உள்ளடக்கத்துக்குச் செல்

டுவைட் எல். மூடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டுவைட் எல். மூடி
டுவைட் லைமன் மூடி
தாய்மொழியில் பெயர்டுவைட் லைமன் மூடி
பிறப்பு5 பிப்ரவரி 1837
நார்த்ஃபீல்ட், மாசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
இறப்பு22 டிசம்பர் 1899 (வயது 62)
பணிசுவிசேட பிரசங்கி, பதிப்பாளர்
வாழ்க்கைத்
துணை
எம்மா சி. ரெவெல் (மண. 1862)
பிள்ளைகள்3
கையொப்பம்

டுவைட் லைமன் மூடி (5 பிப்ரவரி 1837 – 22 டிசம்பர் 1899) — டி. எல். மூடி என அறியப்படுபவர் — ஓர் அமெரிக்கச் சுவிசேச பிரசங்கி மற்றும் பதிப்பாளர் ஆவார். கிறித்தவ எழுச்சியில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. மூடி தேவாலயம், மூடி வேதாகம நிறுவனம், மூடி பதிப்பகம்,[1] நார்த்ஃபீல்ட் பள்ளி, மவுண்ட் ஹெர்மான் பள்ளி ஆகியவற்றை நிறுவியவர். "நம்பிக்கை அனைத்தையும் சாத்தியமாக்குகிறது; அன்பு அனைத்தையும் எளிதாக்குகிறது" — இவரது புகழ்பெற்ற கூற்று.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

மூடி, மாசசூசெட்ஸ் மாநில நார்த்ஃபீல்ட்டில் பெரிய குடும்பத்தின் ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். தந்தை சிறு விவசாயி. நான்கு வயதில் தந்தை இறந்தபின், ஒன்பது குழந்தைகளை வளர்க்க தாய் பெட்சி கடுமையாகப் போராடினார்.[2][3] குடும்பம் ஒற்றைத் தெய்வவாதம் தேவாலயத்தைச் சேர்ந்திருந்தது.

மதம் மாற்றமும் ஊழியமும்

[தொகு]

17 வயதில் மூடி, மாமாவின் காலணிக் கடையில் வேலை செய்ய பாஸ்டன் சென்றார். 1855 ஏப்ரலில் எட்வர்ட் கிம்பால் என்ற ஞாயிறு பள்ளி ஆசிரியர் வாயிலாக கிறித்தவ ஊழியத்திற்கு மாறினார்.[4] கடவுளின் அன்பு பற்றி கிம்பால் கூறிய வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு இவரின் மதபோதக பாதையை மாற்றினார். 1862இல் எம்மா சி. ரெவெல்-ஐ மணந்தார்; ஒரு மகளும் இரு மகன்களும் (வில்லியம், பால் டுவைட் மூடி) பிறந்தனர்.

பணி

[தொகு]

1858இல் ஞாயிறு பள்ளியைத் தொடங்கி,[5] 1864இல் சிக்காகோவில் இல்லினொய் தெரு தேவாலயத்தை நிறுவினார்.[6] 1871இல் சுவிசேட பாடகர் ஐரா டி. சாங்கி-ஐ சந்தித்து, இருவரும் இணைந்து தேசம் முழுவதும், ஐக்கிய இராச்சிய தீவுகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பெருங்கூட்டத்தை ஈர்த்தனர்.[7]

அமெரிக்க உள்நாட்டுப் போர் காலத்தில், ஒய்.எம்.சி.ஏ-வின் கிறித்தவ ஆணையம் மூலம் ஒன்பது முறை போர்க்களம் சென்று யூனியன் வீரர்களிடையே பணியாற்றினார்.[8] 1871 அக்டோபரின் பெரும் சிக்காகோ தீ விபத்து மூடியின் தேவாலயம் மற்றும் வீட்டை அழித்தது. "என் நற்பெயரையும் வேதாகமத்தையும் தவிர எதையும் காப்பாற்ற முடியவில்லை" என அவர் கூறினார்.

