டூரிஸ்ட் ஃபேமிலி
டூரிஸ்ட் ஃபேமிலி | |
---|---|
![]() விளம்பரப் பதாகை | |
இயக்கம் | அபிசன் ஜீவிந்த் |
தயாரிப்பு |
|
கதை | அபிசன் ஜீவிந்த் |
இசை | சான் ரோல்டன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | அரவிந்த் விசுவநாதன் |
படத்தொகுப்பு | பரத் விக்ரமன் |
கலையகம் |
|
வெளியீடு | 29 ஏப்ரல் 2025(இந்தியா) 1 மே 2025 (உலகம் முழுவதும்) |
ஓட்டம் | 128 நிமிடம்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹14 கோடி[2][3][4] |
மொத்த வருவாய் | மதிப்பீடு ₹32.50 கோடி[5] |
டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family) என்பது 2025ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படமாகும். அபிசன் ஜீவிந்த் எழுதி இயக்கிய முதல் படம் இதுவாகும். மில்லியன் டாலர் இசுடுடியோசும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்டு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சசிக்குமார், சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யோகி பாபு, எம். எசு. பாசுகர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கதை, பாதுகாப்பு, சிறந்த எதிர்காலத்தைத் தேடி வரும் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பத்தின் ஆபத்தான பயணத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
மில்லியன் டாலர் இசுடுடியோவின் ஐந்தாவது முயற்சியாக இருப்பதால், தயாரிப்பு எண் 5 என்ற தற்காலிகத் தலைப்பில் இத்திரைப்படம் செப்டம்பர் 2024-இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதிகாரப்பூர்வத் தலைப்பு திசம்பரில் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டப் படப்பிடிப்பு 35 நாள்கள் நீடித்த ஒரே அட்டவணையில் நடந்தது. இப்பணிகள் சனவரி 2025 தொடக்கத்தில் முடிவடைந்தன. இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அரவிந்த் விசுவநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தினை பாராட் விக்ரமன் தொகுத்துள்ளார்.[6]
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 29 ஏப்ரல் 2025 அன்று ஊடகங்களுக்கான சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. மேலும் மே 1 அன்று முதல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
கதை
[தொகு]இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, ஒரு இலங்கைத் தமிழர் தர்மதாசு தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திலிருந்து தனது குடும்பத்துடன் இராமேஸ்வரத்திற்கு வருகிறார். தமிழ்நாட்டை அடைந்த பிறகு என்ன நடக்கிறது என்பது மீதமுள்ள கதையாகும். இந்திய மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவுக்கு சான்றாகிறது.
நடிகர்கள்
[தொகு]- தர்மதாசாக சசிகுமார்
- வசந்தி தர்மதாசாக சிம்ரன்
- நிதுஷன் தர்மதாசாக மிதுன் ஜெய் சங்கர்
- தாசின் மைத்துனர் பிரகாசு வேடத்தில் யோகி பாபு
- முள்ளி தர்மதாசாக கமலேசு
- ரிச்சர்டாக (தாசின் முதலாளி) எம். எசு. பாசுகர்
- இரமேஷ் திலக் ஆய்வாளர் ஏ. பைரவனாக
- அபிசன் ஜீவிந்த் குடிகார இளைஞனாக
- பகவதி பெருமாள் காவல்துறை அதிகாரி ஆர். ராகவனாக
- குணசேகராக இளங்கோ குமரவேல்
- குணசேகரின் மனைவியாக ஸ்ரீஜா ரவி
- இராகவனின் மகள் குறளாக யோகலட்சுமி*
தயாரிப்பு
[தொகு]உருவாக்கம்
