டெட்ராபெர்குளோரேட்டோ அலுமினேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெட்ராபெர்குளோரேட்டோ அலுமினேட்டுகள் (Tetraperchloratoaluminates) என்பவை டெட்ராபெர்குளோரேட்டோ அலுமினேட்டு எதிர்மின் அயனியின் [Al(ClO4)4]− உப்புகளாகும். இந்த எதிர்மின் அயனியில் அலுமினியம் நான்கு பெர்குளோரேட்டு குழுக்களால் நான்முகி வடிவில் சூழப்பட்டுள்ளது. அயனியாக நன்கு அறியப்படும் பெர்குளோரேட்டுகள் இங்கு அலுமினியத்துடன் சகப்பிணைப்பாகப் பிணைந்துள்ளன. அலுமினியத்துடன் இணைந்துள்ள சகப்பிணைப்பு பெர்குளோரேட்டு அயனியைச் சிதைப்பதால் இது நிலைப்புத் தன்மை அற்றதாக்குகிறது [1].

ஆலோபெர்குளோரேட்டோ அலுமினேட்டுகள் இவற்றுடன் தொடர்புடைய வேதிச்சேர்மங்களாகும். இங்கு ஒரு பெர்குளோரோ தொகுதியும், குளோரின் (குளோரோபெர்குளோரோ அலுமினேட்டுகள்) அல்லது புரோமின் போன்ற (புரோமோபெர்குளோரேட்டோஅலுமினேட்டுகள்) மூன்று ஆலசன்கள் அலுமினியத்துடன் இணைந்துள்ளன [2].

உருவாக்கம்[தொகு]

நைட்ரோனியம் பெர்குளோரேட்டு மற்றும் நீரற்ற அலுமினியம் குளோரைடு இரண்டும் துல்லியமான அளவுகளில் நீர்ம கந்தக டையாக்சைடில் கலந்து நைட்ரோனியம்டெட்ராபெர்குளோரேட்டோ அலுமினேட்டு உருவாக்கப்படுகிறது [1].

மூன்று மோல் நைட்ரோனியம் பெர்குளோரேட்டு மற்றும் ஒரு மோல் நீரற்ற அலுமினியம் குளோரைடு மற்றும் ஒரு மோல் அமோனியம் பெர்குளோரேட்டு ஆகியவை நீர்ம கந்தக டையாக்சைடில் சேர்க்கப்பட்டு அமோனியம்டெட்ராபெர்குளோரோ அலுமினேட்டு உருவாக்கப்படுகிறது [1].

பண்புகள்[தொகு]

டெட்ராபெர்குளோரேட்டோ அலுமினேட்டுகள் மஞ்சள் நிறத்தில் படிகத் திண்மங்களாகக் காணப்படுகின்றன. 50° செல்சியசு வெப்பநிலை வரை இவை நிலைப்புத்தன்மை கொண்டவையாக உள்ளன.[1] இவ்வெப்பநிலைக்கு மேல் இவை சிதைவடைந்து எக்சாபெர்குளோரேட்டோ அலுமினேட்டுகள் உருவாகின்றன. இவை அதற்கு மேலான வெப்பநிலைகளிலும் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகின்றன[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Guibert, C. R.; H. F. Klodowski; M. D. Marshall; A. D. McElroy (1 June 1966). "Complex Light Metal Perchlorates - Tetraperchloratoaluminates". Studies of Complex Perchlorates. Callery Chemical COmpany. pp. 14–27. 1 February 2014 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Titova, K. V.; E. I. Kolmakova (1977). "Tetraalkylammonium haloperchloratoaluminates". Bulletin of the Academy of Sciences of the USSR Division of Chemical Science 26 (2): 229–231. doi:10.1007/BF00921820. பன்னாட்டுத் தர தொடர் எண்:0568-5230. 
  3. Guibert, C. R.; H. F. Klodowski; M. D. Marshall; A. D. McElroy (1 June 1966). "Complex Perchlorates - Hexaperchloratoaluminates". Studies of Complex Perchlorates. Callery Chemical COmpany. pp. 28–44. 1 February 2014 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]