டும் டும் டும் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டும் டும் டும்
வகை
இயக்கம்பிரதாப்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஆனந்த்
சாய்ராம்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்வாட்இஃப் புரொடக்‌ஷன்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைகலைஞர் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்5 ஆகத்து 2019 (2019-08-05) –
ஒளிபரப்பில்

டும் டும் டும் என்பது கலைஞர் தொலைக்காட்சியில் 5 ஆகத்து 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் மற்றும் குடும்ப காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடரை பிரதாப் என்ப்பவர் இயக்க[1], நாயாகியாக விஜயலட்சுமி[2] நடிக்க இவருக்கு ஜோடியாக புதுமுக விளம்பர நடிகர் மைக்கேல் நாயகனாக நடிக்கின்றார்.[3]

கதைச்சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை கிராமத்தில் சமுதாயத்தில் சமமான அந்தஸ்துள்ள இரு பணக்கார குடும்பங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறையில் காதல் திருமணத்தால் நட்பாக பழகி வந்த இரு குடும்பதினர் பிரிவதுடன் இரண்டாக பிளக்கிறது. அடிக்கடி இவர்களிடையே நடக்கும் பிரச்சனைகளால் உயிரிழப்புகளும் நிகழ்ந்து அந்த ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு குடும்பத்தின் பெரியவர்கள் தங்களது குடும்பங்கள் மற்றும் ஊர் மக்களின் நலன் கருதி இரு குடும்பங்களின் ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையாமல் தடைபட, பல்வேறு பிரச்சனைகளால் திருமணம் தள்ளிப்போக, ஊர் பகை கொழுந்துவிட்டு எரிகிறது. கடைசியில் அந்த இளம் ஜோடிக்கு ’டும் டும் டும்’ நடந்ததா? பிரிந்த குடும்பங்கள் ஒன்றாக இணைந்ததா? என்பது தான் தொடரின் கதை.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shooting for a serial is quite demanding: Prathaapmani". timesofindia.indiatimes.com.
  2. "I have been waiting to do a script like this: Vijayalakshmi". timesofindia.indiatimes.com.
  3. "குடும்ப பிரச்சினையோடு, ஊர் பிரச்சினையையும் பேசும் 'டும் டும் டும்'". www.cinemainbox.com.

வெளி இணைப்புகள்[தொகு]

கலைஞர் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 7:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி டும் டும் டும்
(5 ஆகத்து 2019 - ஒளிபரப்பில்)
அடுத்த நிகழ்ச்சி
- -