[தொகு]செப்டம்பர் 28, 2024 அன்று, குட் நைட் (2023) மற்றும் லவ்வர் (2024) ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் இசுடுடியோசு, அபிஷன் ஜீவிந்த் எழுதி இயக்கிய ஐந்தாவது திரைப்படத் தயாரிப்பினை அறிவித்தனர்.[7] இப்படத்தில் சசிக்குமாரும் சிம்ரனும் ஆவேசம் (2024) திரைப்படப் புகழ் மிதுன் ஜெய் சங்கர், கமலேசு ஆகியோருடன் இலங்கையினைச் சேர்ந்த ஒரு தமிழ்க் குடும்பத்தினராக நடித்துள்ளனர்.[8] யோகி பாபு, எம். எசு. பாசுகர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவியுடன் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[9] இந்த படத்தை மில்லியன் டாலர் இசுடுடியோசும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் கீழ் நாசெரத் பாசிலியன், மகேசு ராஜ் பாசிலியன், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.[10] தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விசுவநாதன், ஆசிரியர் பரத் விக்ரமன், கலை இயக்குநர் ராஜ் கமல், பாடலாசிரியர் மோகன் ராஜன், இசையமைப்பாளர் சான் ரோல்டன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.[11] அதிகாரப்பூர்வ தலைப்பான டூரிஸ்ட் ஃபேமிலி என்பது திசம்பர் 7, 2024 அன்று அறிவிக்கப்பட்டது.[12]
படப்பிடிப்பும் படபிடிப்பிற்கு பிந்தைய பணிகளும்
[தொகு]சென்னையில் அமைக்கப்பட்ட ஒரு காட்சியரங்கில் 35 நாட்கள் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்தது. முழு படப்பிடிப்பும் சனவரி 2, 2025 அன்று முடிவடைந்தது.[13][14] முன்னதாக, திசம்பர் 14, 2024 அன்று, பின்னணி இசை, ஒலிக்கோர்ப்பு சேர்த்தல் தொடங்கியுள்ளதாகவும், அதே நேரத்தில் படப்பிடிப்பிற்கு பிந்தையப் பணிகளும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது.[15][16]
இசை
[தொகு]டூரிசுட் பேமிலி | ||||
---|---|---|---|---|
பின்னணி இசை
| ||||
வெளியீடு | ஏப்ரல் 23, 2025 | |||
இசைப் பாணி | ஒலிச்சுவடு | |||
நீளம் | 25:49 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | திங்க் மியூசிக் | |||
இசைத் தயாரிப்பாளர் | சான் ரோல்டன் | |||
சான் ரோல்டன் காலவரிசை | ||||
| ||||
டூரிசுட் பேமிலி-இலிருந்து தனிப்பாடல் | ||||
|
பாடலுக்கும் படத்தின் பின்னணி இசையினையும் சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.[17] முதல் தனிப்பாடலான "முகாய் மஜாய்" பிப்ரவரி 21, 2025 அன்று வெளியிடப்பட்டது.[18] இரண்டாவது தனிப்பாடலான "அச்சலே" 16 ஏப்ரல் 2025 அன்று வெளியிடப்பட்டது.[19]மோகன் ராசன் அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "அச்சலே" | சான் ரோல்டன் | 3:25 | |||||||
2. | "வாழ்ந்து பாரு" | எஸ். பி. பி. சரண் | 3:38 | |||||||
3. | "இறகே" | விஜய் யேசுதாஸ் | 3:43 | |||||||
4. | "இறகே" | வெங்கட்ராமன் | 3:23 | |||||||
5. | "முகை மழை" | சான் ரோல்டன், சைந்தவி | 3:51 | |||||||
6. | "மனமே" | மனோஜ் கிருஷ்ணா, சான் ரோல்டன் | 3:24 | |||||||
7. | "ஒரே வானம்" | யுவன் சங்கர் ராஜா, மேகா அகர்வால் | 4:25 | |||||||
மொத்த நீளம்: |
25:49 |
வெளியீடு
[தொகு]டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஏப்ரல் 29, 2025 அன்று முன்திரையிடப்பட்டது. மே 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[20][21] ஐக்கிய இராச்சியத்தில், இத்திரைப்படம் இதே நாளில் வெளியிடப்பட்டது. இங்கிலாந்து திரைப்பட வகைப்பாட்டு வாரியத்தால் அரிதான வலுவான மொழி, மிதமான வன்முறை, காயம் விவரங்களுக்காக "15" சான்றிதழ் பெற்ற பதிப்பில் வெளியிடப்பட்டது. படவெளியீட்டாளர்கள் பின்னர் "12ஏ" மதிப்பீட்டை அடைய சில மாறுதல்களைச் செய்து காட்சிகளை நீக்கினர்.[1]
விமர்சனம்
