டெட்ராடைமைட்டு
| டெட்ராடைமைட்டு Tetradymite | |
|---|---|
டெட்ராடைமைட்டு - பிரித்தானிய கொலம்பியா, கனடா | |
| பொதுவானாவை | |
| வகை | சல்பைடு கனிமம் |
| வேதி வாய்பாடு | Bi2Te2S |
| இனங்காணல் | |
| நிறம் | எஃகு சாம்பல் நிறம், மந்தமானது முதல் ஒளிரும் நிறத்தைக் கொண்டது; பளபளப்பான பகுதியில் வெள்ளை நிறம் இருக்கும். |
| படிக இயல்பு | பிரமிடு பட்டகம், பொதுவாக மணிகள், திரட்சி முதல் இலைகள் வரை |
| படிக அமைப்பு | முக்கோணவமைப்பு |
| இரட்டைப் படிகமுறல் | இரட்டை தளங்கள் {0118} மற்றும் {0115} |
| பிளப்பு | Perfect on {0001} இல் சரிபிளவு |
| முறிவு | சமமற்றது |
| விகுவுத் தன்மை | தகடு நெகிழ்வானது, சற்று குறுக்குவெட்டுத் தன்மை கொண்டது. |
| மோவின் அளவுகோல் வலிமை | 1.5 – 2 |
| மிளிர்வு | உலோகத் தன்மை, புதிய பரப்புகளில் பளபளப்பாகவும், கறை படிந்தால் மங்கலாகவும் இருக்கும். |
| கீற்றுவண்ணம் | எஃகு-சாம்பல் |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
| ஒப்படர்த்தி | 7.2 – 7.9 |
| மேற்கோள்கள் | [1][2][3][4] |
டெட்ராடைமைட்டு (Tetradymite) என்பது Bi2Te2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் டெட்ராடைமைட்டு கனிமத்தை Ttd[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
பிசுமத்தும், தெலூரியமும் சல்பைடுடன் சேர்ந்து இக்கனிமம் உருவாகிறது. இதனால் தெலூரிக்கு பிசுமத்து என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஒருவேளை கந்தகம் கனிமத்தில் இல்லாவிட்டால், அந்த கனிமம் தெலூரோபிசுமத்தைட்டு என்ற கனிமம் ஆகிறது. தெலூரோபிசுமத்தைட்டு கனிமத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு Bi2Te3 ஆகும். பொதுவாக செலீனியத்தின் சுவடுகள் இக்கனிமத்தில் காணப்படும்.[6]

படிகங்கள் சாய்சதுர பிழம்புரு வடிவத்தைக் கொண்டுள்ளன. ஆனால் அரிதாகவே தனித்துவமாக வளர்ச்சியடைகின்றன. இவை நான்கு குழு உறுப்பினர்களாக ஒன்றாக இணைக்கப்படுகின்றன. எனவே இந்த கனிமத்தின் பெயர், கிரேக்க மொழியில் நான்கு மடங்கு என்பதை அடிப்படையாகக் கொண்டு டெட்ராடைமைட்டு என பெயரிடப்பட்டுள்ளது. கனிமத்தின் கட்டமைப்பில் அடித்தளத் தளத்திற்கு இணையாக ஒரு சரியான பிளவு உள்ளது. கனிமம் பொதுவாக ஒழுங்கற்ற வெளிப்புறத்தில் இலைகளாகப் பிரிக்கப்பட்ட திரட்சியாகத் தோன்றுகிறது. எஃகு-சாம்பல் நிறத்தில் பளபளக்கும் உலோகம் போல பிரகாசமாகக் காணப்படுகிறது. கனிமம் மிகவும் மென்மையான. மோவின் கடினத்தன்மை அளவு கோலில் 1.5 – 2 என்ற கடினத் தன்மையும் 7.2 முதல் 7.9 வரையிலான ஒப்படர்த்தியையும் கொண்டுள்ளது.[6]
1831ஆம் ஆண்டில் சுலோவாகியக் குடியரசின் சுட்ரெடோசுலோவென்சுகி கிராச்சு, சுப்கோவ் (சுப்கோ; சுகுப்காவ்) பகுதியில் டெட்ராடைமைட்டு கனிமம் காணப்படுகிறது.[4] முதன்முதலில் 1815 ஆம் ஆண்டில் நார்வே நாட்டிலுள்ள் டெலிமார்க்கு மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[6] பெரும்பாலும் பூர்வீக தங்கத்துடன் தொடர்புடைய உயர் வெப்பநிலை நீர் வெப்ப குவார்ட்சு விளிம்புகளிலும் தொடர்பு உருமாற்ற படிவுகளிலும் டெட்ராடைமைட்டு காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mineralienatlas
- 1 2 http://rruff.geo.arizona.edu/doclib/hom/tetradymite.pdf Handbook of Mineralogy
- ↑ http://webmineral.com/data/Tetradymite.shtml Webmineral data
- 1 2 http://www.mindat.org/min-3921.html Mindat.org
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- 1 2 3 Spencer 1911.