டீன் மார்டின்
டீன் மார்டின் என்பவர் ஒரு அமெரிக்கத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ரியோ பிராவோ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அமெரிக்காவின் ஒகாயோ மாகாணத்தில் சூன் 7, 1917 அன்று பிறந்தார்.[1][2] இவர் இத்தாலிய மூதாதையர்களைக் கொண்டிருந்தார். "த கிங் ஆப் கூல்" (The King of Cool) என்று அழைக்கப்பட்டார்.
வாழ்க்கை
[தொகு]இவர் டினோ பால் குரோசெட்டி என்ற இயற்பெயருடன் அமெரிக்காவின் ஒகாயோ மாகாணத்தில் பிறந்தார். இவாது தந்தை முடிதிருத்துபவர் ஆவார். இவரது தாய்மொழி இத்தாலிய மொழி ஆகும். ஐந்து வயதுக்குப் பின்னரே இவர் ஆங்கிலம் பேச ஆரம்பித்தார்.
உடல்நலக்குறைவு மற்றும் இறப்பு
[தொகு]மார்டினுக்கு புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டது. செப்டம்பர் 1993ஆம் ஆண்டு ஆயுளை நீட்டிக்க அறுவை சிகிச்சை தேவைப்படும் என்று மருத்துவமனை கூறியபோது மார்டின் அதற்கு மறுத்துவிட்டார். 1995ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பொதுவாழ்க்கையில் இருந்து மார்டின் விலகினார். 1995ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று 78 வயதில் இறந்தார். தன் தாய் இறந்து 29 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாள் கிட்டத்தட்ட அதே நேரத்திற்கு இவரும் இறந்தார்.[3]
உசாத்துணை
[தொகு]- ↑ mike says (July 23, 2009). "Dean Martin's Diva Daughter: Elvis Called My Dad 'The King of Cool'". Blog.blogtalkradio.com. Archived from the original on October 2, 2011. பார்க்கப்பட்ட நாள் November 4, 2012.
- ↑ Szklarski, Cassandra (August 14, 2007). "Dean Martin 'just a golfer' to his kids". Toronto Star. Canadian Press. https://www.thestar.com/entertainment/article/245966#survey.
- ↑ Holden, Stephen (December 26, 1995). Dean Martin, Pop Crooner And Comic Actor, Dies at 78, The New York Times. December 26, 1995.