[தொகு]ஓடிடிபிளேயின் அனுஷா சுந்தர் 3.5/5 நட்சத்திரங்களை வழங்கி விமர்சனம் செய்துள்ளார். இவர் தனது விமர்சனத்தில், இயக்குநர் அபிசன் ஜீவிந்த் துன்பங்களுக்கு மத்தியில் மனிதநேயம், இணைப்பின் கருப்பொருள்களை திறமையாக ஆராய்ந்து, தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மாறுபட்ட நடிகர்களை வெளிக்காட்டியுளார் எனத் தெரிவித்துள்ளார். தி இந்தியன் எக்சுபிரசின் அவினாசு இராமச்சந்திரன் 3.5/5 புள்ளிகளை வழங்கி, நகைச்சுவை முன்னணியில் இருப்பதாக மதிப்பிட்டு அதிக மதிப்பெண்களைக் கொடுத்துள்ளார். மேலும் இந்த தருணங்கள் பார்வையாளர்கள் எல்லாவற்றையும் மறந்து அன்றாடம் சிரிக்க வைக்கும் ஒரு படத்துடன் சிரிக்க எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்பதை சிந்திக்க வைக்கிறது என்று விமர்சித்துள்ளார்.[22][23][24]
இந்துசுதான் டைம்சின் இலதா சீனிவாசன், "டூரிஸ்ட் பேமிலி என்பது அபிசன் ஜீவிந்தின் அற்புதமான கதை என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் தனது அண்டை வீட்டாரையும் மனிதநேயத்தையும் நேசிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறும் திரைப்படம் இது" என்று எழுதினார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா அபினவ் சுப்பிரமணியன், "டூரிஸ்ட் ஃபேமிலி” சவால்களை ஒரு மென்மையான பார்வையுடன், கதையான ஓரளவு சூத்திரமாக உணர்த்துகிறது என்றும், தி ஹிந்து ஸ்ரீனிவாச ராமானுஜம் "உரத்த துப்பாக்கிகள், மென்மையான காதல் ஆதிக்கம் செலுத்தும் ஒரு திரைப்படச் சூழலில், 'டூரிஸ்ட் ஃபேமிலி' புதிய காற்றின் சுவாசமாக வருகிறது" என்று தெரிவித்துள்ளனர். ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவின் பிரதியுசா பரசுரமான் 'தொனியில் சக்திவாய்ந்த இனிப்பு இருந்தபோதிலும், படத்தின் மொழி குளிர்ச்சியாகவும், பார்வைக்கு சுத்தமாகவும், பொறுமையானதாகவும்' தெரிவித்துள்ளார்.[25][26][27][28]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Tourist Family". British Board of Film Classification (in ஆங்கிலம்). Archived from the original on 2025-05-04. Retrieved 2025-05-01.
- ↑ A, Ganesh (2 May 2025). "பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளே சிக்சர் அடித்த டூரிஸ்ட் பேமிலி - வசூல் எவ்வளவு தெரியுமா?". Asianet News. Archived from the original on 6 May 2025. Retrieved 5 May 2025.
- ↑ Pachake, Mona (5 May 2025). "டூரிஸ்ட் ஃபேமிலி vs ரெட்ரோ... வசூல் வேட்டை நடத்தும் படம் எது தெரியுமா?". The Indian Express. Archived from the original on 6 May 2025. Retrieved 5 May 2025.
- ↑ "டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் எவ்வளவு?". தினமணி. 11 May 2025. Archived from the original on 6 May 2025. Retrieved 5 May 2025.
- ↑ Choudhury, Anjali (8 May 2025). "Sasikumar and Simran starrer Tourist Family crosses Rs 25 crore mark worldwide in a week; what makes it a hit?". Pinkvilla (in ஆங்கிலம்). Archived from the original on 9 May 2025. Retrieved 8 May 2025.
- ↑ Kumar, Akshay (9 December 2024). "Tears of joy in the eyes of Abishan Jeevinth". The New Indian Express (in ஆங்கிலம்). Archived from the original on 25 April 2025. Retrieved 27 December 2024.
- ↑ "Sasikumar and Simran join hands for a new film". Cinema Express (in ஆங்கிலம்). 12 September 2024. Archived from the original on 25 April 2025. Retrieved 25 April 2025.
- ↑ "Tourist Family teaser: Sasikumar, Simran head a Sri Lankan Tamil family in this promising entertainer". The Indian Express (in ஆங்கிலம்). 6 December 2024. Archived from the original on 6 December 2024. Retrieved 27 December 2024.
- ↑ .
