டுயூக்கர் மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Eugnathostomata
டுயூக்கர்
Duikers
புதைப்படிவ காலம்:Late Miocene to present
Red forest duiker, Cephalophus natalensis
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Cephalophinae

Blyth, 1863
Genera

Cephalophus
Philantomba
சாம்பல் டுயூக்கர்

டுயூக்கர் மான் (Duiker) என்பது சகாரா கீழமை ஆபிரிக்காவைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பழுப்பு நிற மறிமான் ஆகும். இவை மிகுதியாக மரங்கள் நிறைந்த பகுதிகளில் காணப்படுகின்றன. இதில் தற்போதுள்ள 22 இனங்கள், சில சமயங்களில் மற்ற இனங்களின் கிளையினங்களாகக் கருதப்படும் மூன்று இனங்கள் உட்பட, துணைக் குடும்பமான செபலோபினே அல்லது செபலோபினியை சேர்ந்தவையாக உள்ளன.

வகைப்பிரித்தல்[தொகு]

Bushbuck

Sitatunga

Royal antelope

Klipspringer

Kirk's dik-dik

சாம்பல் டுயூக்கர்

Abbott's duiker

மஞ்சள் முதுகு டுயூக்கர்

Jentink's duiker

Bay duiker

Zebra duiker

Aders's duiker

Red-flanked duiker

Black-fronted duiker

Harvey's duiker

Red forest duiker

White-bellied duiker

Black duiker

Ogilby's duiker

Peters's duiker

Blue duiker

Maxwell's duiker

Cladogram of the subfamily Cephalophinae (duikers) and relationship with Tragelaphus, based on Johnston et al. 2012

சொற்பிறப்பியல்[தொகு]

"டுய்க்கர்" என்ற பெயரானது ஆப்ரிக்கான சொல்லான டுயிக் அல்லது இடச்சு டியூக்கனில் இருந்து வந்தது - இரண்டும் "மூழ்கு" என்று பொருள்படும்.[1] இது இந்த விலங்குகள் தங்களை மறைத்துக் கொள்வதற்காக தாவரங்களில் அடிக்கடி மறைந்து கொள்வதைக் குறிக்கிறது.

விளக்கம்[தொகு]

எலும்புக்கூடு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள, நீல டுயூக்கரின் எலும்புக்கூடு

டுயூக்கர்களின் வாழ்விடத்தின் அடிப்படையில் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவை காட்டு டுயூக்கர் மற்றும் புதர் டுயூக்கர் என்பனவாகும். அனைத்து காட்டு டுயூக்கர் இனங்களும் சகாரா கீழமை ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில் வாழ்கின்றன. அதே நேரத்தில் அறியப்பட்ட ஒரே புதர் டுயூக்கரான சாம்பல் பொது டுயூக்கர் சவன்னாக்களை இருப்பிடமாக கொண்டுள்ளன. டுயூக்கர்கள் மிகவும் பயந்த சுபாவமுள்ளவை. சிறு ஒலி கேட்டால் கூட ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து புதர்களுக்குள் மறைந்து கொள்ளும்.

இவற்றின் அரிதான எண்ணிக்கைக் காரணமாக, டுயூக்கர்களைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காட்டு மண்டலங்களில், மக்கள் தங்களுக்கு தேவைப்படும் தோல், இறைச்சி, கொம்புகளுக்காக டுயூக்கர்களை வேட்டையாடுகிறார்கள்.[2] சாதாரண டுயூக்கர் மற்றும் மிகச்சிறிய நீல டுயூக்கரைத் தவிர்த்து, அனைத்து வகையான டுயூக்கர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து வருகின்றன. குறிப்பாக ஜென்டிங்க்ஸ் மற்றும் அபோட் டியூக்கர்ஸ் போன்ற பெரிய டுயூக்கர் இனங்கள், இப்போது அழிந்துவரும் விலங்குகளின் பட்டியலான செம்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.[3]

உடற்கூறியல்[தொகு]

டுயூக்கர்கள் 3-கிலோகிராம் (6+12-pound) வரையும் இருக்கும். நீல டுயூக்கர் 3.5–9 கிலோகிராம் வரையும், மஞ்சள்-முதுகு டுயூக்கர் 60–80 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும்.[2] காட்டு டுயூக்கர் மான்கள் மெலிந்த கால்களையும், குள்ள உருவமும், பின் தூக்கிய முதுகும் கொண்டவை. இவை மிகக் குட்டையான கொம்புகளுடன், அடர்ந்த மழைக்காடுகளில் தடையின்றி செல்லவும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது புதர்களுக்குள் விரைந்து நுழைந்து கொள்ளவும் ஏற்ற உடலமைப்பைக் கொண்டுள்ளன.[4] பொதுவான சாம்பல் நிற டுயூக்கர் மான்கள் சவன்னாக்கள் போன்ற திறந்த வெளி பகுதிகளில் வசிப்பதால், அவை நீண்ட கால்களும், செங்குத்து கொம்புகளைக் கொண்டுள்ளதாக இருக்கும். இந்த உடலமைப்பால் இவை விரைந்து நீண்ட தொலைவுக்கு ஓட இயலுவதாக உள்ளன. டுயூக்கர்களின் கண்களுக்கு கிழே நன்கு வளர்ந்த சுரப்பிகள் அமைந்துள்ளன. டுயூக்கர்களின் குளம்புகளில் வாசனையை வெளிப்படுத்தும் மிதி சுரப்பிகள் இருக்கின்றன.[4] ஆண் மான்கள் தங்கள் பிரதேசங்களைக் குறிக்க இந்தச் சுரப்புகளைப் பயன்படுத்துகின்றன.

