டீன்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டீன்குமார் இலங்கைத் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், நாடக இயக்குனர் ஆவார்.

நாடகங்களில்[தொகு]

டீன்குமார் ஆரம்பத்தில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர். முதன் முதலில் 1965 ஆம் ஆண்டில் கலையும் கண்ணீரும் என்ற நாடகத்தில் நடித்தார்.[1] அடுத்து தினகரன் நாடக விழாவில் மனித தர்மம் என்ற நாடகத்தை இயக்கி மேடையேற்றினார். பின்னர் அக்கினிப் பூக்கள், ஒரு மனிதன் இரு உலகம், ஆகிய நாடகங்களை இயக்கி நடித்தார்.[1]

திரைப்படங்களில்[தொகு]

1975 ஆம் ஆண்டில் வி. பி. கணேசன் தயாரித்த புதிய காற்று திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். டீன்குமார் வில்லனாகத் தோன்றிய இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.[1] அதன் பின்னர் தென்றலும் புயலும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் தெய்வம் தந்த வீடு, நெஞ்சுக்கு நீதி ஆகிய திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக அவள் ஒரு ஜீவநதி படத்தில் நடித்தார்.[1]

தமிழ் தவிர சுது ஐயா, ஒந்தட்ட ஒந்தாய், தங்க கொல்லோ ஆகிய சிங்களத் திரைப்படங்களிலும் இவர் நடித்திருந்தார்.[1]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 தம்பிஐயா தேவதாஸ். "இலங்கை சினிமாவை வளர்த்தவர்கள்". வீரகேசரி. 30 ஆகத்து 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டீன்குமார்&oldid=3281950" இலிருந்து மீள்விக்கப்பட்டது