டெட்ராசீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1,2,3,4-டெட்ராசீனின் கட்டமைப்பு
1,2,4,5- டெட்ராசீனின் கட்டமைப்பு

டெட்ராசீன் (Tetrazine) என்பது C2H2N4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆறு உறுப்பு அரோமாட்டிக் வளையத்தில் 4 நைட்ரசன் அணுக்களைக் கொண்டிருக்கும் டெட்ராசீன் ஒரு நிலைப்புத்தன்மையற்ற சேர்மமாகும். இச்சேர்மத்திலிருந்து பெறப்படும் வழிப்பெறுதிகளுக்குப் பெயரிடும்போது டெட்ராசின் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. 1,2,3,4-டெட்ராசீன்கள், 1,2,3,5- டெட்ராசின்கள், 1,2,4,5- டெட்ராசின்கள் என்ற மூன்று மாற்றியங்கள் டெட்ராசினுக்கு உண்டு. இவை முறையே வி-டெட்ராசின்கள், ஏ.எசு-டெட்ராசீகள், எசு-டெட்ராசீன்கள் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.

1,2,3,4-டெட்ராசீன்கள்[தொகு]

1,2,3,4- டெட்ராசீன்கள் பெரும்பாலும் ஓர் அரோமாட்டிக் வளைய அமைப்புடன் உருகி இணைத்தே தனிமைப்படுத்தப்படுகின்றன. இவை டையாக்சைடு வழிப்பெறுதிகளாக நிலைப்புத்தன்மையைப் பெறுகின்றன.

1,2,4,5-டெட்ராசின்கள்[தொகு]

1,2,4,5-டெட்ராசசீன்கள் நன்கு அறியப்பட்டுள்ளன. எண்ணற்ற 3,6-பங்கீடு 1,2,4,5-டெட்ராசீன்களும் அறியப்படுகின்றன.[1]. ஆற்றல் அடிப்படையான வேதியியலில் இவ்வகைப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. 3,6-டைi-2-பிரிடைல்-1,2,4,5-டெட்ராசீன் சேர்மம்'[2] இரண்டு பிரிடின் பதிலிகளைப் பெற்றுள்ளது. டையீல்சு ஆல்டர் வினைகளில் ஒரு வினையாக்கியாக இவை முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இருவளைய ஐதரோகார்பன் நார்போர்னாடையீனுடன் இது ஒரு டையீல்சு ஆல்டர் வினை மற்றும் அதற்கு எதிரான இரண்டு டையீல்சு ஆல்டர் வினை என்ற வரிசையில் வினைபுரிந்து ஓர் அசிட்டிலீன் அலகு பரிமாற்றத்துடன் சைக்ளோபென்டாடையீன் மற்றும் பிரிடாசின் சேர்மங்களாகிறது.[3]

3,6-டை-2-பிரிடைல்-1,2,4,5-டெட்ராசீன் சேர்ம்ம் நார்போர்னாடையீனுடன் ஈடுபடும் வினை

ஓர் அரீனுடன் உருக்கி இணைந்த நார்போர்னாடையீன் வினையில் ஈடுபடுமெனில் வினையானது இடைநிலையில் நிறுத்தப்படுகிறது [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. (see United States Patent 6645325)
  2. Datasheet: Link
  3. Dalkılıç, Erdin, and Arif Daştan. "Synthesis of cyclopentadiene derivatives by retro-Diels–Alder reaction of norbornadiene derivatives." Tetrahedron 71.13 (2015): 1966-1970. Dalkılıç, Erdin, et al. "Novel and versatile protocol for the preparation of functionalized benzocyclotrimers." Tetrahedron Letters 50.17 (2009): 1989-1991.
  4. π-Bond Screening in Benzonorbornadienes: The Role of 7-Substituents in Governing the Facial Selectivity for the Diels-Alder Reaction of Benzonorbornadienes with 3,6-Di(2-pyridyl)-s-Tetrazine. Ronald N. Warrener and Peter A. Harrison Molecules 2001, 6, 353–369 Online Article
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்ராசீன்&oldid=2791551" இலிருந்து மீள்விக்கப்பட்டது