உள்ளடக்கத்துக்குச் செல்

டெக்ஸ்டர் (தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெக்ஸ்டர் என்பது ஒரு அமெரிக்க ஆங்கில நாடகம் மற்றும் மர்மத் தொடர் ஆகும். ஜெஃப் லின்ட்சேவின் டெக்ஸ்டர் கதையை அடிப்படையாகக் கொண்டு ஜேம்ஸ் மானோஸ் இந்த தொடரை உருவாக்கினார். ஷோடைம் என்கிற அலைவரிசையில் 2006 முதல் 2013 வரை இத்தொடர் ஒளிபரப்பானது.[1]

டெக்ஸ்டர்
வகைநாடகத் தொடர் மர்மப் புனைவு
முன்னேற்றம்ஜேம்ஸ் மானோஸ்
நடிப்புமைக்கேல் ஹால்
ஜூலி பென்ஸ்
ஜெனிஃபர்
எரிக் கிங்
லாரன் வெலேஃஸ்
டேவிட் ஃஸயாஸ்
ஜேம்ஸ் ரேமர்
முகப்பு இசைரால்ஃப் கெண்ட்
பின்னணி இசைடேனியல் லிக்ட்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்8
அத்தியாயங்கள்96
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புடேனியல் சிரோன்
சாரா கலட்டென்
ச்சார்ல்ஸ் எக்லீ
தயாரிப்பாளர்கள்ராபர்ட் லூயிஸ்
திமோத்தி லேட்மேன்
லாரன் கிஸ்
ஸ்க்காட் ரெனால்ட்ஸ்
ஓட்டம்47–58 நிமிடங்கள்
விநியோகம்சிபிஎஸ் டெலிவிஷன் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஷோடைம்
ஒளிபரப்பான காலம்அக்டோபர் 1, 2006 (2006-10-01) –
செப்டம்பர் 22, 2013 (2013-09-22)
வெளியிணைப்புகள்
இணையதளம்

கதை

[தொகு]

மூன்று வயதில் அநாதை ஆகும் டெக்ஸ்டர், தன் தாயைக் கொடூரமாகக் கொன்றவர்களைப் பழித்தீர்க்க வஞ்சம் கொள்கிறான். அந்த வஞ்சம் வெறியாகி தொடர் கொலைகள் செய்வோர் அனைவரையும் கொல்ல முடிவெடுத்து, வளர்ந்தபின் திட்டமிட்டு தீர்த்துகட்டுகிறான்.

நடிப்பு

[தொகு]

முக்கிய கதாப்பாத்திரங்கள்

[தொகு]
  • டெக்ஸ்டர் மோர்கனாக மைக்கேல் ஹால்
  • ரீட்டா பென்னெட்டாக ஜூலி பென்ஸ்
  • டெப்ரா மோர்கனாக ஜெனிஃபர் கார்பெண்டர்
  • ஜேம்ஸ் டோக்ஸாக எரிக் கிங்
  • மரியா லாகெர்த்தாவாக லாரன் வெலேஃஸ்
  • ஏஞ்சல் பட்டிஸ்டாவாக டேவிட் ஃஸயாஸ்
  • ஹேரி மோர்கனாக ஜேம்ஸ் ரேமர்
  • வின்ஸ் மசூக்காவாக சி.எஸ்.லீ

வரவேற்பு

[தொகு]
மெட்டாகிரிட்டிக் மற்றும் ராட்டன் டொமேட்டோஸின் பருவங்களுக்கேற்ப மதிப்பெண்கள்

பருவத்துக்கு பருவம் விமர்சனங்கள் மாறினாலும், ஒட்டு மொத்தமாக டெக்ஸ்டருக்கு நேர்மறையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. முதல், இரண்டாம், நான்காம் மற்றும் ஆறாம் பருவங்கள் பெருவாரியாக விமர்சகர்களால் போற்றப்பட்டன. மூன்றாம் மற்றும் ஐந்தாம் பருவங்களுக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆறாம் மற்றும் எட்டாம் பருவங்கள் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டன.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தொலைக்காட்சி வரலாற்றை மாற்றி அமைத்த டெக்ஸ்டர் - தி கான்வர்சேஷன்".
  2. "டெக்ஸ்டர் விமர்சனம் - ரோட்டன் டொமேட்டோஸ்".
  3. "டெக்ஸ்டர் விமர்சனம் - மெட்டாக்கிரிட்டிக்".
  4. "டெக்ஸ்டர் விமர்சனம் - வெரைட்டி".
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெக்ஸ்டர்_(தொடர்)&oldid=3142834" இலிருந்து மீள்விக்கப்பட்டது