டீஜே அருணாச்சலம்
டீஜே அருணாசலம் | |
|---|---|
| பிறப்பு | Tejeenthan Arunasalam 6 சனவரி 1994 நார்தோல்ட், இலண்டன் ஈலிங் பெருநகரம், இங்கிலாந்து |
| மற்ற பெயர்கள் | டீஜே |
| பணி | நடிகர், பின்னணிப் பாடகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2016–தற்போது |
டீஜே அருணாசலம் (Teejay Arunasalam) என்பவர் ஒரு பிரித்தானிய பின்னணி பாடகரும், நடிகரும் ஆவார். இவர் இந்தியத் திரைப்படங்களில், குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தனுசுடன் இணைந்து அசுரன் (2019) படத்தில் நடித்து நடிகராக அறிமுகமான இவர், தட்றோம் தூக்றோம் (2020) திரைப்படத்திலும், புத்தம் புது காலை விடியாதா (2022) என்ற வலைத் தொடரிலும், சிலம்பரசனுடன் பத்து தல (2023) ஆகிய படங்களிலும் குறிப்பிடத்தக்க வேடங்களில் தோன்றினார்.
தொழில்
[தொகு]டீஜே இலண்டனில் உள்ள நார்தோல்ட் பகுதியில் இலங்கைத் தமிழர் குடும்பத்தில் பிறந்தார். கருநாடக இசை வகுப்புகள் மூலமாகவும், இசை தொழில்நுட்பத்தில் ஜி.சி.எஸ்.இ தகுதியைப் பெற்றதன் மூலமாகவும் இசையில் ஆர்வம் காட்டினார். 2010களின் முற்பகுதியில் சுயாதீன தமிழ் இசைக் கோப்புகளில் பாடகராகப் பணியாற்றியதன் மூலம் ஐரோப்பிய தமிழ் புலம்பெயர்ந்தோர் மத்தியில் புகழ் பெற்றார்.[1] அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் பிரகதி குருபிரசாத் மற்றும் இங்கிலாந்தைச் ஏர்ந்த இன்னோ கெங்கா, அர்ஜுன் போன்ற பிற பாடகர்களுடன் இணைந்து இசைக் கோப்புகளில் பணியாற்றினார்.[2][3] இசைத் துறைக்கு மாறுவதற்கு முன்பு, பல்கலைக்கழகத்தில் வானூர்தி நிலையம் மற்றும் வானூர்தி நிருவாகத்தில் பட்டம் பெற்றார்.[4]
2026 ஆகத்தில் அறிமுக நடிகர்கள் மற்றும் படக் குழுவினரால் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட காதல் நாடகம்ப் படமான அம்சனா மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகப் போவதாக டீஜே அறிவித்தார். பின்னர் அந்தப் படத்திட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால் டீஜே ஒரு பின்னணிப் பாடகராக தனது வாழ்க்கையைத் தொடர சென்னையிலேயே தங்கினார்.[5] பின்னர் 2017 திசம்பரில் அறிமுக இயக்குநர் அருள் அவர்களால் தட்றோம் தூக்றோம் (2020) என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தின் தயாரிப்பு தாமதமானது. பின்னர் அது 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் டீஜேயின் இரண்டாவது திரைப்படமாக வெளியானது.[6]
வெற்றிமாறனின் அசுரன் (2019) படத்தில் தனுஷ் மற்றும் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரங்களின் மகன் வேல்முருகனாக நடித்ததற்காக விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றார்.[7] இவரது தோழியான நடிகை ஆண்ட்ரியா ஜெரெமியாவால் வெற்றிமாறனிடம் பரிந்துரைக்கப்பட்டபட்ட பின்னர் இவர் அப்படத்தில் நடித்தார். படத்தில் இவரது நடிப்புக்காக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார்.[8][9] பின்னர் இவர் பாலாஜி மோகன் இயக்கி அமேசான் பிரைமில் வெளியான புத்தம் புது காலை விடியாதா என்ற கதைக்கோவையில் இடம்பெற்ற ஒரு குறும்ப்படத்தில் தோன்றினார்.[10]
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, டீஜே பத்து தல (2022) படத்தில் பணியாற்றி வந்தார். அதில் இவர் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், கலையரசன் தலைமையிலான குழுவில் துணை வேடத்தில் தோன்றினார்.[11] இயக்குநர் ஏ. எல். விஜய் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்திலும் இவர் முன்னணி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதில் இவர் நடிகைகள் வாணி போஜன், அமிர்தா ஐயர் ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.[12]
டீஜே பெரிய திரைப்படத் திட்டங்களில் நடிகராகச் சேர்க்கப்பட்டதாக ஊடகங்களுக்கு அடிக்கடி தெரிவித்துள்ளார். இருப்பினும் பின்னர் இவர் அவற்றில் இடம்பெறவில்லை. அதில் அஜய் ஞானமுத்துவின் கோப்ரா (2022), மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: II (2023), முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான 800, கௌதம் வாசுதேவ் மேனனின் பெயரிடப்படாத படம் ஆகியவை அடங்கும்.[13]
திரைப்படவியல்
[தொகு]- நடிகராக
| ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2019 | அசுரன் | வேல்முருகன் சிவசாமி | |
| 2020 | தட்றோம் தூக்றோம் | கார்த்திக் | |
| 2022 | புத்தம் புது காலை விடியாதா | முருகன் | இணையத் தொடர்; பிரிவு: முகக்கவச முத்தம் |
| 2023 | பத்து தல | செல்வின் | |
| 2025 | பேட்கேள் | இர்ஃபான் | |
| 2025 | உசுரே | ராகவா | [14] |
| 2025 | பிரி லவ் | டெவ் | வலைத் தொடர்கள் |
| 2025 | இருள் கொண்ட வானம் | பீட்டர் | |
| 2025 | விளையத் புத்தா | மாரி | மலையாளத் திரைப்படம்; படப்பிடிப்பு |
| ஜனநாயகன் | கார்த்திக் | [15] |
- பின்னணிப் பாடகராக
| ஆண்டு | பாடல் | திரைப்படம்/ஆல்பம் | இசையமைப்பாளர் |
|---|---|---|---|
| 2013 | "முத்து முத்து, ஆசை & இன்னும் பல" | வானவில் தி குவெஸ்ட் இபி | வெர்னான் ஜி சீகிராம் & டீஜே |
| 2014 | "பொம்மை, தேன் குடிக்க & இன்னும் பலர்" | இதயம் இபி-யில் பிரமை | டீஜே |
| 2016 | "பானி பூரி" | சவாரி | விஷால் சந்திரசேகர் |
| 2017 | "வெள்ளைப் பூவே" | ஏடிகே & ஸ்ரீ ராஸ்கோல் | தேயோ |
| 2018 | "மானம் போச்சு" "ஐஏஎம்கே பார்ட்டி பாடல்" |
இருட்டு அறையில் முரட்டு குத்து | பாலமுரளி பாலு |
| 2018 | "போராளி" | டிராஃபிக் ராமசாமி | பாலமுரளி பாலு |
| 2018 | "வெடிகுண்டு பசங்க கருப்பொருள் பாடல்" | வெடிகுண்டு பசங்க | விவேக்-மெர்வின் |
| 2018 | "வாக் மீ அப் எவிரி டே" | பியார் பிரேமா காதல் | யுவன் சங்கர் ராஜா |
| 2018 | "காதல் ஒரு ஆகயம்" | இமைக்கா நொடிகள் | ஹிப்ஹாப் தமிழா |
| 2018 | "பொல்லாத பூமி" "ஏய் மினுக்கி" |
அசுரன் | ஜி. வி. பிரகாஷ் குமார் |
| 2020 | "போரேனு நீ போனா" | அன்புல்லா கில்லி | அரோள் கரோலி |
| 2021 | "கேன்டன், ஸ்னாப்சாட் & பல" | பந்தனா தொகுதி 1 இபி | ஹெம்ஸ், ஜெக்ஸ் & டீஜே |
| 2022 | "முட்டு மு2" | — | டீஜே அருணாசலம் |
| 2023 | "இமையே" | — | டீஜே அருணாசலம் |
| 2024 | "லவ் பிஜிஎம்" | — | டீஜே அருணாசலம் |
| 2024 | "உன் பெரு என்ன" | — | டீஜே அருணாசலம் |
| 2025 | 8 பாடல்கள் | "ப்ராமிஸ் இபி" | டீஜே அருணாசலம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TeeJay". Thamarai.
- ↑ "BBC Asian Network - Ashanti Omkar, The Best of British". BBC.
- ↑ "BBC Asian Network - Ashanti Omkar, TeeJay and Shriya Saran". BBC.
- ↑ "Ashanti Omkar - British Tamil Singer - TeeJay". BBC Sounds.
- ↑ "TeeJay´s Debüt in Kollywood".
- ↑ "Teejay's film as lead is based on demonetisation". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/teejays-film-as-lead-is-based-on-demonetisation/articleshow/74065063.cms.
- ↑ "Teejay: If I was able to act naturally in Asuran, it was because of Vetri Maaran sir". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/teejay-if-i-was-able-to-act-naturally-in-asuran-it-was-because-of-vetri-maaran-sir/articleshow/78448078.cms.
- ↑ "Asuran review: A violent enthralling film from Vetri—Dhanush magic combo". https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/061019/asuran-review-a-violent-enthralling-film-from-vetridhanush-magic-c.html.
- ↑ "Asuran movie review: Dhanush is terrific in this well-made revenge drama". https://indianexpress.com/article/entertainment/movie-review/asuran-movie-review-rating-dhanush-6053742/.
- ↑ "Balaji Mohan: Teejay and Gouri were apt for my characters in Putham Pudhu Kaalai Vidiyaadhaa". OTTPlay.
- ↑ "Silambarasan resumes shooting for Pathu Thala". சினிமா எக்ஸ்பிரஸ். August 2022.
- ↑ "Asuran star Teejay starts shooting for his new film - Latest Update - Tamil News". IndiaGlitz.com. 3 March 2022.
- ↑ "Asuran-fame Teejay in AR Rahman's next". சினிமா எக்ஸ்பிரஸ். 16 November 2019.
- ↑ Features, C. E. (2025-07-30). "Usurae Team Interview | Teejay Arunasalam | Janany | Jana Nayagan". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-08-06.
- ↑ "Teejay Arunasalam confirms being a part of Thalapathy 69". Cinema Express (in ஆங்கிலம்). 2025-01-08. Retrieved 2025-01-08.