பிரிட்டன் பயணமும் புகழும்

[தொகு]

1872இல் பிரிட்டனுக்குச் சென்றபோது மூடி உலகப் புகழ் பெற்ற பிரசங்கியாக மாறினார். 2,000–4,000 பேர் கொண்ட அரங்குகளை பல முறை நிரப்பினார். ஒரு கூட்டத்தில் 15,000–30,000 பேரை ஈர்த்ததாகக் கூறப்படுகிறது. லண்டன் பாப்திஸ்து பிரசங்கி சார்லஸ் ஸ்பர்ஜன் இவரை ஆதரித்தார். அமெரிக்கா திரும்பிய பின் ஜனாதிபதி யுலிசஸ் கிராண்ட் 1876இல் மூடியின் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கல்வி நிறுவனங்கள்

[தொகு]

நார்த்ஃபீல்ட்டில் இரு பள்ளிகளை நிறுவினார்: நார்த்ஃபீல்ட் சிறுமியர் பள்ளி (1879), மவுண்ட் ஹெர்மான் சிறுவர் பள்ளி (1881). இவ்விரண்டும் பின்னர் இணைந்து இன்றைய நார்த்ஃபீல்ட் மவுண்ட் ஹெர்மான் பள்ளி ஆனது. சீனாவின் முன்னோடி பணியாளர் ஹட்சன் டெய்லர்-ஐ சந்தித்தபின் சீன உள்நாட்டுப் பணிக்குழுவை ஆதரித்தார்.

மரணமும் மரபும்

[தொகு]

மூடி தனது கடைசிப் பிரசங்கத்தை 1899 நவம்பர் 16இல் கன்சாஸ் சிட்டியில் ஆற்றினார். உடல்நிலை குன்றியதால் வீடு திரும்பினார். 1899 டிசம்பர் 22இல், 62ஆவது வயதில், குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த டுவைட் காலாமானார்.

இவரது மரணத்திற்குப் பத்தாண்டுகளுக்குப் பின், சிக்காகோ அவென்யூ தேவாலயம் மூடி தேவாலயம் என்றும், சிக்காகோ வேதாகம நிறுவனம் மூடி வேதாகம நிறுவனம் என்றும் பெயர்மாற்றம் செய்யப்பட்டன. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டுவைட் டி. ஐசனாவர் மூடியின் பெயரால் பெயரிடப்பட்டவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hayford, Jack W.; Moore, S. David (June 27, 2009). The Charismatic Century: The Enduring Impact of the Azusa Street Revival (in ஆங்கிலம்). FaithWords. ISBN 978-0-446-56235-5. Evangelist D.L. Moody was a proponent of the Keswick movement along with others, including Hannah Whitall Smith, whose book A Christian's Secret of a Happy Life is still read today by thousands. R.A. Torrey, an associate of Moody whose influence was rapidly increasing, championed Keswick's ideals and utilized the term "Baptism of the Holy Spirit" in reference to the experience.
  2. Johnson, George (2011). What Will A Man Give In Exchange For His Soul?. Xlibris Corporation. pp. 113–115. ISBN 978-1-4653-8098-2.
  3. Johnson, George D. (October 26, 2011). What Will A Man Give In Exchange For His Soul?. Xlibris Corporation. ISBN 978-1-4653-8098-2.
  4. Johnson, George D. (26 October 2011). What Will A Man Give In Exchange For His Soul?. Xlibris. ISBN 978-1-4653-8098-2.
  5. Erwin Fahlbusch, Geoffrey William Bromiley, The Encyclopedia of Christianity, Volume 3, Wm. B. Eerdmans Publishing, USA, 2003, p. 641
  6. Billy Graham Center Archives. "Select List of Events From Moody Church History". Records of The Moody Church - Collection 330. Wheaton, IL: Wheaton College. Archived from the original on March 14, 2016. Retrieved April 5, 2016.
  7. OBrien, Glen (June 1, 2015). Christian Worship: A Theological and Historical Introduction. Wipf and Stock Publishers. ISBN 978-1-4982-3135-0.
  8. Donald W. Dayton, Discovering an Evangelical Heritage (New York: Harper & Row, 1976), 134.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dwight Lyman Moody
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
மின்னணு சேகரிப்புகள்
பிற இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டுவைட்_எல்._மூடி&oldid=4575501" இலிருந்து மீள்விக்கப்பட்டது