உள்ளடக்கத்துக்குச் செல்

டீப்சீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டீப்சீக்
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகைமே 2023; 2 ஆண்டுகளுக்கு முன்னர் (2023-05)
நிறுவனர்(கள்)
தலைமையகம்காங்சூ, செஜியாங் மாகாணம், சீனா
முதன்மை நபர்கள்
தொழில்துறைதகவல் தொழில்நுட்பம்
உரிமையாளர்கள்ஹைபிளையர்
இணையத்தளம்deepseek.com
பதிப்பு3(v3) - பன்முறை குறிசெய்தி கணிப்பு முறைமை
அலைப்பேசியில் 'தீப்சீக்' தொழினுட்பத்தைக் காட்டும் நிகழ்படம்

டீப்சீக் (சீன மொழி: 深度求索; பின்யின்: 深shēn度dù求qiú索suǒ), ஆங்கிலம்: deepseek) என்பது காங்சூவைத் தளமாகக் கொண்ட ஒரு சீன செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் ஆகும். இது சீன ஹெட்ஜ் நிதியான ஹை-ஃப்ளையர் மூலம் நிறுவப்பட்டு ஆதரிக்கப்படுகிறது. இதன் தலைமை நிர்வாக அதிகாரி லியான் வென்ஃபெங் ஆவார்.

இது நிறுவனத்தின் பெயரில் திறந்த மூல மாதிரிகளை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம், கணிதம், குறியீட்டில் கவனம் செலுத்துகிறது.

பின்னணி

[தொகு]

ஹை-ஃப்ளையர், 2007-2008 நிதி நெருக்கடியின் போது மாணவர்களாக வர்த்தகம் செய்யத் தொடங்கிய ஜெஜியாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று பொறியாளர்களால் 2015 - ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. வர்த்தகம் செய்ய இந்த நிறுவனம் இயந்திர கற்றலைப் பயன்படுத்தியது.[1] 2019 ஆம் ஆண்டில், இது ஹை-ஃப்ளையர் செயற்கை நுண்ணறிவினை நிறுவியது, இது செயற்கை நுண்ணறிவுப் படித்தீர்வுகளுக்காகவும், அதன் அடிப்படை பயன்பாடுகள் பற்றிய ஆராய்ச்சிக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது. [2] 2021- ஆம் ஆண்டில், இதன் அனைத்து உத்திகளும் செயற்கை நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்துகின்றன, இது ரினைசன்ஸ் டெக்னாலஜியுடன் ஒப்பிடப்படுகிறது.[3]

ஏப்ரல் 2023 இல், செயற்கைப் பொது நுண்ணறிவை ஆராய்ச்சி செய்ய ஒரு புதிய சுயாதீன அமைப்பை உருவாக்குவதாக அறிவித்தது. இருப்பினும் நிதி வணிகத்திலிருந்து தொடர்பற்றதாக இருக்கும் என்றும் அறிவித்தது. [4] மே 2023 இல், நிறுவனம் டீப்சீக் என தொடங்கப்பட்டது. டீப்சீக்கின் வளர்ச்சிக்கு ஹை-ஃப்ளையர் மூலம் நிதியளிக்கப்படுகிறது.[5]

வெளியீட்டு வரலாறு

[தொகு]

நவம்பர் 2, 2023-இல், டீப்சீக் அதன் முதல் மாதிரியான டீப்சீக் குறியீடாக்கியினை வெளியிட்டது. இது திறமூலமானதாகவும் வணிக பயன்பாட்டிற்கு இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் உள்ளது. [6]

29 நவம்பர் 2023 இல், டீப்சீக்67B அளவுருக்கள் வரை அளவிடப்பட்ட பெரிய மொழி மாதிரியை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இது GPT-4 இன் செயல்திறனுடன் வெளியீட்டு நேரத்தில் கிடைக்கும் மற்ற மொழிமாதிகளுடன் போட்டியிடும் வகையில் உருவாக்கப்பட்டது. இருப்பினும் இது கணக்கீட்டு திறன் மற்றும் அளவிடுதல் ஆகியவற்றில் சவால்களை எதிர்கொண்டது. டீப்சீக் சேட் என்ற அரட்டைச் செயலியும் வெளியிடப்பட்டது. [7]

டீப்சீக்கின் எழுச்சி

[தொகு]

சனவரி 2025ல் சீனாவின் டீப்சீக் நிறுவனம் மலிவு விலையில் வழங்கும், செயற்கை நுண்ணறிவு செயலி பிற நிறுவனங்களின் செயலிகளை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கிறது.[8] இதனால் செயற்கை நுண்ணறிவு செயலிகள் வழங்கும் என்விடியா, மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டாஆகிய பெருநிறுவனங்களின் பங்குகள் சந்தையில் வீழ்ச்சி கண்டது. 27 சனவரி 2025 அன்று மட்டும் அமெரிக்கப் பங்குச் சந்தையில் என்விடியா நிறுவனம் 6,00 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்தது. [9]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Billions Going to China's Quants Takes Fight to Global Funds" (in en). Bloomberg News. 31 May 2020 இம் மூலத்தில் இருந்து 25 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220525055515/https://www.bloomberg.com/news/articles/2020-05-31/billions-flowing-to-china-s-quants-takes-fight-to-global-funds. 
  2. "Deepseek: From Hedge Fund to Frontier Model Maker". ChinaTalk (in ஆங்கிலம்). 9 December 2024. Archived from the original on 28 December 2024.
  3. McMorrow, Ryan; Olcott, Eleanor (9 June 2024). "The Chinese quant fund-turned-AI pioneer". Financial Times இம் மூலத்தில் இருந்து 17 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240717030903/https://www.ft.com/content/357f3c68-b866-4c2e-b678-0d075051a260. 
  4. Yu, Xu (17 April 2023). "[Exclusive] Chinese Quant Hedge Fund High-Flyer Won't Use AGI to Trade Stocks, MD Says". Yicai Global (in ஆங்கிலம்). Archived from the original on 31 December 2023. Retrieved 28 December 2024.
  5. McMorrow, Ryan; Olcott, Eleanor (9 June 2024). "The Chinese quant fund-turned-AI pioneer". Financial Times இம் மூலத்தில் இருந்து 17 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240717030903/https://www.ft.com/content/357f3c68-b866-4c2e-b678-0d075051a260. 
  6. Se, Ksenia (28 August 2024). "Inside DeepSeek Models". Turing Post (in ஆங்கிலம்). Archived from the original on 18 September 2024. Retrieved 28 December 2024.
  7. Sharma, Shubham (1 December 2023). "Meet DeepSeek Chat, China's latest ChatGPT rival with a 67B model". VentureBeat (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 23 December 2024. Retrieved 28 December 2024.
  8. ஒரே செயலியால் அமெரிக்காவின் ஒட்டுமொத்த செயற்கை நுண்ணறிவு துறையையும் உலுக்கிய சீன நிறுவனம்
  9. AI உலகில் புதிய சகாப்தம்: சீன செயலியின் சவாலை அமெரிக்க நிறுவனங்கள் சமாளிக்குமா?

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டீப்சீக்&oldid=4254819" இலிருந்து மீள்விக்கப்பட்டது