நாற்படியகப் பிறழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டெட்ராசோமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நாற்படியகநிலை
Tetrasomy
சிறப்புமரபியல்

நாற்படியகப் பிறழ்ச்சி (tetrasomy) அல்லது நான்மடிவகப் பிறழ்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட குறுமவகத்தில் இயல்பான இருபடிகளுக்குப் பதிலாக நான்கு படிகள் அமையும் குறுமவகப் படிப்பிறழ்ச்சி நிலையாகும்.

காரணங்கள்[தொகு]

பாலியல் நாற்படியகப் பிறழ்ச்சி[தொகு]

முழு நாற்படியகப் பிறழ்ச்சி அல்லது பாலியல் நாற்படியகப் பிறழ்ச்சி என்பது ஒருவருக்குக் குன்றல்பகுப்பில் பாலியற்கலங்கள் பிளவுறும் முதலிருகட்டங்களில் ஒடுக்கற்பிரிவு I அல்லது II) விந்துக் கலமோ அல்லது முட்டையோ (அண்டமோ) உருவாகும் நிலையில், அதாவது பாலினக்கலங்கள் உருவாக்க நிலையில், உருவாகிறது. இந்நிலை விந்திலோ அல்லது முட்டையிலோ கூடுதல் குறுமவகங்கள் அமைந்து விடுவதால் நேர்கிறது. எனவே, கருவுற்றதும் உருவாகும் கருக்குழவியில் இயல்பான 46 குறுமவகங்களுக்குப் பதிலாட 48 குறுவகங்கள் அமைந்துவிடும்.

உடலியல் குறுமவக நாற்படியகப் பிறழ்ச்சிகள்[தொகு]

  • பூனைக்கண் நோய்த்தொகை: இது மாந்தரில் உள்ள 23 குறுமவக இணைகளில் 22 ஆம் குறுமவகத்தில் ஏற்படும் பகுதிநிலை நாற்படியகப் பிறழ்ச்சியால் உருவாகிறது
  • பல்லிசுட்டர்-கில்லிய நோய்த்தொகை 12 ஆம் குறுமவகத்தில் நேரும் நாற்படியகப் பிறழ்ச்சியால்(tetrasomy 12p ) உருவாகிறது.
  • 9 ஆம் குறுமவக இணையில் நேரும் நாற்படியகப் பிறழ்ச்சி(Tetrasomy 9p)
  • 18 ஆம் குருமவக இணையில் நேரும் நாற்படியகப் பிறழ்ச்சி(Tetrasomy 18p]]
  • 21 ஆம் குறுமவக இணையில் நேரும் நாற்படியகப் பிறழ்ச்சி(Tetrasomy 21): இது ஒரு அரிய டெளன் நோய்க்கூட்டறிகுறி ஆகும்.

பாலினக் குறுமவக நாற்படியகப் பிறழ்ச்சிகள்[தொகு]

  • எக்சு நாற்படியகப் பிறழ்ச்சி(Tetrasomy X)
  • XXYY நோய்த்தொகை
  • கிளிண்பெல்டரின் நோய்த்தொகை: இதில் XXXY நாற்படியகப் பிறழ்ச்சி அமைகிறது.
  • 8, XXXX நோய்த்தொகை

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாற்படியகப்_பிறழ்ச்சி&oldid=3737872" இலிருந்து மீள்விக்கப்பட்டது