உள்ளடக்கத்துக்குச் செல்

தூவி தசம வகைப்படுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டூயி தசம வகைப்படுத்தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தூவி தசம வகைப்படுத்தல் (Dewey Decimal Classification) என்பது பரவலாக பயன்படுத்தப்படும் நூல் வகைப்படுத்தும் முறைமை ஆகும். இது மெல்வில் தூவி என்பவரால் 1876 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 23 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இறுதியாக இதன் 23ம் பதிப்பானது 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வகைப்படுத்தலானது 135 நாடுகளில் ஏறத்தாழ 200,000 நூலகங்களின் புத்தகங்களை பகுப்பாக்கம் செய்ய பயன்படுத்தப்படுகின்றது.

இந்த வகைப்படுத்தல் எல்லாத் தகவலையும் 10 வகுப்புகளாகப் பிரிக்கிறது. அவை மேலும் 10 பிரிவுகளாகவும், அந்தப் பிரிவுகள் மேலும் 10 கூறுகளாகவும் பிரிக்கப்படுகிறது. இவ்வாறு 10 வகுப்புகள், 100 பிரிவுகள், 1000 துணைப்பிரிவுகள் இவ்வகைப்படுத்தலில் உண்டு.

தூவி தசம வகைப்படுத்தலின் பிரதான அனுகூலமானது தசமங்களை பயன்படுத்தி தூய கணித வகையான பகுப்பாக்கமாக அமைவதாகும். அத்துடன் இவ்வகைப்படுத்தலானது முடிவற்ற படிநிலை அமைப்பை கொண்டதாகும். இதன் பிரதான குறைபாடாக அமைவது குறியீடுகள் அதிக நீளமானவையாக அமைவதும் ஞாபகப்படுத்துவதற்கு சிரமமானதாவதுமாகும். எண்ணெழுத்து அடிப்படையான பகுப்பாக்கத்தில் (alphanumeric system) குறியீடுகளை ஞாபகப்படுத்துவது எளிதாகும்.

வகுப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூவி_தசம_வகைப்படுத்தல்&oldid=3924164" இலிருந்து மீள்விக்கப்பட்டது