நடத்தை[தொகு]

உணவுமுறை[தொகு]

டுயூக்கர்கள் முதன்மையாக இலைகள், தளிர்கள், வித்துகள், பழங்கள், மொட்டுகள், பட்டைகள் போன்றவற்றை உண்கின்றன. மேலும் இவை அடிக்கடி பறவைகள் அல்லது குரங்குகள் கூட்டத்தைப் பின்தொடர்ந்து, அவை கைவிடும் பழங்களை தங்கள் உணவாக பயன்படுத்திக் கொள்கிறன. இவை தங்கள் உணவுடன் இறைச்சியுடன் சேர்த்துக் கொள்கிறன; டுக்கர்கள் அவ்வப்போது பூச்சிகள் மற்றும் அழுகுடல்களை உட்கொள்கின்றன. மேலும் கொறித்துண்ணிகள் அல்லது சிறிய பறவைகளைப் பிடித்து அவற்றையும் கூட தங்களுக்கான உணவின் ஒரு பகுதியாக்கிக் கொள்கின்றன. உணவு ஆதாரங்களைத் தேடி டுயூக்கர்கள் பல்வேறு இடங்களில் பரவுகின்றன. இவை பரந்த அளவிலான தாவரங்களை உண்ணும் அதே வேளையில், மிகவும் ஊட்டச்சத்துள்ள தாவரத்தின் குறிப்பிட்ட பகுதிகளையே உண்ணும். எனவே, நல்ல உணவு கிடைக்க, இவை தங்கள் பிரதேசத்தை நன்கு அறிந்திருக்க வேண்டுவதும், குறிப்பிட்ட தாவரங்களின் புவியியல் மற்றும் பரவலை முழுமையாக அறிந்திருக்க வேண்டுவதும் அவசியம்.[4] ஆனால் மனித குடியிருப்புகள் மற்றும் காடழிப்புகளால் உருவாக்கப்பட்ட புதுமையான சூழல்களுக்கு டூயூகர்கள் பழகுவது எளிதானதாக இல்லை.

சிறிய இனங்கள், எடுத்துக்காட்டாக, நீல நிற டுயூக்கர்கள், பொதுவாக பல்வேறு விதைகளை சாப்பிட முனைகின்றன. அதே நேரத்தில் பெரிய இனங்கள் பெரிய பழங்களை அதிகம் சாப்பிடுகின்றன.[2] நீல நிற டுயூக்கர்கள் மிகவும் சிறியதாக இருப்பதால், அவை "சிறிய, உயர்தர உணவுப் பொருட்களை செரிப்பதில் மிகுந்த ஆற்றல் மிக்கவை". டுயூக்கர்கள் அவை உண்ணும் உணவுகளில் இருந்து தேவைப்படும் தண்ணீர் சத்தைப் பெறுவதால், இவை பொதுவாக நீரைக் குடிப்பதில்லை. மேலும் "தண்ணீரற்ற இடங்களிலும் இவற்றைக் காணலாம்".[5][6]

செயல்பாட்டு முறைகள்[தொகு]

டுயூகர்கள் பகலாடியாகவோ, இரவாடியாகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம். பெரும்பாலான உணவுப் பொருட்கள் பகலில் கிடைப்பதால், பெரும்பாலான டுயூக்கர்களை பரிணாமத்தில் பகலாடிகளாக மாற்றியுள்ளன. டுயூக்கர்களின் உடல் அளவு மற்றும் உறக்க முறைக்கு இடையே தொடர்பு உள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான டுயூக்கர்கள் பகல் நேரத்தில் அதிக செயல்படுபவையாகவும், உணவைத் தேடுபவையாகவும் உள்ள நிலையில், பெரிய டுக்கர்கள் இரவில் மிகவும் சுறுசுறுப்பானவையாக இருக்கின்றன.[2] இதில் ஒரு விதிவிலக்காக பெரிய இனமான மஞ்சள்-முதுகு டுயூக்கரானது இரவும் பகலும் செயல்படுவதாக இருக்கும். <ref name="Newing"

குறிப்புகள்[தொகு]

  1. [Merriam-Webster Dictionary] Duiker
  2. 2.0 2.1 2.2 2.3 Newing 2001.
  3. IUCN Red List.
  4. 4.0 4.1 4.2 Jarman 1974.
  5. Keymer 1969.
  6. Lydekker 1926.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டுயூக்கர்_மான்&oldid=3930542" இலிருந்து மீள்விக்கப்பட்டது