டீன் எல்கார்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | Dean Elgar | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | Deano | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.73 m (5 அடி 8 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 315) | நவம்பர் 30 2012 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சனவரி 2 2015 எ. மேற்கிந்தியத்தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 104) | ஆகஸ்ட் 24 2012 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | செப்டம்பர் 5 2012 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 21 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2006 | Free State | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007-2013 | Knights (squad no. 64) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013 | Somerset | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014- | Titans | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, சனவரி 6 2015 |
டீன் எல்கார் (Dean Elgar, பிறப்பு: சூன் 17 1987), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர் மற்றும் முன்னாள் தேர்வுத் துடுப்பாட்ட தலைவர் ஆவார். இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ள்ளார். இடதுகை மட்டையாளரான இவர் துவக்கவீரர் ஆவார். இடதுகை சுழற்பந்து வீச்சாளராகவும் செயல்படுகிறார்.
2006 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற 19 ஆவது வயதிர்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் நார்தன்ஸ் துடுபாட்ட அணி மற்றும் டைட்டன்ஸ் துடுப்பாட்ட அணிகளுக்காக விளைஅயாடி வருகிறார். ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஆப்பிரிக்க இருபது20 போட்டித் தொடரில் நார்தன்ஸ் அணிக்காக விளையாடினார்.[1]
சர்வதேச போட்டிகள்
[தொகு]ஆரம்பகாலம்
[தொகு]2012 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் இவர் இடம்பெற்றார். ஆனால் காயம் ஏற்பட்டதனால் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவர் அறிமுகமானார். ஆனால் இந்தப் போட்டி மழையால் தடைசெய்யப்பட்டது. பின் இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடிய இவர் 15 ஓட்டங்கள் எடுத்து கிரேம் சுவான் பந்துவீச்சில் பவுல்டு ஆனார். பின் பந்துவீச்சில் தன்னுடைய முதல் ஓவரில் மூன்றாவதாக வீசிய பந்தில் கிரய்க் கீச்வெட்டரின் இலக்கினைக் கைப்பற்றினார். மேலும் இந்தப் போட்டியில் ஜொனாதன் ட்ரொட் மற்றும் இயோன் மோர்கன் ஆகியோரது இலக்கினை கேட்ச் பிடித்து வீழ்த்தினார்.
நவம்பர் 30, 2012 ஆம் ஆண்டில்ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் ரன்கள் எடுக்கவில்லை. பின் இரண்டாவது ஆட்டப் பகுதியிலும் ரன்கள் எடுக்கவில்லைசனவரி 12, 2013 இல் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். பின் கிரயெம் சிமித் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து துவக்கவீரராக களம் இறங்குகிறார்.
சூலை 16, 2014 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில்103 ஓட்டங்கள் எடுத்தார். பின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 121 ஓட்டங்கள் எடுத்தார். இவர் தேர்வுத் துடுப்பாட்டங்களில் எடுத்த பெரும்பானமையான ஓட்டங்களை இந்த மைதானத்தி தான் இவர் எடுத்துள்ளார்.
துவக்க வீரராக
[தொகு]டிசம்பர் 25, 2015 இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான அறிமுகப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 118* ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நூறு அடித்த இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னதாக கேரி கிர்ஸ்டன் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்.[2]
நவம்ப்ர் 5, 2016 இல் பெர்த்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரின் முதல் போட்டியில் இவர் 127 ஓட்டங்கள் எடுத்தார்..[3][4] பின் ஜே பி டுமினியுடன் இணைந்து 250 ஓட்டங்கள் சேர்த்தார். இதன்மூலம் பெர்த் மைதானத்தில் தென்னாப்பிரிக்க இணையின் அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையைப் படைத்தனர். மேலும் சர்வதேச அளவில் மூன்றாவது அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும். மேலும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது அதிகபட்ச இணையின் ஓட்டம் எனும் சாதனையைப் படைத்தனர்
சான்றுகள்
[தொகு]- ↑ Northerns Squad / Players – ESPNcricinfo. Retrieved 31 August 2015.
- ↑ "Elgar carries bat but Moeen spins England to lead". ESPNcricinfo (ESPN Sports Media). 28 December 2015. http://www.espncricinfo.com/south-africa-v-england-2015-16/content/story/955955.html. பார்த்த நாள்: 28 December 2015.
- ↑ "Duminy, Elgar tons set Australia huge target". ESPNcricinfo. 5 November 2016. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.
- ↑ "Twin centuries cap memorable return". ESPNcricinfo. 5 November 2016. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]டீன் எல்கார் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி மார்ச் 5 2014.
- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: டீன் எல்கார்
- Dean Elgar பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்'s profile page on Wisden
- Player Profile: டீன் எல்கார் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து