டீசல் மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டீசல் மரம்
டீசல் மரத்தின் பழம்

டீசல் மரம் (Diesel Tree) ஈருறுப்பு பெயர்:(Copaifera langsdorffii), ரஷித் மரம் (Rashed Tree) மற்றும் சலாம் மரம் (Salam tree) இப்படி பலவாறாக அழைக்கப்படும் இம்மரம், பேரின தாவரவகையை சேர்ந்ததாகும் இது, வெப்பமண்டல மழைக்காடுகள் பிராந்தியங்களில் பெருமளவில் காணப்படுவதாக அறியப்படுகிறது. மேலும் இந்த மரத்தை, குபா'ய் (kupa'y), கபிஸ்மோ (cabismo), மற்றும் கோபாவ (copaúva), உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் பல பெயர்களைக் கொண்டுள்ளது.[1][2][3]

உயிரியல் விளக்கம்[தொகு]

டீசல் மரம் பொதுவாக 12 மீட்டர்கள் வரை வளரக்கூடிய நடுத்தர மரமாகும், இது வெண்ணிறப் சிருபூக்களும், எண்ணெய் வித்துக்கள் நிறைந்த பழங்கள் உடையது. இதான் கட்டை (Wood) அடர்த்தியற்று துளைபடும் தன்மையுடன் (porosity) வெற்றிட பின்னமுடைய இலகுவாக காணபடுகின்றது. மேலும், உட்புற நுண்குழாய் வெற்றிடகூட்டு பகுதிகள் எண்ணெய் நிரப்பிகளாக செயல்படுகிறது, மரத்தை எந்த பகுதியில் தட்டி அல்லது வெட்டி கொய்தாலும் எண்ணெய் கசிந்து எளிதில் சேகரிக்க முடியும். எண்ணெய் அதன் உயிர்துடிப்புள்ள உற்பத்தியாக இருந்தாலும் டீசல் மரம், வெப்ப வலயம் அல்லாத பகுதிகளில் நன்கு வளருவதில்லை, மற்றும் உயிரிடீசல் (Biodiesel) என்பது தட்பவெப்ப நிலையை சார்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டீசல்_மரம்&oldid=3610599" இருந்து மீள்விக்கப்பட்டது