டீன் ஜோன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டீன் ஜோன்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டீன் மெர்வின் ஜோன்ஸ்
பிறப்புமார்ச்சு 24, 1961(1961-03-24)
கோபர்க், விக்டோரியா, ஆத்திரேலியா
இறப்பு24 செப்டம்பர் 2020(2020-09-24) (அகவை 59)
மும்பை, இந்தியா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 324)16 மார்ச் 1984 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு13 செப்டம்பர் 1992 எ இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 79)30 சனவரி 1984 எ பாக்கித்தான்
கடைசி ஒநாப6 ஏப்ரல் 1994 எ தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1981–1998விக்டோரியா
1992டர்காம்
1996–1997டெர்பிசயர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒபது முதது ப அ
ஆட்டங்கள் 52 164 245 285
ஓட்டங்கள் 3,631 6,068 19,188 10,936
மட்டையாட்ட சராசரி 46.55 44.61 51.85 46.93
100கள்/50கள் 11/14 7/46 55/88 19/72
அதியுயர் ஓட்டம் 216 145 324* 145
வீசிய பந்துகள் 198 106 2,710 802
வீழ்த்தல்கள் 1 3 27 23
பந்துவீச்சு சராசரி 64.00 27.00 57.22 30.69
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/5 2/34 5/112 2/0
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
34/– 54/– 185/– 114/–
மூலம்: CricketArchive, 26 சனவரி 2009

டீன் மெர்வின் ஜோன்ஸ் (Dean Mervyn Jones, 24 மார்ச், 1961 - 24 செப்டம்பர், 2020) ஓர் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார். இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். வலதுகை நேர்ச் சுழல் வீச்சாளரான இவர், 52 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 3631 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக 216 ஓட்டங்களை எடுத்துள்ளார் மற்றும் பந்துவீச்சில் 1 இழப்பினைக் கைப்பற்றியுள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி 64.00 ஆகும். 164 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 6068 ஓட்டங்களை 44.61 எனும் சராசரியில் எடுத்துள்ள இவரது அதிகபட்ச ஓட்டம் 165 எடுத்தது ஆகும். பந்துவீச்சில் 3 இழப்புகளைக் கைப்பற்றியுள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி 27.00 ஆகும். மேலும் இவர் 245 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 19188 ஓட்டங்களையும், 285 பட்டியல் அ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த மட்டையாளராகவும், சிறந்த களத்தடுப்பாளராகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார். 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும், இவர் உலகின் சிறந்த ஒருநாள் மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். 2019 ஆம் ஆண்டில் ஜோன்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார்.[1]

சர்வதேச வாழ்க்கை[தொகு]

கிரஹாம் யல்லோப் காயம் காரணமாக நாடு திரும்ப வேண்டியதையடுத்து 1984 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ஜோன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் விளையாடும் பதினொரு பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்படவில்லை, ஆனால் ஸ்டீவ் ஸ்மித் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் தேர்வானார். இந்தப் போட்டிக்கு முன்பு நல்ல உடல்நலத்தில் இல்லாது இருந்த போதும் தனது அறிமுகப் போட்டியில் இவர் 48 ஓட்டங்களை எடுத்தார். இதுவே தனது சிறந்த போட்டி என இவர் குறிப்பிட்டார்.[2] 1984 மற்றும் 1992க்கு இடையில், ஜோன்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக, 52 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இதில் 11 நூறுகளை எடுத்துள்ளார்.

பயிற்சியாளராக துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

பிப்ரவரி 2016 இல், பாக்கித்தான் சூப்பர் லீக்கில் 2016 இல் ஜோன்ஸ் இஸ்லாமாபாத் யுனைடெட் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். இவரின் தலைமையிலான இந்த அணி பிப்ரவரி 2016இல் முதல் பாக்கித்தான் சூப்பர் லீக்கில் பட்டத்தை வென்றனர்.

அக்டோபர் 2017இல், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) ஹாங்காங் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் கண்டங்களுக்கு இடையிலான கோப்பைப் போட்டிக்கான இடைக்கால தலைமை பயிற்சியாளராக டீன் ஜோன்ஸை நியமித்தது.[3]

மார்ச் 2018இல், ஜோன்ஸ் மூன்றாவது பாக்கித்தான் சூப்பர் லீக் பருவத்தில், இஸ்லாமாபாத் யுனைடெட் துடுப்பாட்ட அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். மார்ச் 2018இல் அவர்கள் இரண்டாவது முறையாக பாக்கித்தான் சூப்பர் லீக் பட்டத்தை வென்றனர்.[4]

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 5 வது பதிப்பிற்கு மிக்கி ஆர்தருக்கு பதிலாக ஜோன்ஸ் 2019 நவம்பரில் கராச்சி கிங்ஸ் துடுப்பாட்ட அணியின் தலைமை பயிற்சியாளராக ஆனார்.

இறப்பு[தொகு]

ஜோன்ஸ் 2020 செப்டம்பர் 24 அன்று மாரடைப்பு காரணமாக மும்பையில் இறந்தார். இவர் இறக்கும் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிற்கான, இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) வர்ணனைக் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார்.[5][6]

குறிப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டீன்_ஜோன்ஸ்&oldid=3038355" இருந்து மீள்விக்கப்பட்டது