6,825,385 B2, Process for the preparation of orthocarbonates, Erfinder: G. Fries, J. Kirchhoff, Anmelder: Degussa AG, erteilt am 30. November 2004.
- ↑ W. Kantlehner et al., Die präparative Chemie der O- und N-funktionellen Orthokohlensäure-Derivate, Synthesis; 1977(2): 73-90, எஆசு:10.1055/s-1977-24283.
- ↑ W. Kantlehner et al., Die präparative Chemie der O- und N-funktionellen Orthokohlensäure-Derivate, Synthesis; 1977(2): 73-90, எஆசு:10.1055/s-1977-24283.
- ↑ K. R. Kopecky; J. Molina (1987). "Bis(dimethoxymethyl) peroxide and bis(1,1-dimethoxyethyl) peroxide". Canadian Journal of Chemistry 65 (10): 2350. doi:10.1139/v87-392. https://archive.org/details/sim_canadian-journal-of-chemistry_1987-10_65_10/page/2350.
- ↑ US-Patent US 6,864,001, Tetramethyl orthocarbonate fuel cells and systems and methods related thereto, Erfinder: J. Zhang, K. Colbow, Anmelder: Ballard Power Systems Inc., erteilt am 8. März 2005.
- ↑ M. Selva et al., Esters and Orthoesters as Alkylating Agents at High Temperature. Applications to Continuous-flow Processes, J. Chem. Soc., Perkin Trans. 2, 519 (1992), எஆசு:10.1039/P29920000519.