டீசல் சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்னாட் வெப்ப இயக்க பொறி
டீசல் சுழற்சியின் அழுத்த- பரும விளக்க படம்

டீசல் சுழற்சி என்பது அழுத்த எரிபற்றல் முன் பின்னியக்க உந்துதண்டு உள் எரி பொறியில் பயன்படும் ஒர் வெப்பஇயக்கச் சுழற்சி ஆகும். இது 1897ஆம் ஆண்டு ருடால்ப் டீசல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு மாறாத அழுத்ததில் எரிதல் (combustion) நடைபெறுகிறது. அதாவது வெப்ப இயக்க சுழற்சியின் போது அழுத்தத்தை மாறிலியாக வைத்துக்கொண்டு எரிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சுழற்சியில் இரண்டு மாறா பரும நிலையில் வெப்பமாக்கல் நிகழ்வும் இரண்டு அகவெப்பமாறா நிலையில் பருமன் சுருங்குதல் மற்றும் விரிவடைதல் நிகழ்வும் நடைபெறுகிறது இதனை அழுத்த- பருமன் விளக்க படம் மூலம் எளிதாக புரிந்துகொள்ள இயலும்.

வழிமுறை[தொகு]

வழிமுறை 1-2 : அகவெப்பமாறா நிலையில் பருமன் அளவு சுருங்கும் நிகழ்வு
வழிமுறை 2-3 : மீளக்கூடிய மாறா அழுத்தநிலையில் வெப்பமாக்கல் நிகழ்வு
வழிமுறை 3-4 : அகவெப்பமாறா நிலையில் பருமன் அளவு விரிவடைதல் நிகழ்வு
வழிமுறை 4-1 : மீளக்கூடிய மாறா அழுத்தநிலையில் குளிர்விக்கும் நிகழ்வு[1]

இந்த வழிமுறையின் மூலமாக டீசல் வெப்ப இயக்க பொறி இயங்குகிறது. இது வெப்ப ஆற்றலை வேலை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.

Wஉள் - என்பது வாயு சுருங்குவதன் மூலமாக உந்துதண்டினால் செய்யப்பட்ட வேலை ஆற்றல்
Qஉள் - என்பது டீசல் அல்லது எரிபொருள் மூலமாக உருவாக்கப்பட்ட வெப்ப ஆற்றல்
Wவெளி - என்பது வாயு விரிவடைதன் மூலமாக உந்துதண்டினால் செய்யப்பட்ட வேலை ஆற்றல்
Qவெளி - என்பது மீதமுள்ள எரிபொருளின் வெப்ப ஆற்றல்
உள் என்பது உள்ளீட்டையும் வெளி என்பது வெளியீட்டையும் குறிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ^ Eastop & McConkey 1993, Applied Thermodynamics for Engineering Technologists, Pearson Education Limited, Fifth Edition, p.137
"https://ta.wikipedia.org/w/index.php?title=டீசல்_சுழற்சி&oldid=2957141" இலிருந்து மீள்விக்கப்பட்டது