- ↑ "Tourist Family Teaser: Simran and Sasikumar Team Up For A Lighthearted Film". Times Now (in ஆங்கிலம்). 7 December 2024. Archived from the original on 11 December 2024. Retrieved 27 December 2024.
- ↑ Kumar, Akshay (6 December 2024). "Sasikumar-Simran's next titled Tourist Family". Cinema Express (in ஆங்கிலம்). Archived from the original on 13 December 2024. Retrieved 27 December 2024.
- ↑ Sundar, Anusha (7 December 2024). "Tourist Family title teaser wins hearts; Simran and Sasikumar's film feels like a breath of fresh air". OTTPlay (in ஆங்கிலம்). Archived from the original on 25 April 2025. Retrieved 27 December 2024.
- ↑ Kumar, Akshay (8 December 2024). "Abishan Jeevinth on Tourist Family: Thenali inspired me to make a film on Sri Lankan Tamils". Cinema Express (in ஆங்கிலம்). Archived from the original on 11 December 2024. Retrieved 27 December 2024.
- ↑ Kumar, Akshay (2 January 2025). "Sasikumar-Simran's Tourist Family wraps filming". Cinema Express (in ஆங்கிலம்). Archived from the original on 8 January 2025. Retrieved 2 January 2025.
- ↑ "Dubbing works begin for Sasikumar-Simran's Tourist Family". Cinema Express (in ஆங்கிலம்). 14 December 2024. Archived from the original on 15 December 2024. Retrieved 27 December 2024.
- ↑ Sundar, Anusha (14 December 2024). "Tourist Family: Sasikumar begins dubbing for his family entertainer with Simran | SEE PICS". OTTPlay (in ஆங்கிலம்). Archived from the original on 25 April 2025. Retrieved 27 December 2024.
- ↑ "First single from Sasikumar-Simran's Tourist Family to be unveiled on this date". Cinema Express (in ஆங்கிலம்). 20 February 2025. Archived from the original on 18 April 2025. Retrieved 20 February 2025.
- ↑ S, Ashwin (21 February 2025). "Tourist Family first single 'Mugai Mazhai' serves as an exposition of this family's bond". Cinema Express (in ஆங்கிலம்). Archived from the original on 25 April 2025. Retrieved 21 February 2025.
- ↑ "Second single, 'Aachaley' from Sasikumar-Simran's Tourist Family out". Cinema Express (in ஆங்கிலம்). 16 April 2025. Archived from the original on 19 April 2025. Retrieved 16 April 2025.
- ↑ Subramanian, Abhinav (29 April 2025). "Tourist Family Movie Review: A relevant story told with predictable beats". The Times of India. Retrieved 29 April 2025.
- ↑ M, Narayani (25 March 2025). "Sasikumar-Simran's Tourist Family to release in May". Cinema Express (in ஆங்கிலம்). Archived from the original on 25 March 2025. Retrieved 25 March 2025.
- ↑ Sundar, Anusha (29 April 2025). "Tourist Family movie review: Abishan Jeevinth crafts a heartwarming story about hard-hitting realities with Sasikumar and Simran at forefront". OTTPlay. Retrieved 29 April 2025.
- ↑ Ramachandran, Avinash (2025-05-01). "Tourist Family movie review: Sasikumar, Simran headline a heartwarming and beautiful film about loving thy neighbour". The Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-05-01.
- ↑ B, Jayabhuvaneshwari (2025-04-30). "Tourist Family Movie Review: A soulful tale of survival and solidarity". Cinema Express (in ஆங்கிலம்). Archived from the original on 4 May 2025. Retrieved 2025-05-01.
- ↑ Srinivasan, Latha (1 May 2025). "Tourist Family movie review: A feel-good entertainer elevated by a stellar Sasikumar and Simran". Hindustan Times. Archived from the original on 2 May 2025. Retrieved 2 May 2025.
- ↑ Subramanian, Abhinav (29 April 2025). "Tourist Family Movie Review: A relevant story told with predictable beats". The Times of India. Retrieved 29 April 2025.
- ↑ (in en).
- ↑ Parasuraman, Prathyush (1 May 2025). "'Tourist Family' Movie Review: Sasikumar, Simran Carry This Naive But Charming Refugee Drama". The Hollywood Reporter India (in ஆங்கிலம்). Retrieved 4 May 2025.