டூத்தா–உலு கிள்ளான் விரைவுச்சாலை
| Expressway 33 | |
|---|---|
| டூத்தா–உலு கிள்ளான் விரைவுச்சாலை Duta–Ulu Klang Expressway | |
| வழித்தடத் தகவல்கள் | |
| பராமரிப்பு வடகிழக்கு விரைவுச்சாலை கூட்டமைப்பு (Kesturi) | |
| நீளம்: | 18 km (11 mi) |
| பயன்பாட்டு காலம்: | 2005 – |
| வரலாறு: | நிறைவு: 2009 |
| Component highways: |
|
| முக்கிய சந்திப்புகள் | |
| தொடக்கம்: | டூத்தா பரிமாற்றச் சாலை வடக்கு-தெற்கு விரைவுச்சாலை வடக்கு தடம் |
|
| |
| முடிவு: | உலு கிள்ளான் கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 |
| அமைவிடம் | |
| முதன்மை இலக்குகள்: | டூத்தா சாலை, சிகாம்புட், செந்தூல், செதாபாக் செத்தியாவங்சா, உலு கிள்ளான் |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
டூத்தா–உலு கிள்ளான் விரைவுச்சாலை அல்லது காஜாங் சில்க் நெடுஞ்சாலை (மலாய்; Lebuhraya Duta–Ulu Klang; ஆங்கிலம்: Duta–Ulu Klang Expressway (DUKE, E33) சீனம்: 大使路—淡江大道) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு முக்கிய விரைவுச் சாலை வலையமைப்பாகும்.[1]
18 கிமீ (11 மைல்) நீளம் கொண்ட இந்த டூத்தா-உலு கிள்ளான் விரைவுச்சாலை, கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலையின் டூத்தா பரிமாற்றச் சாலை (Jalan Duta Interchange) (E1); மற்றும் கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2யின் (Kuala Lumpur Middle Ring Road 2) உலு கிள்ளான் பகுதியில் உள்ள தாமான் இல்வியூ பரிமாற்றச் சாலை (Taman Hillview Interchange) ஆகிய சாலைகளை இணைக்கிறது.
கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை,
கோலாலம்பூர்–காராக் விரைவுச்சாலை மற்றும்
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 ஆகிய சாலைகளுக்கு இடையே "விடுபட்ட சாலை இணைப்பை" தொடர்பு படுத்துவதற்காக இந்த விரைவுச்சாலை கட்டப்பட்டது. இந்த விரைவுச் சாலை கோலாலம்பூர் வடகிழக்கு பரவல் இணைப்புத் திட்டம் (Kuala Lumpur Northeast Dispersal Link Scheme) என்றும் அழைக்கப்படுகிறது.[2]
வரலாறு
[தொகு]டூத்தா-உலு கிள்ளான் விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 0, கோலாலம்பூர் டூத்தா சாலைக்கு அருகிலுள்ள டூத்தா பரிமாற்றச் சாலை; மற்றும் ![]()
கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை ஆகிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ளது.
இந்த 18 கிலோமீட்டர் விரைவுச்சாலை, பன்னாட்டுத் தரத்தின்படி கட்டப்பட்ட நான்கு வழிச் சாலை; மற்றும் மூன்று வழிச் சாலை அமைப்பைக் கொண்டுள்ளது. கோலாலம்பூர்–காராக் விரைவுச்சாலை வழியாக தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் மிக முக்கியமான நுழைவாயிலாகவும் டூத்தா-உலு கிள்ளான் விரைவுச்சாலை (DUKE) விளங்குகிறது.
இந்த நெடுஞ்சாலையை சனவரி 9, 2009 அன்று மலேசிய பொதுப் பணி அமைச்சர் டத்தோ முகமட் ஜின் முகமது திறந்து வைத்தார். ஒரு நாளைக்கு 120,000 வாகனங்கள் செல்லும் வகையில் கட்டப்பட்ட இந்த நெடுஞ்சாலை, கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிப்பவர்களுக்கு, குறிப்பாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பயணிப்பவர்களுக்கும்; கோலாலம்பூர் நகர மையத்திற்குச் செல்ல விரும்புவோருக்கும் ஓர் எளிதான மாற்றுப் பாதையை வழங்குகிறது.
கூறுகள்
[தொகு]சுங்கக் கட்டணங்கள்
[தொகு](நவம்பர் 23, 2017 முதல்)
| பிரிவு | வாகனங்களின் வகை | கட்டணம் (RM) |
|---|---|---|
| 0 | விசையுந்துகள் | இலவசம் |
| 1 | 2 அச்சுகள் மற்றும் 3 அல்லது 4 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் (வாடகை உந்து தவிர) | RM 2.50 |
| 2 | 2 அச்சுகள் மற்றும் 6 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் (பேருந்து தவிர) | RM 3.80 |
| 3 | 3 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகளைக் கொண்ட வாகனங்கள் | RM 5.00 |
| 4 | வாடகை உந்துகள் | RM 1.30 |
| 5 | பேருந்துகள் | RM 1.30 |
- குறிப்பு: Touch 'n Go தொட்டு செல் அட்டைகள், விசா/மாஸ்டர்கார்டு வங்கி அட்டைகள், SmartTAG இஸ்மார்ட் அட்டைகள் (SmartTAG) அல்லது MyRFID வானலை அடையாள அட்டை ஆகியவற்றின் மூலம் மட்டுமே சுங்கக் கட்டணங்களைச் செலுத்த முடியும். ரொக்கப் பணம் ஏற்றுக் கொள்ளப்படாது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "KESTURI, a wholly-owned subsidiary of Ekovest Berhad, was incorporated in Malaysia on 15th February 2001 for the sole purpose of designing, constructing, operating, managing, and maintaining the Duta Ulu-Kelang Expressway (DUKE)". www.duke.com.my. Retrieved 1 October 2025.
- ↑ B, Kathy (5 April 2019). "KL Metropolis poised to set new bar | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). Retrieved 6 October 2021.
