உள்ளடக்கத்துக்குச் செல்

டீன் டைட்டன்ஸ் கோ டு தி மூவிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டீன் டைட்டன்ஸ் கோ டு தி மூவிஸ் 2018 ம் ஆண்டு வெளிவந்த அசைவூட்ட நகைச்சுவை திரைப்படம் ஆகும்[1],டீன் டைட்டன்ஸ் கோ என்ற அசைவூட்ட நகைச்சுவை தொலைக்காட்சி தொடரை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது[2] .ஜூலை 27 2018 அன்று இந்த திரைப்படம் வெளிவந்தது.

கதை சுருக்கம்

[தொகு]

ராபின் மற்றும் அவருடைய சிறப்பு சக்திகள் உள்ள டீன் டைட்டன்ஸ் என்ற கதாநாயர்களின் குழுவினர் நகரத்தில் அவர்களுக்கென ஒரு திரைப்படம் இல்லாமல் இருப்பதாக ஜஸ்டிஸ் லீக் குழுவினரால் சொல்லப்பட்ட பின்னர் அவர்களுக்கென ஒரு திரைப்படம் உருவாக்கபட வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கென ஒரு வலிமையான எதிரியை உருவாக்கினால் ஒரு திரைப்படம் உருவாக்க வாய்ப்பு கிடைக்கும் என குழுவினர்கள் ராபினுக்கு அறிவுறுத்தவும் ஸ்லேட் என்ற வில்லனை தோற்கடிக்க நினைக்கின்றனர், ஆரம்ப முயற்சிகள் தோற்றுப்போனாலும் ஒரு கட்டத்தில் வில்லனை தடுத்து ஸ்லேட்டை பிடிக்கின்றனர், ஸ்லேட் பொதுவாக ஒரு கதாநாயகனாக இருந்தால் அவரை உடனடியாக பிடிக்க கூடாது என்றும் விட்டுவிட்டு அடுத்ததாக அவருடைய திட்டங்களை கண்டறிந்து தடுப்பதுதான் சிறந்தது என்று சொல்ல ராபின் விட்டுவிடுகிறார். அடுத்தநாள் அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் இந்த வில்லனை தடுத்த முயற்சியால் தயாரிப்பாளர் ஜெட் வில்சனிடம் இருந்து திரைப்பட வாய்ப்பு கிடைக்கிறது, இருந்தாலும் அவர் ராபினை அவருடைய குழுவில் இருந்து விலக சொல்லும்போது ராபின் அவருக்கென ஒரு திரைப்படம் உருவாக வேண்டுமென்று ஆசைப்பட்டு குழுவில் இருந்து வெளியேறுகிறார். ஆனால் ஜெட் வில்சன் வேறு எவருமல்ல ஸ்லேட் என்று ராபினுக்கு புரியும்போது ஸ்லேட் அனைவரது மனதையும் கட்டுப்படுத்தும் ஒரு இயந்திரத்தை செயல்படுத்தி சூப்பர்மேன், பேட்மேன் போன்ற சக்திவாய்ந்த கதாநாயகர்களுடன் ராபினின் குழுவினருடன் மோதுகிறார் இறுதியில் பெருமுயற்சிக்கு பின்னர் ராபின் அவருடைய குழுவினருடன் ஸ்லேட்டை தோற்கடிக்கின்றனர்.

வசூல்

[தொகு]

மில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும்  மில்லியன் டாலர்கள் வசூல் செய்தது.[3]

விமர்சனம்

[தொகு]

ரோட்டேன் டொமாடோஸ் திரைப்பட மதிப்புரை இணையதளம் இந்த நகைச்சுவை திரைப்படத்துக்கு 91 மதிப்பெண்கள் கொடுத்துள்ளது. 7.1/10 புள்ளிகள் கொடுத்துள்ளது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Teen Titans Go! To the Movies", Wikipedia (in ஆங்கிலம்), 2019-03-12, retrieved 2019-03-20
  2. Teen Titans Go!, retrieved 2019-03-20
  3. https://www.boxofficemojo.com/movies/?id=wbanimation62018.htm
  4. Teen Titans Go! To the Movies (2018) (in ஆங்கிலம்), retrieved 2019-03-20